இந்த வார விசேஷங்கள் 26-11-2019 முதல் 2-12-2019 வரை

Updated On

26-ந்தேதி (செவ்வாய்) :

* அமாவாசை

* திருச்சானூர் பத்மாவதி தாயார் சிறிய திருவடி சேவை.
* சுவாமிமலை முருகப்பெருமான் ஆயிர நாமாவளி கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.
* சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஆண்டாளுக்கு திருமஞ்சன சேவை.
* திருக்கண்ணபுரம் சவுரிராஜப் பெருமாள், விபீஷண ஆழ்வாருக்கு நடையழகு சேவை காண்பித்தருளல்.
* கீழ்நோக்கு நாள்.

27-ந்தேதி (புதன்) :

* திருச்சானூர் பத்மாவதி தாயார் கஜ வாகனத்தில் திருவீதி உலா.
* மதுரை தெற்கு வாசல் முகைதீன் ஆண்டவர் கொடி யேற்றம்.
* சமநோக்கு நாள்.

28-ந்தேதி (வியாழன்) :

* சந்திர தரிசனம்.
* சுவாமிமலை முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.
* திருப்பதி ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை.
* சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ராமருக்கு திருமஞ்சன சேவை.
* சமநோக்கு நாள்.

29-ந்தேதி (வெள்ளி) :

* ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் புறப்பாடு கண்டருளல்.
* ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி அம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி, பின்னர் தங்கப் பல்லக்கில் பவனி.
* சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்க பாவாடை தரிசனம்.
* கீழ்நோக்கு நாள்.

30-ந்தேதி (சனி) :

* சதுர்த்தி விரதம்.
* தேரெழுந்தூர் ஞானசம்பந்தர் புறப்பாடு கண்டருளல்.
* பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோவிலில் சிறப்பு அபிஷேகம், ஆராதனை.
* கீழ்நோக்கு நாள்.

1-ந்தேதி (ஞாயிறு) :

* முகூர்த்த நாள்.
* திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை உற்சவம் ஆரம்பம், சுவாமி காலை வெள்ளி விமானத்திலும், இரவு அதிகார நந்தி வாகனத்திலும் * பவனி. அம்பாள் அன்ன வாகனத்தில் வீதி உலா.
* திருச்சானூர் பத்மாவதி தாயார் பஞ்சமி தீர்த்தம்.
* ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய பெருமாள், உப்பிலியப்பன் கோவில் சீனிவாசப் பெருமாள் ஆகிய தலங்களில் சுவாமி புறப்பாடு.
* மேல்நோக்கு நாள்.

2-ந்தேதி (திங்கள்) :

* முகூர்த்த நாள்.
* சஷ்டி விரதம்.
* திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் கோவிலில் கார்த்திகை உற்சவம் தொடக்கம்.
* திருவண்ணாமலை அண்ணாமலையார் காலை சூரிய பிரபையிலும், இரவு இந்திர விமானத்திலும் பவனி.
* திருவெண்காடு, திருக்கழுக்குன்றம், திருவாடானை, திருக்கடவூர் ஆகிய தலங்களில் 1008 சங்காபிஷேகம்.
* திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் கொலு தர்பார் காட்சி.
* மேல்நோக்கு நாள்.



திருத்தமிழ்
© 2023 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore