இண்டர்நெட் இல்லாமல் பண பரிமாற்றம் செய்யும் லாவா பே சேவை அறிமுகம்

Updated On

லாவா நிறுவனம் இண்டர்நெட் இல்லாமல் பண பரிமாற்றம் செய்யும் புதிய லாவா பே சேவையை அறிமுகம் செய்துள்ளது.

இந்திய மொபைல் போன் உற்பத்தியாளரான லாவா நிறுவனம் இண்டர்நெட் வசதியின்றி பண பரிமாற்றம் செய்யும் லாவா பே சேவையை அறிமுகம் செய்துள்ளது.

இந்த செயலி லாவா ஃபீச்சர் போன் மாடல்களில் பிரீ இன்ஸ்டால் செய்யப்படும் என லாவா தெரிவித்து இருக்கிறது. இதுதவிர ஏற்கனவே மொபைல் போன் பயன்படுத்துவோர், அருகாமையில் உள்ள லாவா சர்வீஸ் சென்டர்களுக்கு சென்று புதிய செயலியை இன்ஸ்டால் செய்து கொள்ள முடியும்.

மிக எளிமையான யூசர் இன்டர்ஃபேஸ் கொண்டிருக்கும் லாவா பே செயலியில் பயனர்கள் பணம் அனுப்ப வேண்டியவரின் மொபைல் போன் நம்பர், அனுப்ப வேண்டிய தொகை மற்றும் யு.பி.ஐ. பின் அல்லது டிரான்சாக்‌ஷன் குறியீட்டை பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு செய்ததும், பணம் அனுப்பியவர் மற்றும் பெறுவோருக்கு நோட்டிஃபிகேஷன்கள் அனுப்பப்பட்டு விடும்.

பணம் அனுப்பி கொள்வது மட்டுமின்றி பயனர்கள் தங்களின் வங்கி கணக்கில் உள்ள அக்கவுண்ட் பேலண்ஸ் விவரங்களையும் செயலியில் அறிந்து கொள்ள முடியும். இவ்வாறு செய்ய பயனர்கள் தங்களுக்கு அருகாமையில் உள்ள வங்கி கிளைக்கு சென்று செயலியை கட்டமைத்துக் கொள்ள வேண்டும்.திருத்தமிழ்
© 2023 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore