இந்த வார விசேஷங்கள் 10.12.2019 முதல் 16.12.2019 வரை

Updated On

டிசம்பர் 10-ம் தேதியில் இருந்து டிசம்பர் 16-ம் தேதி வரை நடக்க உள்ள சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளை இந்த பகுதியில் பார்க்கலாம்.

10-ந்தேதி (செவ்வாய்) :

* கார்த்திகை திருநாள்.

* திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் திருக்கார்த்திகை தீபம், ரிஷப வாகனத்தில் சுவாமி வீதி உலா.
* குரங்கணி முத்துமாலையம்மன் கோவிலில் நாராயண சுவாமி வீதி வலம் வருதல்.
* சகல சிவன் கோவில்களிலும் திருக்கார்த்திகை தீபம்.
* திருப்பரங்குன்றம், சுவாமிமலை திருத்தலங்களில் முருகப்பெருமான் ரத உற்சவம்.
* கீழ்நோக்கு நாள்.

11-ந்தேதி (புதன்) :

* முகூர்த்த நாள்.
* பவுர்ணமி.
* திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் ஆலயத்தில் தெப்ப உற்சவம்.
* மன்னார்குடி ராஜகோபால சுவாமி புறப்பாடு.
* நத்தம் மாரியம்மன் கோவிலில் லட்சத் தீப காட்சி.
* அவிநாசி ஆலயத்தில் லிங்கத்திற்கு சிறப்பு அபிஷேகம்.
* கீழ்நோக்கு நாள்.

12-ந்தேதி (வியாழன்) :

* பாஞ்சராத்திர தீபம்.
* திருவண்ணாமலை அபிதகுசாம்பிகை சமேத அண்ணாமலையார் கயிலாச கிரி பிரதட்சணம். பராசக்தி அம்மன் தெப்ப உற்சவம்.
* திருப்பதி ஏழுமலையப்பன் கோவிலில் புஷ்பாங்கி சேவை.
* சுவாமிமலை முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.
* சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ராமருக்கு திருமஞ்சன சேவை.
* மேல்நோக்கு நாள்.

13-ந்தேதி (வெள்ளி) :

* வள்ளியூர் சுப்பிரமணியர் கோவிலில் தெப்ப உற்சவம்.
* திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சுப்பிரமணியர் தெப்ப உற்சவம்.
* சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்க பாவாடை தரிசனம்.
* திருவிடைமருதூர் பிரகத்குசாம்பிகை புறப்பாடு கண்டருளல்.
* திருத்தணி முருகப்பெருமான் கிளி வாகன சேவை.
* கீழ்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாளுக்கு திருமஞ்சன சேவை, மாலை ஊஞ்சல் சேவை, மாட வீதி புறப்பாடு.
* சமநோக்கு நாள்.

14-ந்தேதி (சனி) :

* சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் வரதராஜருக்கு திருமஞ்சன சேவை.
* பத்ராச்சலம் ராமபிரான் புறப்பாடு.
* மேல்நோக்கு நாள்.

15-ந்தேதி (ஞாயிறு) :

* முகூர்த்த நாள்.
* சங்கடஹர சதுர்த்தி.
* கீழ்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் சன்னிதி எதிரில் அனுமனுக்கு திருமஞ்சன சேவை.
* பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம்.
* மேல்நோக்கு நாள்.

16-ந்தேதி (திங்கள்) :

* சங்கரன்கோவில் கோமதியம்மன் கோவிலில் 1008 சங்காபிஷேகம், 1008 கலசாபிஷேகம்.
* கீழ்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் சன்னிதியில் கருடாழ்வாருக்கு திருமஞ்சன சேவை.
* திருவெண்காடு, திருக்கழுக்குன்றம், திருவாடானை, திருக்கடையூர், திருமயிலை, குன்றக்குடி ஆகிய தலங்களில் 1008 சங்காபிஷேகம்.
* திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் கொலு தர்பார் காட்சி.
* கீழ்நோக்கு நாள்.திருத்தமிழ்
© 2022 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore