சார்வரி வருட பலன்கள் – 2020-2021

Updated On

மேஷம்

அசுவனி, பரணி, கிருத்திகை1-ஆம் பாதம்

வாக்கு சாதுர்யமும், வசீகர பேச்சுத்திறனும் கொண்ட மேஷ ராசி நேயர்களே! உங்கள் அனைவருக்கும் என் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த சார்வரி வருடத்தில் பொன்னவன் என போற்றப்படும் குருபகவான் உங்கள் ராசிக்கு பாக்கிய ஸ்தானமான 9-ல் வரும் ஆனி 15 முதல் கார்த்திகை 5 வரை (30-06-2020 முதல் 20-11-2020) சஞ்சரிப்பதாலும் சர்ப்ப கிரகமான ராகு 3-ல் புரட்டாசி 7 (23.09.2020) வரை சஞ்சரிப்பதாலும் எடுக்கும் முயற்சியில் வெற்றி, தாராள தன வரவு, உங்களது குடும்ப தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும் யோகம் உண்டாகும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருந்து எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். உங்களின் உழைப்பாற்றலால் புதிய வாய்ப்புகளை பெற்று உயர்வடைவீர்கள். உடனிருப்பவர்களை அனுசரித்து நடந்து கொண்டால் எதையும் எளிதில் சாதிக்கும் ஆற்றலைப் பெறுவீர்கள். குடும்பத்தில் சுபிட்சமும் மகிழ்ச்சியும் ஏற்படும். திருமண சுபகாரியங்கள் கைகூடும். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். புத்திர வழியில் பூரிப்பும், பூர்வீகச் சொத்துகளால் அனுகூலமும் கிட்டும்.
குரு பகவான் ஆனி 15 (30-06-2020) முடியவும், அதன் பின்பு கார்த்திகை 5-ஆம் தேதி (20-11-2020) முதல் உங்கள் ராசிக்கு 10-ல் சஞ்சரிக்க இருப்பதால் பணம் கொடுக்கல்- வாங்கலில் சற்று கவனமுடன் செயல்படுவது, அதிக முதலீடு கொண்ட செயல்களில் சிந்தித்து செயல்படுவது நல்லது.
இந்த ஆண்டு முழுவதும் திருக்கணிதப்படி சனி பகவான் ஜென்ம ராசிக்கு ஜீவன ஸ்தானமான 10-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்வதால் பணவரவுக்கு குறை இருக்காது என்றாலும் தொழில் வியாபாரத்தில் எதிர் நீச்சல் போட வேண்டி இருக்கும். வேலையாட்களை அனுசரித்து சென்றால் தான் அடைய வேண்டிய இலக்கை அடைய முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு சிறப்பாக இருக்கும் என்றாலும் வேலைபளு அதிகரிக்கும். மற்றவர்கள் பணியை நீங்கள் செய்ய வேண்டிய நிலை உண்டாகும். சக நண்பர்களால் தேவையற்ற குழப்பம் உண்டாகும்.
சர்ப கிரகமான ராகு 2-லும், கேது 8-லும் வரும் புரட்டாசி 7 (23-09-2020) முதல் சஞ்சரிக்க இருப்பதால் தேவையற்ற அலைச்சல்களும் உடல் அசதியும், வயிறு சம்மந்தப்பட்ட பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் உணவு விஷயத்தில் சற்று கட்டுபாடுடன் இருப்பது நல்லது. கணவன்- மனைவி இடையே விட்டு கொடுத்து செல்வது உத்தமம். தெய்வ தரிசனங்களுக்காக பயணங்கள் மேற்கொள்வீர்கள்.

உடல் ஆரோக்கியம்

உங்களது உடல் ஆரோக்கியமானது ஆண்டின் முற்பாதியில் சிறப்பாக இருக்கும். எதிலும் சாதகமான பலன்கள் ஏற்பட்டு மன மகிழ்ச்சி நிலவும். எடுக்கும் காரியங்களில் எதிர் நீச்சல் போட்டாவது முன்னேற்றங்களை அடைவீர்கள். ஆண்டின் பிற்பாதியில் சர்ப கிரகங்கள் சாதகமற்று சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல்கள், நேரத்திற்கு சாப்பிட முடியாத நிலை, வாழ்க்கையில் எல்லாம் இருந்தும் அனுபவிக்க முடியாத சூழ்நிலை ஏற்படும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது, நேரத்திற்கு உணவு உன்பது நல்லது.

குடும்பம் பொருளாதாரம்

உங்களுக்கு ஆண்டின் முற்பாதியில் குரு, ராகு சாதகமாக சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் ஒற்றுமையும் நிலவும். சிலர் நினைத்தவரை கைபிடிப்பர். பூமி, மனை வாங்கும் யோகமும் உண்டாகும். குடும்பத் தேவைகளும் பூர்த்தியாகும். புரட்டாசி முதல் சர்பகிரகங்கள் சாதகமற்று சஞ்சரிப்பதால் உறவினர்களை அனுசரித்துச் சென்றால் மட்டுமே எதிலும் நிம்மதியுடன் செயல்பட முடியும்.

உத்தியோகம்

குரு, ராகு சாதகமாக சஞ்சரிப்பதால் ஆண்டின் முற்பாதியில் ஊதிய உயர்வுகளும் விரும்பிய இடமாற்றங்களும் கிடைக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கும் திறமைக்கேற்ற பணி அமையும். சனி 10-ல் சஞ்சரிப்பதால் உத்தியோகத்தில் வேலைபளு அதிகரிக்கும். செய்யும் பணிகளில் தடை, இடையூறு ஏற்பட்டு எந்தவொரு வேலையையும் திறம்பட செய்து முடிக்க முடியாத நிலை ஏற்படலாம் என்பதால் சகநண்பர்களை அனுசரித்து செல்வது நல்லது.

தொழில் வியாபாரம்

தொழில் வியாபாரத்தில் வருவாய் சூடு பிடித்து பொருளாதார நிலை திருப்திகரமாக இருக்கும். நல்ல வாய்ப்புகள் தேடி வரும். எடுக்கும் முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். இந்த வருடம் முழுவதும் தொழில் ஸ்தானமான 10-ஆம் வீட்டில் சனி சஞ்சரிப்பதால் போட்டி பொறாமைகள் மற்றும் மறைமுக எதிர்ப்புகள் இருக்கும் என்பதால் வேலையாட்களை அனுசரித்து செல்வது நல்லது. மற்றவர்களுக்கு முன்பணம் கொடுக்கும் விஷயத்தில் சற்று கவனத்துடன் இருப்பது உத்தமம். கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது.

பெண்கள்

குடும்பத்தில் மகிழ்ச்சி, கணவன்- மனைவியிடையே அன்னோன்னியம், திருமண சுபகாரியங்கள் கைகூடும் வாய்ப்பு, தாராள தனவரவுகளால் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும் யோகம் இவ்வாண்டு முற்பாதியல் உண்டு. இந்த ஆண்டு பிற்பாதியில் பண விவகாரங்களில் கவனமுடனிருப்பதும், ஆடம்பரச் செலவுகளைக் குறைப்பதும் உத்தமம். பிறர் விஷயங்களில் தேவையின்றி தலையீடு செய்வது, குடும்ப விஷயங்களை வெளியாட்களிடம் பகிர்ந்து கொள்வது போன்றவற்றை தவிர்க்கவும்.

கொடுக்கல்- வாங்கல்

குரு, ராகு அனுகூலமாக சஞ்சரிப்பதால் ஆண்டின் முற்பாதியில் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். கொடுத்த கடன்களும் திருப்திகரமாக வசூலாகும். ஆண்டின் பிற்பாதியில் பண விஷயத்தில் பிறருக்கு வாக்கு கொடுப்பது, முன்ஜாமீன் கொடுப்பது போன்றவற்றில் கவனத்துடன் இருப்பது நல்லது.

அரசியல்

உங்களது பொருளாதார நிலை சிறப்பாக இருந்து சமுதாயத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். சனி 10-ல் சஞ்சரிப்பதால் மறைமுக எதிர்ப்புகள் ஏற்படலாம் என்பதால் உடனிருப்பவர்களிடம் கவனமாக இருப்பது நல்லது. ஆண்டின் பிற்பாதியில் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவதும் தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பதும் நல்லது. பத்திரிக்கையாளர்களிடம் பேசும் போது பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது உத்தமம்.

விவசாயிகள்

பயிர் விளைச்சல்கள் சிறப்பாக இருந்து உங்களது அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். புழு, பூச்சிகளின் தொல்லைகளால் வீண் விரயங்கள் உண்டாகும் என்றாலும் உற்றார் உறவினர்களின் ஆதரவுகளால் எதையும் சமாளித்து விடுவீர்கள். அரசு வழியில் எதிர்பாரத்த உதவிகள் தக்க நேரத்தில் கிடைத்து மன நிம்மதி ஏற்படும். கால் நடைகளால் எதிர்பாராத வீண் செலவுகள் ஏற்படும்.

கலைஞர்கள்

குரு, ராகு சிறப்பாக சஞ்சரிப்பதால் ஆண்டின் முற்பாதியில் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். பொருளாதார நிலை சிறப்பாக இருந்து உங்களது அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். வெளியூர் வெளிநாடுகளுக்கு செல்லும் வாய்ப்புகளும் கிடைக்கும். சனி 10-ல் சஞ்சரிப்பதால் கிடைக்கும் வாய்ப்புகளை நழுவ விடாமல் பாதுகாத்துக் கொள்வது நல்லது. நிறைய போட்டி பொறாமைகள் நிலவினாலும் உங்கள் திறமையால் எதையும் சமாளிப்பீர்கள். நண்பர்களிடம் கவனம் தேவை.

மாணவ- மாணவியர்

கல்வியில் சற்று மந்த நிலை நிலவினாலும் நல்ல மதிப்பெண்களைப் பெற முடியும். தேவையற்ற நண்பர்களின் சகவாசத்தையும் வீணான பொழுது போக்குகளையும் தவிர்ப்பது நல்லது. பயணங்களில் நிதானமும் எச்சரிக்கையும் அவசியம். பெற்றோர் ஆசிரியர்களின் ஆதரவு சிறப்பாக இருக்கும். ஆண்டின் பிற்பாதியில் உணவு விஷயத்தில் சற்று கட்டுபாடுடன் இருப்பது நல்லது.

ரிஷபம்

கிருத்திகை 2,3,4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2-ஆம் பாதங்கள்

நேர்மையே குறிக்கோளாகக் கொண்டவராகவும் யாருக்கும் பயப்படாத குணம் படைத்தவராகவும் விளங்கும் ஆற்றல் கொண்ட ரிஷப ராசி நேயர்களே! உங்கள் அனைவருக்கும் என் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள். வரும் சார்வரி வருடத்தில் உங்கள் ராசிக்கு தர்மகர்மாதிபதியான சனி பகவான் திருக்கணிதப்படி இந்த ஆண்டு முழுவதும் உங்கள் ராசிக்கு பாக்கிய ஸ்தானமான 9-ஆம் வீட்டில் சஞ்சரிப்பது எல்லா வகையிலும் முன்னேற்றத்தினை ஏற்படுத்தும் அமைப்பாகும். அது மட்டுமின்றி ஆண்டு கோளான குருபகவான் ஆனி 15 (30-06-2020) முடியவும், அதன் பின்பு கார்த்திகை 5-ஆம் தேதி (20-11-2020) முதல் உங்கள் ராசிக்கு பாக்கிய ஸ்தானமான 9-ல் சஞ்சரிப்பதால் பண புழக்கம் சிறப்பாக இருக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு திருமண சுபகாரியங்கள் நடைபெறும் வாய்ப்பு உண்டாகும். நல்ல வரன்கள் தேடி வரும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி மேல் வெற்றிகளைப் பெறுவீர்கள். புத்திர பாக்கியம் அமையும். புத்திர வழியிலும் மகிழ்ச்சி தரக்கூடிய நிகழ்ச்சிகள் நடைபெறும். தொழில் வியாபாரம் செய்பவர்களும் கடந்த கால பொருட் தேக்கங்கள் விலகி எதிர்பார்த்த லாபத்தினை அடைந்து விட முடியும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் வாய்ப்பு அமையும். கூட்டாளிகளை சற்று அனுசரித்து நடந்தால் மேலும் அனுகூலமான பலன்களை அடைய முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு தங்கள் பணிகளில் சிறப்பாகச் செயல்படும் ஆற்றல், வெளியூர் பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்புகள் உண்டாகும். உயர் அதிகாரிகளின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிப்பதாக அமையும்.

சர்ப்ப கிரகமான ராகு 2-லும், கேது 8-லும் வரும் புரட்டாசி 7 (23-09-2020) வரை சஞ்சாரம் செய்வதாலும் அதன் பின்பு ஜென்ம ராசியில் ராகு, 7-ல் கேது சஞ்சாரம் செய்ய இருப்பதாலும் தேவையற்ற அலைச்சல்கள் இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் உண்டாகும். நெருங்கியவர்களை அனுசரித்து செல்வது, பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே ஒன்றும் இல்லாத விஷயத்திற்கு கூட வீண் வாக்கு வாதங்கள் ஏற்படலாம் என்பதால் பொறுமையுடன் விட்டு கொடுத்து செல்வது நல்லது. கூட்டு குடும்பத்தில் உள்ளவர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய காலமாகும். உடல் ஆரோக்கிய விஷயத்தில் கவனமுடன் இருப்பது உணவு விஷயத்தில் கட்டுப்பாடுடன் இருப்பது சிறப்பு. தெய்வ தரிசனங்களுக்காகப் பயணங்கள் செல்லும் வாய்ப்பு அமையும். இவ்வருடத்தில் குரு பகவான் ஆனி 15 முதல் கார்த்திகை 5 வரை (30-06-2020 முதல் 20-11-2020) அஷ்டம ஸ்தானமான 8-ல் சஞ்சரிக்க உள்ள காலத்தில் பொருளாதார நிலை சற்று சாதகமற்று இருக்கும் என்பதால் இக்காலத்தில் ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வது, எதிலும் சிக்கனமான செயல்படுவது நல்லது. இவ்வருடத்தில் சனி பகவான் சாதகமாக இருப்பதால் எதையும் எதிர் கொண்டு ஏற்றங்களை அடைவீர்கள்.

உடல் ஆரோக்கியம்

உங்களது உடல் ஆரோக்கியம் சற்று சாதகமாக இருக்கும். நெருங்கியவர்களால் பாதிப்புகள் ஏற்பட்டாலும் எதையும் சமாளித்து விடக்கூடிய ஆற்றலைப் பெறுவீர்கள். சர்ப்பகிரகங்கள் சாதகமற்று இருப்பதால் தேவையற்ற அலைச்சல் நேரத்திற்கு உணவு உண்ண முடியாத நிலை ஏற்படலாம் என்பதால் பொதுவாக ஆரோக்கியத்தில் அதிக அக்கறை எடுத்து கொள்வது நல்லது. தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பதன் மூலம் அலைச்சல்களை குறைத்துக் கொள்ள முடியும்.

குடும்பம் பொருளாதாரம்

சனி பாக்கிய ஸ்தானமான 9-ல் சஞ்சரிப்பதால் பொருளாதார நிலை மிகச் சிறப்பாக இருக்கும். சில நேரங்களில் நெருக்கடிகள் ஏற்பட்டாலும் எதிர்பாராத உதவிகள் கிடைத்து எதையும் சாமளிக்கும் பலம் உண்டாகும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு மண வாழ்க்கை எளிதில் அமையும். அசையாச் சொத்து வகையில் சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட்டாலும் அதன் மூலம் லாபம் கிட்டும். கணவன்- மனைவியிடையே விட்டு கொடுத்து செல்வது நல்லது. புத்திர வழியில் மகிழ்ச்சி ஏற்படும். நெருங்கியவர்களிடம் கவனமுடன் இருப்பது நல்லது.

உத்தியோகம்

உத்தியோகத்தில் பதவி உயர்வுகளையும், பாராட்டுதல்களையும் அடையும் வாய்ப்பு உண்டு. திறமைக்கேற்ற கௌரவமான நிலையினை அடைவீர்கள். பொருளாதார நிலையும் ஊதிய உயர்வுகளும் கிடைக்கும். நல்ல நிர்வாகத் திறனும் பலரை அதிகாரம் செய்யக் கூடிய ஆற்றலும் உண்டாகும். பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதைத் தவிர்த்து தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. உடல் அசதி காரணமாக உங்கள் பணியை சிறப்பாக செய்ய இடையூறுகள் உண்டாகும் என்பதால் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்து கொள்வது நல்லது.

தொழில் வியாபாரம்

சனி பகவான் 9-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்வது நல்ல அமைப்பு என்பதால் தொழில் வியாபார ரீதியாக ஏற்றமிகு பலன்களை அடைவீர்கள். புதிய வாய்ப்புகளும் தேடி வரும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகளும் கிட்டும். எந்த வித மறைமுக எதிர்ப்புகளையும் வெல்லக் கூடிய ஆற்றலும் உண்டாகும். சர்ப்ப கிரகங்கள் சாதகமற்று இருப்பதால் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் ஒரு முறைக்கு பலமுறை சிந்தித்துச் செயல்படுத்துவது நல்லது.

பெண்கள்

பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகளும் பூர்த்தியாகும். மணமாகாத கன்னியருக்கு சிறப்பான மண வாழ்க்கை அமையும். சிலருக்கு அழகான புத்திர பாக்கியம் கிடைக்கும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் வீண் வாக்கு வாதத்தால் ஒற்றுமை குறையும் சூழ்நிலை உண்டாகலாம். எந்த செயலிலும் ஒரு முறைக்கு பல முறை சிந்தித்து செயல்படுவது நல்லது.

கொடுக்கல் வாங்கல்

பணம் கொடுக்கல்- வாங்கல் உங்களுக்கு சற்று சாதகமாக இருக்கும். கமிஷன் ஏஜென்ஸி காண்டிராக்ட் போன்ற துறைகளில் தாரளமாக லாபம் கிடைக்கும். பெரிய முதலீடுகளை கொண்டு செய்யும் செயல்களில் சற்று எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. ஆண்டின் முற்பாதியில் சிறுசிறு ஏற்ற தாழ்வுகளை எதிர் கொண்டாலும் கார்த்திகை 5-ல் (20-11-2020) ஏற்படும் குரு மாற்றத்திற்குப் பிறகு உங்களது பொருளாதார நிலை மிக சிறப்பாக இருக்கும்.

அரசியல்

நீங்கள் நினைத்ததை நிறைவேற்ற முடியும். மக்கள் செல்வாக்குக்கு காரகனாகிய சனி பகவான் 9-ஆம் வீட்டில் ஆட்சி பெற்று சஞ்சரிப்பது ஒரளவுக்கு மேன்மையை உண்டாக்கும். கௌரவ பதவிகள் உங்களை தேடி வரும் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளைத் தடையின்றி காப்பாற்றி விடுவீர்கள். பணவரவுகள் சிறப்பாக இருக்கும் என்றாலும் கட்சிப் பணிக்காக எதிர்பாராத வீண் செலவுகளைச் சந்திக்க நேரிடும் என்பதால் ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வது நல்லது.

விவசாயிகள்

விவசாயிகளுக்கு உழைப்புக்கேற்ற பலன்கள் கிடைக்கும். எதிர்பார்த்த வங்கிக் கடன்களும் கிடைக்கப் பெற்று தேவைகள் பூர்த்தியாகும். பூமி, மனை, வாங்கும் வாய்ப்புகள் ஆண்டின் பிற்பாதியில் எளிதில் கைகூடும். பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் குடும்பத்தில் சுபகாரியங்களை நிறைவேற்ற முடியும். ஆடு, மாடு போன்ற கால்நடைகளால் சிறப்பான லாபம் கிட்டும். பங்காளிகளிடம் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது.

கலைஞர்கள்

இந்த ஆண்டு கலைஞர்களுக்கு அபரிமிதமான செல்வாக்கினை உண்டாக்கும் ஆண்டாக அமையும். ரசிகர்களின் ஆதரவுகள் சிறப்பாக இருக்கும். உங்களின் திறமைகளுக்கேற்ற கதாபாத்திரங்களும் கிடைக்கும். ஆண்டின் மத்தியில் பணவரவுகளில் நெருக்கடிகள் நிலவக் கூடும் என்பதால் ஆடம்பரமாக செலவுகள் செய்வதைக் குறைத்துக் கொள்வது நல்லது. ஆண்டின் பிற்பாதியில் உங்களது கனவுகள் நிறைவேறும் காலமாக இருக்கும்.

மாணவ- மாணவியர்

கல்வியில் நல்ல ஈடுபாட்டுடன் செயல்பட்டு சிறப்பான மதிப்பெண்களை பெற முடியும். பெற்றோர் ஆசிரியர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியினை உண்டாக்கும். நல்ல நண்பர்களின் நட்பு உங்களுக்கு மேலும் உற்சாகத்தை அளிக்கும். விளையாட்டுப் போட்டிகளில் கவனத்துடன் இருப்பதும் உணவு விஷயத்தில் கட்டுப்பாடுடன் இருப்பதும் நல்லது. கல்விக்காக சுற்றுலா தளங்களுக்கு செல்லும் வாய்ப்பும் கிட்டும்.

மிதுனம்

மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள்

பிறரை எளிதில் வசப்படுத்தக்கூடிய பேச்சாற்றலும், சிறந்த தெய்வ பக்தியும் கொண்ட மிதுன ராசி நேயர்களே! உங்கள் அனைவருக்கும் என் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த சார்வரி வருடத்தில் பொன்னவன் என போற்றப்படும் குருபகவான் வரும் ஆனி 15 முதல் கார்த்திகை 5 வரை (30-06-2020 முதல் 20-11-2020) 7-ஆம் வீட்டில் சஞ்சரிக்க உள்ளதால் உங்களது பொருளாதார நிலை சிறப்பாக இருந்து குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்து விட முடியும். குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்களும் கைகூடும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக் கூடிய நிகழ்ச்சிகள் நடைபெறும். கொடுத்த வாக்குறுதிகளையும் காப்பாற்ற முடியும். தொழில் வியாபாரத்தில் எதிர் நீச்சல் போட்டாவது ஏற்றமிகுந்த பலன்களை அடைவீர்கள். வேலையாட்களையும், கூட்டாளிகளையும் அனுசரித்து சென்றால் தொழிலில் சாதகமான பலனை அடைய முடியும். உத்தியோகத்தில் நல்ல வாய்ப்புகள் ஒரு புறம் கிடைத்தாலும் வேலைபளு சற்று அதிகப்படியாக இருக்கும். உடல் சோர்வு காரணமாக வேலையில் உங்கள் கவனத்தை செலுத்த முடியாத அளவிற்கு தேவையற்ற இடையூறுகள் உண்டாகும்.

திருக்கணிதப்படி இந்த ஆண்டு முழுவதும் சனி பகவான் உங்கள் ராசிக்கு அஷ்டம ஸ்தானமான 8-ல் சஞ்சரித்து அஷ்டம சனி நடப்பதால் உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவச் செலவினை உண்டாக்கும். உங்களது உடல் நலத்தில் அதிக அக்கறை எடுத்து கொள்வது, உணவு விஷயத்தில் கட்டுப்பாடுடன் இருப்பது மிகவும் நல்லது. சனி உங்கள் ராசியாதிபதி புதனுக்கு நட்பு கிரகம் என்பதால் பெரிய கெடுதல்களை ஏற்படுத்தாது.

சர்ப்ப கிரகமான ராகு ஜென்ம ராசியிலும் கேது 7-லும் வரும் புரட்டாசி 7 (23-09-2020) வரை சஞ்சாரம் செய்வதால் கணவன்- மனைவி இடையே தேவையில்லாத கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். விட்டு கொடுத்து செல்வது பேச்சில் நிதானமாக இருப்பது நல்லது. அதன் பின்பு ஏற்படும் ராகு – கேது பெயர்ச்சியால் புரட்டாசி 7 (23-09-2020) முதல் கேது 6-ல், ராகு 12-ல் சஞ்சரிக்க இருப்பதால் குடும்பத்தில் உள்ள சிறுசிறு பிரச்சினைகள் கூட முழுமையாக விலகி கணவன்- மனைவி இடையே ஒற்றுமை உண்டாகும்.

உங்கள் ராசிக்கு ஆண்டு கோளான குரு பகவான் வரும் ஆனி 15 (30-06-2020) முடியவும், அதன் பின்பு கார்த்திகை 5-ஆம் தேதி (20-11-2020) முதல் 8-ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பதால் பண விஷத்தில் சற்று சிக்கனத்துடன் இருப்பது நல்லது. குரு 8-ல் சஞ்சரிக்கும் போது சனி சேர்க்கை பெற்று சஞ்சரிக்க இருப்பதால் நீசபங்க ராஜ யோகம் ஏற்படுவதால் உங்களுக்கு எதையும் சமாளிக்கும் பலத்தை அடைவீர்கள்.

உடல் ஆரோக்கியம்

உங்களுக்கு அஷ்டம சனி நடைபெறுவதால் உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை எடுத்து கொள்வது வேலைபளுவை குறைத்து கொள்வது நல்லது. தேவையற்ற பயணங்களால் அலைச்சல், டென்ஷன் ஏற்பட்டு உடல் நிலை சோர்வடையும். ஆண்டின் முற்பாதியில் நெருங்கியவர்கள் ஏற்படுத்தக் கூடிய பிரச்சினைகளால் மனநிம்மதி குறையும். மற்றவருக்கு நல்லது செய்ய நினைத்தாலும் அது உங்களுக்கே வீண் பிரச்சினைகளை ஏற்படுத்தி விடும். பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாது இருப்பது நல்லது. ஆண்டின் பிற்பாதியில் கேது 6-ல் சஞ்சரிக்க இருப்பதால் எதையும் சமாளிக்கும் ஆற்றல் உண்டாகும்.

குடும்பம் பொருளாதாரம்

ஆண்டின் முற்பாதியில் குடும்பத்தில் ஒற்றுமைக் குறைவும் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் பிற்பாதியில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அனுலப்பலன் உண்டாகும். உற்றார் உறவினர்கள் வீண் பிரச்சினைகளை ஏற்படுத்துவார்கள் என்பதால் தேவையற்ற பேச்சுகளை குறைத்து கொள்வது நல்லது. பணவரவுகள் சரளமான நிலையில் இருக்கும் புத்திர வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய நிகழ்ச்சிகள் நடைபெறும்.

உத்தியோகம்

உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்கள் வேலையில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. எடுக்கும் பணிகளை முழுமையாக முடிக்க முடியாத சூழ்நிலை, பிறர் செய்யும் தவறுகளுக்கும் வீண் பழிகளைச் சுமக்கக் கூடிய நிலை போன்றவை ஏற்படும். தேவையற்ற அலைச்சல்களால் பணியில் நிம்மதி குறையும், ஆண்டின் முற்பாதியில் குரு சாதகமாக சஞ்சரிப்பதால் ஒரளவுக்கு கௌரவமான நிலையினை அடைவீர்கள். எதிர்பார்த்த ஊதிய உயர்வு கிட்டும். உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பும் மகிழ்ச்சியளிக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கேற்ற வேலை அமையும்.

தொழில் வியாபாரம்

தொழில் வியாபாரத்தில் சற்று கவனத்துடன் செயல்பட்டால் எதிர்பார்த்த லாபத்தை அடைய முடியும். நல்ல வாய்ப்புகள் தேடி வரும். தொழில் வியாபாரத்தில் நிறைய போட்டிகள், மறைமுக எதிர்ப்புகள் நிலவினாலும் எதையும் எதிர் கொள்ளும் பலம் உண்டாகும். கூட்டு தொழில் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது. தொழிலாளர்களால் வீண் பிரச்சினைகள் ஏற்படும் என்பதால் அவர்களை கவனத்துடன் கையாள்வது நல்லது. பெரிய முதலீடுகளை ஈடுபடுத்திச் செய்ய நினைக்கும் காரியங்களில் சற்று சிந்தித்துச் செயல்படுவது நல்லது. பயணங்களால் சற்று அலைச்சல் ஏற்படும்.

பெண்கள்

பணவரவுகள் சரளமாக இருக்கும். தடைப்பட்ட திருமண சுப காரியங்கள் ஆண்டின் மத்தியில் எளிதில் கைகூடும். எதிர்பாராத உதவிகள் கிடைத்து குடும்ப தேவைகள் பூர்த்தியாகும். அஷ்டம சனி நடைபெறுதால் உடல் ஆரோக்கியத்தில் மந்த நிலை உடல் சேர்வு ஏற்படும், வாயுத் தொல்லை, அஜீரணக் கோளாறு ஏற்படலாம் என்பதால் உணவு விஷத்தில் கவனத்துடன் இருப்பது நல்லது. ஆண்டின் முற்பாதியில் சர்ப்ப கிரகங்கள் சாதகமற்று இருப்பதால் கணவன்- மனைவியிடையே வீண் பிரச்சினை, நெருங்கியவர்களிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம் என்பதால் எதிலும் பொறுமையுடன் செயல்படுவது நல்லது.

கொடுக்கல்- வாங்கல்

இந்த ஆண்டில் குரு பகவான் 30-06-2020 முதல் 20-11-2020 வரை சமசப்தம ஸ்தானமான 7-ல் சஞ்சரிக்க உள்ள காலத்தில் பண வரவுகள் மிக சிறப்பாக இருந்து உங்கள் அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். கமிஷன் ஏஜென்ஸி, காண்டிராக்ட் போன்ற துறைகளிலும் நல்ல லாபம் கிட்டும். கொடுத்த வாக்குறுதிகளையும் காப்பாற்றி விடுவீர்கள். குரு வரும் 30-06-2020 முடியவும், அதன் பின்பு 20-11-2020 முதல் 8-ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பதால் இக்காலத்தில் பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் கவனமுடன் செயல்படுவது நல்லது. ஆண்டின் பிற்பாதியில் கேது 6-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் எதிலும் முன்னேற்றமான நிலை உண்டாகும்.

அரசியல்

அரசியல்வாதிகளுக்கு இவ்வாண்டில் ஒரளவுக்கு சாதகமான பலன்களை அடையும் வாய்ப்புகள் உண்டு. உடனிருப்பவர்களிடம் சற்று கவனமுடன் நடந்து கொள்வது நல்லது. பேச்சிலும், செயலிலும் நிதானம் தேவை. பத்திரிக்கை நண்பர்களை அனுசரித்து நடந்து கொண்டால் வீண் வதந்திகளில் இருந்து தப்பித்துக் கொள்ள முடியும். மக்களின் ஆதரவும் உங்களுக்கு சிறப்பாகக் கிட்டும்.

விவசாயிகள்

இவ்வாண்டில் வாழ்வில் ஒரளவுக்கு முன்னேற்றமும் நல்ல விளைச்சலும் கிடைக்கும். சந்தையில் விளைபொருட்களை நல்ல விலைக்கு விற்க முடியும். பூமி, மனை போன்றவற்றை வாங்கும் விஷயத்தில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. கால்நடைகளால் வீண் செலவுகள் ஏற்படும். வாய்க்கால் வரப்பு பிரச்சினைகளால் தேவையற்ற வீண் விரயங்கள் ஏற்படும். மறைமுக எதிர்ப்புகளும் அதிகரிக்கும். முடிந்த வரை முன்கோபத்தைக் குறைப்பது நல்லது.

கலைஞர்கள்

நினைத்த வாய்ப்புகளைப் பெறுவீர்கள். நிலுவையிலிருந்த பணத்தொகைகள் கைக்கு வந்து சேரும். சுக வாழ்விற்கு தேவையற்ற இடையூறு உண்டாகும். அடிக்கடி பயணங்கள் மேற்கொள்ளும் சூழ்நிலை அதன் மூலம் அலைச்சல் உண்டாகும், பொதுவாக கிடைக்கும் வாய்ப்புகளை நழுவவிடாமல் பார்த்துக் கொள்வது நல்லது. நிறைய மறைமுக எதிர்ப்புகள், கிசுகிசுக்கள் போன்றவற்றால் மனநிம்மதி குறையும். உடல் சோர்வு, நேரத்திற்கு உணவு உண்ண இடையூறு உண்டாகும்.

மாணவ- மாணவியர்

மாணவ- மாணவியருக்கு இந்த ஆண்டில் எதிர்நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெறுவீர்கள். பெற்றோர் ஆசிரியர்களின் ஆதரவு உங்களுக்கு மேலும் உற்சாகத்தினை உண்டாக்கும், நல்ல மதிப்பெண்கள் கிடைக்கும். ஆரோக்கிய குறைவால் கல்வியில் ஈடுபாடு குறையும் என்றாலும் எதையும் சமாளிக்கும் ஆற்றலை பெறுவீர்கள்.

கடகம்

புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்

நல்ல அறிவாற்றலும் கற்பனை சக்தியும் கொண்ட கடக ராசி நேயர்களே! உங்கள் அனைவருக்கும் என் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த சார்வரி வருடத்தில் பொன்னவன் என போற்றப்படும் குருபகவான் ஆனி 15 (30-06-2020) முடியவும் அதன் பின்பு கார்த்திகை 5-ஆம் தேதி (20-11-2020) முதல் 7-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் பணவரவுகள் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் திருமண சுபகாரியங்கள் நிறைவேறும். புத்திர பாக்கியம் அமையும். பணம் கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலையிருக்கும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முடியும்.

இவ்வருடம் முழுவதும் சனி பகவான் உங்கள் ராசிக்கு சமசப்தம ஸ்தானமான 7-ல் சஞ்சரிப்பது கண்ட சனி என்பதால் நெருங்கியவர்களையும், கூட்டாளிகளையும் அனுசரித்து சென்றால் அனுகூலங்களை அடைய முடியும். குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே ஒன்றும் இல்லாத விஷயத்திற்கு கூட தேவையற்ற கருத்து வேறுப்பாடுகள் ஏற்படலாம் என்பதால் விட்டு கொடுத்து செல்வது நல்லது. குடும்பத்தில் மனைவி மூலம் தேவையற்ற வீண் செலவுகள், மன நிம்மதி குறைவுகள் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபத்தை அடைந்து விடுவீர்கள். கூட்டாளிகளை அனுசரித்து செல்வது மூலம் எதையும் சமாளிக்க முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் சிறுசிறு நெருக்கடிகள் ஏற்பட்டாலும் மற்றவரை அனுசரித்து நடந்து கொண்டால் எதையும் சாதிக்க முடியும். புதிய வேலை தேடுபடுவர்கள் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும் என்றாலும் வேலைபளு சற்று அதிகமாக இருக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும், எதிலும் சற்று சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள்.

இவ்வாண்டில் சர்பகிரகங்களான கேது 6-ல் வரும் புரட்டாசி 7 (23-09-2020) வரையும், அதன் பிறகு ராகு 11-ல் சஞ்சரிக்க இருப்பது மிகவும் அற்புமதான அமைப்பு என்பதால் சகல விதத்திலும் முன்னேற்றமான பலன்களை அடைவீர்கள். சிலருக்கு அனுகூலமான பயணங்கள் ஏற்பட்டு அதன் மூலம் வாழ்வில் முன்னேற்றம் உண்டாகும், குரு பகவான் வரும் ஆனி 15 முதல் கார்த்திகை 5 வரை (30-06-2020 முதல் 20-11-2020) ருண ரோக ஸ்தானமான 6-ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பதால் இக்காலத்தில் பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருக்கும் என்பதால் எதிலும் சிக்கனமாக செயல்படுவது, ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வது நல்லது. நீங்கள் நெருங்கியவர்களை அனுசரித்து செல்வதும், எதிலும் சிந்தித்து நிதானமுடன் செயல்படுவது மூலம் தேவையற்ற பிரச்சினைகளில் இருந்து தப்பித்துக் கொள்ள முடியும்.

உடல் ஆரோக்கியம்

இந்த வருடம் முழுவதும் ஆயுள் ஆரோக்கியத்திற்கு காரகனான சனிபகவான் 7-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியம் நன்றாக இருந்தாலும் பணி சுமை அதிகமாக இருப்பதால் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த முடியாத நிலை உண்டாகும். பயணம் செய்யும் போது கவனமுடன் இருப்பது நல்லது. சர்ப்ப கிரகங்கள் சாதகமாக சஞ்சரிப்பதால் எதிலும் அனுகூலங்களை அடைய முடியும். அன்றாட பணிகளில் திறம்பட செயல்பட முடியும்.

குடும்பம் பொருளாதாரம்

சனி 7-ல் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் முடிந்த வரை பேச்சில் நிதானத்தைக் கடைபிடிப்பது முன்கோபத்தைக் குறைப்பது மிகவும் நல்லது. குரு வரும் 30-06-2020 முடியவும், அதன் பிறகு 20-11-2020 முதல் 7-ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பதால் தாராள தன வரவுகள், கடந்த கால நெருக்கடிகள் குறையும் வாய்ப்பு உண்டாகும். அசையாச் சொத்துகள் மூலமும் அனுகூலங்கள் கிட்டும். திருமண சுப காரியங்களில் இருந்த தடை விலகி தடபுடலாக நிறைவேறும். பொன், பொருள் சேரும். உற்றார் உறவினர்களை அனுசரித்து சென்றால் மகிழ்ச்சியான நிலை உண்டாக்கும்.

உத்தியோகம்

சனி 7-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் உத்தியோகஸ்தர்கள் உயரதிகாரிகளிடம் பேசும் போது நிதானத்தைக் கடைபிடிப்பதும், உடன்பணிபுரிபவர்களை அனுசரித்து நடப்பது நல்லது. சர்ப்ப கிரகங்கள் சாதகமாக சஞ்சரிப்பதால் எதையும் எதிர்கொள்ள முடியும். எதிர்பார்க்கும் உயர்பதவிகளும், ஊதிய உயர்வுகளும் கிடைக்கும் என்றாலும் வேலைபளு சற்று அதிகப்படியாக இருக்கும். திறமைகளுக்கேற்ற பாராட்டுதல்களும் தூர பயணங்களும் ஏற்படும். புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கேற்ற வேலை கிடைக்கும்.

தொழில் வியாபாரம்

தொழில் வியாபாரத்தில் நல்ல மேன்மைகள் உண்டாகும். அரசு வழியில் எதிர்பாராத உதவிகள் சிறு தடைக்கு பின்பு கிடைக்கும். புதிய வாய்ப்புகளும் தேடி வரும். சனி 7-ல் சஞ்சரிப்பதால் கூட்டாளிகளையும் வேலையாட்களையும் அனுசரித்து சென்றால் இருக்கும் அனைத்து சிக்கலையும் சமாளித்து வலமான பலன்களை அடைய முடியும், பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் அனுகூலம் கிடைக்கும். பயணங்களால் அலைச்சல்கள் இருந்தாலும் தொழில் முன்னேற்றம் உண்டாகும்.

பெண்கள்

பெண்களுக்கு சிறுசிறு வயிறு பாதிப்புகள் ஏற்படலாம் என்பதால் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்து கொள்வது நல்லது. குடும்பத்தில் ஒற்றுமை நன்றாக இருக்க பேச்சில் பொறுமையாக இருப்பது, விட்டு கொடுத்து செல்வது சிறப்பு. மங்களகரமான சுப காரியங்கள் கைகூடும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய நிகழ்ச்சிகள் நடைபெறும். பணவரவுகள் தாராளமாக இருப்பதால் அனைத்து தேவைகளும் தடையின்றிப் பூர்த்தியாகும். உற்றார் உறவினர்களிடையே சிறுசிறு மனசஞ்சலங்கள் தோன்றலாம் என்பதால் கவனமாக இருப்பது நல்லது.

கொடுக்கல்- வாங்கல்

கொடுக்கல்- வாங்கல் சரளமான நிலையிருக்கும். கொடுத்த கடன்களும் திருப்திகரமாக வசூலாகும். உங்களுக்கு இருந்த வந்த வம்பு வழக்குகளில் தீர்ப்பு உங்களுக்கு சாதகமாகவே இருக்கும். சனி 7-ல் சஞ்சரிப்பதால் பிறரை நம்பி பண விஷயத்தில் முன் ஜாமீன் கொடுப்பதை தவிர்த்து விடுவது நல்லது. அனைத்து செயல்களும் உங்களுக்கு சாதகமாக இருக்கும் என்றாலும் நெருங்கியவர்களிடம் சற்று முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது.

அரசியல்

அரசியல்வாதிகள் மக்களின் ஆதரவைப் பெற அதிகம் பாடுபட வேண்டியிருக்கும். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்ற எதிர்நீச்சல் போட்டவது எதையும் சாதிக்கும் ஆற்றலும் உண்டாகும். கட்சிப் பணிகளுக்காக சிறுசிறு விரயங்கள் அலைச்சல்கள் ஏற்பட்டாலும் அதன் மூலம் ஒரளவுக்கு அனுகூலமும் உண்டாகும். வெளியூர் வெளிநாடுகளுக்குப் பயணங்களை மேற்கொள்வீர்கள்.

விவசாயிகள்

விவசாயத்தில் பட்டபாட்டிற்கேற்ற பலனைப் பெற்று விட முடியும். சில நேரங்களில் வேலைக்கு ஆள் கிடைக்காமல் நெருக்கடிகள் ஏற்பட்டாலும் தகுந்த நேரத்தில் முடிக்க வேண்டிய வேலையை முடித்து விடுவீர்கள். கால் நடைகளுக்கு சிறுசிறு ஆரோக்கிய பாதிப்புகள் ஏற்பட்டாலும், அவற்றின் மூலம் அடைய வேண்டிய லாபங்களை அடைந்து விட முடியும். வாய்க்கால் வரப்பு பிரச்சினைகளால் பங்காளிகளிடம் தேவையற்ற கருத்து வேறுப்பாடு உண்டாகும்.

கலைஞர்கள்

கலைஞர்களுக்குக் கிடைக்க வேண்டிய வாய்ப்பு தாமதம் பட்டாலும் தக்க சமயத்தில் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். பணவரவுகளில் இருந்த நெருக்கடிகள் விலகி உங்கள் அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். பேச்சில் நிதானத்தைக் கடைபிடிப்பதும் உடனிருப்பவரை அனுசரித்துச் செல்லுவதும் அவசியம். சூழ்நிலை காரணமாக அதிக அலைச்சல், அடிக்கடி வெளியூர் பயணங்கள் மேற்கொள்ள நேரிடும்.

மாணவ- மாணவியர்

கல்வியில் எதிர் நீச்சல் போட்டாவது வெற்றிகளைப் பெறுவீர்கள். உடன் பழகுபவர்களிடம் சற்று கவனமுடன் இருப்பது நல்லது. பெற்றோர் ஆசிரியர்களின் ஆதரவு உங்களுக்கு உண்டு. விளையாட்டுப் போட்டிகளில் ஈடுபடும் போது எச்சரிக்கை தேவை. வண்டி வாகனங்களில் பயணம் செய்யும் போது வேகத்தைக் குறைப்பது உத்தமம்.

கன்னி

உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2-ஆம் பாதங்கள்

அனைவரிடமும் சகஜமாகப் பழகினாலும் அளவோடு தன்மையுடன் பேசும் குணம் கொண்ட கன்னி ராசி நேயர்களே! உங்கள் அனைவருக்கும் என் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த சார்வரி வருடத்தில் உங்கள் ராசியாதிபதி புதனுக்கு நட்பு கிரகமான சனி பகவான் ஜென்ம ராசிக்கு பஞ்சம ஸ்தானமான 5-ஆம் வீட்டில் சஞ்சரிப்பது சிறப்பான அமைப்பாகும். பொன்னவன் என போற்றப்படும் குருபகவான் வரும் ஆனி 15 (30-06-2020) முடியவும் அதன் பின்பு கார்த்திகை 5ஆம் தேதி (20-11-2020) முதல் உங்கள் ராசிக்கு பஞ்சம ஸ்தானமான 5-ல் சஞ்சரிப்பதால் பணவரவுகள் சிறப்பாக இருக்கும். உங்களது உடல் ஆரோக்கியம் நன்றாக இருந்து எதிலும் தெம்போடு செயல்படும் உடல் வலிமை பெறுவீர்கள். கடந்த கால அலைச்சல்கள் குறைந்து மன நிம்மதி உண்டாகும். குடும்பத்தில் திருமண சுபகாரியங்கள் சில தடைகளுக்குப்பின் கைகூடும். பூர்வீக சொத்து விஷயங்களில் உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் அனுகூலமான பலன்களை அடைய முடியும். புத்திரர்களால் ஒரு சில மன சஞ்சலங்கள் ஏற்பட்டாலும் பெரிய கெடுதிகள் உண்டாகாது. தொழில் வியாபார ரீதியாக உங்களது முயற்சிகளுக்கு சாதகமான பலன்களை வரும் நாட்களில் அடையும் யோகம் உண்டாகும். வேலையாட்களின் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும். கூட்டாளிகளால் சாதகமான பலன்கள் உண்டாகும், உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு குறைந்து வலமான பலன்களை அடைவீர்கள். எதிர்பார்த்த பதவி உயர்வுகள் கிடைத்து உங்களுக்கு இருந்த மன ஆதங்கம் எல்லாம் விலகி மன மகிழ்ச்சி ஏற்படும். சிலருக்கு வெளியூர் பயணங்கள் செல்லும் யோகமும் அதன் மூலம் ஆதாயமும் உண்டாகும்.

சர்ப்ப கிரகமான ராகு 10-ல், கேது 4-ல் ஆண்டின் முற்பாதியில் சஞ்சரிப்பது சற்று அலைச்சலை தரும் அமைப்பு என்றாலும் வரும் புரட்டாசி 7 (23-09-2020) முதல் ராகு 9-ல், கேது 3-ல் சஞ்சரிக்க இருப்பதால் எடுக்கும் முயற்சிகளில் சாதகமான பலன்களை அடையும் வாய்ப்பு உண்டாகும். அசையும் அசையா சொத்து வழியில் அனுகூலம் ஏற்படும். குரு பகவான் வரும் ஆனி 15 முதல் கார்த்திகை 5 வரை (30-06-2020 முதல் 20-11-2020) உங்கள் ராசிக்கு 4-ல் சஞ்சரிக்க இருப்பதால் இக்காலத்தில் பொருளாதார நிலை சற்று சுமாராக இருக்கும் என்பதால் பண விஷயத்தில் சற்று சிக்கனத்துடன் இருப்பது, ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வது சிறப்பு. பெரிய தொகைகளை பிறருக்கு கடனாக கொடுப்பதை தவிர்க்கவும்.

உடல் ஆரோக்கியம்

உங்களின் உடல் ஆரோக்கியமானது அற்புதமாக இருக்கும். எதிரிகளின் பலம் குறைந்து உங்களின் பலமும் வலிமையும் கூடும். எடுக்கும் முயற்சிகளில் தங்குதடையின்றி செயல்பட்டு நல்ல அனுகூலத்தைப் பெறுவீர்கள். மனைவி பிள்ளைகளும் சுபிட்சமாக இருப்பார்கள். இதுவரை நீண்ட நாட்களாக தொடர்ந்து மருத்துவச் சிகிச்சை மேற்கொண்டிருப்பவர்களுக்கு உடல் ரீதியான பிரச்சினைகள் படிப்படியாக குறையும். உணவு விஷயத்தில் கட்டுப்பாடுடன் இருந்தால் உடல் நிலையும் மனநிலையும் மிகவும் மகிழ்ச்சிகரமாக அமையும்.

குடும்பம் பொருளாதாரம்

இந்த வருடம் முழுவதும் குடும்பச் சூழ்நிலையானது மகிழ்ச்சியளிப்பதாக அமையும். நீங்கள் நினைத்ததெல்லாம் நிறைவேறும். கணவன்- மனைவி ஒற்றுமை பலப்படும். சிறப்பான புத்திர பாக்கியம் அமையும். குடும்பத்தில் திருமண சுப காரியங்கள் கைகூடும். பணவரவுகள் ஒரளவுக்கு சாதகமாக அமைவதால் வீடு, மனை, வண்டி வாகனம் போன்றவை வாங்கும் யோகம் அமையும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியளிக்கும்.

உத்தியோகம்

உத்தியோகஸ்தர்கள் உயர்வடையும் காலமிது என்று சொன்னால் அது மிகையாகாது. எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கௌரவமான உயர்பதவிகள், பலரை வழி நடத்தும் நிர்வாகத்திறன் போன்றவை சிறப்பாக அமையும். உடன் பணிபுரிபவர்களின் ஆதரவுகளால் வேலைப் பளுவை குறைத்துக் கொள்ள முடியும். செய்யும் பணியாவற்றிலும் உங்கள் திறமைகள் பளிச்சிடும். வெளியூர் வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய விரும்புபவர்களின் விருப்பமும் நிறைவேறும். புதிய வேலை தேடுபவர்களுக்கு சிறப்பான வேலை வாய்ப்பு தகுதிக்கேற்றபடி அமையும். சமுதாயத்தில் பெயர், புகழ் யாவும் உயரும்.

தொழில் வியாபாரம்

தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு அபிரிமிதமான லாபம் கிட்டும். புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும். புதிய கிளைகளை உருவாக்கும் நோக்கம், பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி தொழிலை அபிவிருத்தி செய்யும் நோக்கம் போன்ற யாவும் நிறைவேறும். கூட்டாளிகளின் ஒற்றுமையான செயல்பாடும், தொழிலாளர்களின் ஆதரவும் மேலும் மேலும் முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச் செல்லும். வெளியூர் வெளிநாடு தொடர்புடையவற்றால் அனுகூலம் உண்டாகும். அடிக்கடி பயணங்களை மேற்கொள்வீர்கள். புதிய வாய்ப்புகள் தேடி வருவதால் லாபம் அதிகரிக்கும்.

பெண்கள்

உங்களின் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு மண வாழ்க்கை சிறப்பாக அமையும். சிறப்பான புத்திர பாக்கியம் அமையும். பகைமை பாராட்டிய உறவினர்களும் தேடி வந்து நட்புக் கரம் நீட்டுவார்கள். பண வரவுகளும் தாராளமாக அமையும். பூர்வீகச் சொத்துகளால் அனுகூலம் ஏற்படும். தெய்வ தரிசனங்களுக்காக பயணங்கள் மேற்கொள்வீர்கள். கடன்கள் குறையும். பணிபுரியும் பெண்களுக்கு நல்ல கௌரவமான பதவி கிடைக்கும். ஊதிய உயர்வுவை அடைய முடியும்.

கொடுக்கல்- வாங்கல்

இந்த ஆண்டில் தன காரகன் குரு பகவான் வரும் 30-06-2020 முடியவும் அதன் பின்பு 20-11-2020 முதல் 5-ல் சஞ்சரிக்க உள்ள காலத்தில் பணவரவுகள் மிகவும் சரளமாக இருக்கும். கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சிறப்பான லாபம் கிடைக்கும். பெரிய தொகைகளையும் எளிதில் ஈடுபடுத்தி முன்னேற்றங்களை அடைய முடியும். வம்பு வழக்குகளில் சாதகமான பலன் கிட்டும்.

அரசியல்

அரசியல்வாதிகளுக்கு இந்த ஆண்டு ஒரு பொன்னான ஆண்டாக இருக்கும். நினைத்த காரியங்களை நினைத்தபடி நிறைவேற்றுவீர்கள். மக்களின் ஆதரவால் பெயர், புகழ், செல்வம் செல்வாக்கு உயரும். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றக்கூடிய அளவிற்கு உங்களின் பலமும் வலிமையும் கூடும். பொருளாதார நிலையும் சிறப்பாக இருக்கும்

விவசாயிகள்

விவசாயிகள் விளைச்சலை இரட்டிப்பாகப் பெறுவார்கள். சந்தையில் உங்களின் விளைபொருளுக்கேற்ற விலையும் சிறப்பாகக் கிடைக்கும். எதிர்பாராத அரசாங்க உதவிகளால் அனுகூலம் ஏற்படும். பணவரவுகள் தாராளமாக இருப்பதால் புதிய பூமி, மனை வாங்கும் யோகம், புதிய பம்ப் செட்டுகள் அமைக்கும் வாய்ப்பு போன்றவை உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சிதரக் கூடிய இனிய நிகழ்ச்சிகள் நடைபெறும்.

கலைஞர்கள்

கலைஞர்களின் திறமைகள் வெளிப்படும் ஆண்டாக இருக்கும். எதிர்பார்த்துக் காத்திருந்த கதாபாத்திரங்கள் கிடைக்கப் பெற்று ரசிகர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். தாராள தன வரவுகளும் உண்டாவதால் சுகவாழ்வு, சொகுசு வாழ்வுக்குப் பஞ்சம் இருக்காது. நவீன பொருட்கள் வாங்கும் யோகம் ஏற்படும். வெளியூர் வெளிநாடுகளுக்கு செல்லக் கூடிய வாய்ப்புகள் உண்டாகும். நடித்த படங்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கும்.

மாணவ- மாணவியர்

கல்வியில் சிறப்பான மேன்மை அமையும். நல்ல மதிப்பெண்களைப் பெற்று பள்ளி கல்லூரிகளுக்குப் பெருமை சேர்ப்பீர்கள். பெற்றோர், ஆசிரியர்களின் ஆதரவும் பாராட்டுதல்களும் உங்களுக்கு மேலும் மேலும் உற்சாகத்தைத் தரும். நல்ல நட்பு மூலம் நற்பலனை அடைவீர்கள். விளையாட்டு போட்டிகளில் அதிர்ஷ்ட காற்று உங்கள் பக்கமே வீசும்.

சிம்மம்

மகம், பூரம். உத்திரம்1-ஆம் பாதம்

எதிலும் தனித்து நின்று போராடி வெற்றி பெறும் ஆற்றல் கொண்ட சிம்ம ராசி நேயர்களே! உங்கள் அனைவருக்கும் என் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த சார்வரி ஆண்டில் சனி பகவான் உங்கள் ஜென்ம ராசிக்கு ருணரோக ஸ்தானமான 6-ஆம் வீட்டில் ஆட்சி பெற்று சஞ்சரிப்பது அற்புதமான அமைப்பாகும். சர்ப்ப கிரகமான ராகு வரும் புரட்டாசி 7 (23-09-2020) முடிய லாப ஸ்தானமான 11-ல் சஞசரிப்பதும் பல்வேறு வகையில் அனுகூலமான பலன்களை அடையும் வாய்ப்பை உண்டாக்கும். உங்களது உடல் ஆரோக்கியம் மிக சிறப்பாக இருக்கும். எதிலும் சுறுசுறுப்பாக செயல்பட முடியும். கடந்த கால தேவையற்ற வீண் செலவுகள் முற்றிலும் விலகி சேமிக்கும் வாய்ப்பு உண்டாகும். நீங்கள் தொட்டதெல்லாம் பொன்னாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், தொழில் வியாபார ரீதியாக மேன்மை மிகுந்த பலன்களும் கிடைக்கும். புதிய தொழில் தொடங்க வேண்டும் என்ற நீண்ட நாள் கனவு கைகூடும் வாய்ப்புகள் வருகின்ற நாட்களில் நடக்கும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு கடந்த கால பிரச்சினைகள் விலகி படிப்படியான உயர்வுகளும் கௌரவ பதவிகளும் தேடி வரும். சிலருக்கு விரும்பிய இடமாற்றம் கிடைத்து குடும்பத்துடன் இனையும் வாய்ப்பு உண்டாகும்.

குரு பகவான் வரும் ஆனி 15 முதல் கார்த்திகை 5 வரை (30-06-2020 முதல் 20-11-2020) பஞ்சம ஸ்தானமாகிய 5-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் பொருளாதார ரீதியாக மேன்மைகள் உண்டாகும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன் கிடைத்து திருமண சுப காரியங்கள் கைகூடும். புத்திர பாக்கியம் எதிர்பார்த்து இருந்தவர்களுக்கு புத்திர பாக்கியம் கிட்டும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் எல்லாத் தேவைகளும் நிறைவாகப் பூர்த்தியாகும். பூமி, மனை, வண்டி வாகனங்கள் வாங்கும் யோகம் அமையும். கொடுக்கல்- வாங்கலில் நல்ல லாபத்தைப் பெற முடியும். சமுதாயத்தில் கௌரவமான நிலையினை அடைவீர்கள். பிரிந்து சென்ற உறவினர்கள் தேடி வந்து ஒற்றுமை பாராட்டுவார்கள். அனைத்து கடன்களும் குறையும்.

குரு பகவான் ஆனி 15 (30-06-2020) முடியவும், அதன் பின்பு கார்த்திகை 5-ஆம் தேதி (20-11-2020) முதல் ருணரோக ஸ்தானமான 6-ல் சஞ்சரிக்க உள்ளதால் இக்காலத்தில் பண விஷயத்தில் சற்று சிக்கனத்துடன் இருப்பது நல்லது. எது எப்படி இருந்தாலும் சனி ஆண்டு முழுவதும் 6-ல் சஞ்சரிப்பதால் வளமான பலன்களை அடையும் யோகம் உண்டாகும்.

உடல் ஆரோக்கியம்

இந்த வருடம் முழுவதும் ஆயுள் காரகனான சனி பகவான் ருணரோக ஸ்தானமான 6-ஆம் வீட்டில் சஞ்சரிப்பது அற்புதமான அமைப்பு என்பதால் உங்கள் மனநிலையும், உடல் நிலையும் மிகச் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் மருத்துவச் செலவுகள் யாவும் குறைந்து நிம்மதி நிலவும். அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்பாக ஈடுபடுவீர்கள். ஆண்டின் முற்பாதியில் ஜென்ம ராசிக்கு 5-ல் கேது சஞ்சரிப்பதால் உணவு விஷயத்தில் சற்று கவனத்துடன் இருப்பது நல்லது.

குடும்பம் பொருளாதாரம்

சனி 6-ல் சஞ்சரிப்பதால் பணவரவுகள் தாராளமாக இருக்கும். எல்லா தேவைகளும் தடையின்றிப் பூர்த்தியாகும். குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். கணவன்- மனைவியிடையே அன்னோன்னியம் நிலவும். உங்களைப் புரிந்து கொள்ளாமல் விலகிச் சென்றவர்கள் கூட தேடி வந்து ஒற்றுமை பாராட்டுவார்கள். சிலருக்கு பூமி, மனை, வண்டி வாகனங்கள் வாங்கக்கூடிய யோகமும் உண்டாகும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு சிறப்பான மண வாழ்க்கை அமையும்.

உத்தியோகம்

உத்தியோகஸ்தர்கள் உயர்வடையக் கூடிய காலம் என்று சொன்னால் அது மிகையாகாது. சனி 6-ல் சாதகமாக சஞ்சரிப்பதால் எதிர்பார்க்கும் கௌரவப் பதவிகளும் ஊதிய உயர்வுகளும் தேடி வரும். எடுக்கும் பணிகளை சிறப்பாக செய்து முடித்து உயரதிகாரிகளிடம் பாராட்டுதல்களைப் பெறுவீர்கள். உங்களிடமுள்ள திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகளும் அமையும். உடன் பணிபுரிபவர்களின் ஆதரவும் சிறப்பாக இருக்கும். வெளியூர் வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய விரும்புகிறவர்களின் விருப்பம் நிறைவேறும். புதிய வேலை தேடுபவர்களுக்கும் தகுதிக்கேற்ற வேலை வாய்ப்புகள் சிறப்பாக அமையும்.

தொழில் வியாபாரம்

தொழில் வியாபாரம் செய்பவர்கள் எதிர்பார்த்ததைவிட இரட்டிப்பு லாபத்தை அடைய முடியும். போட்டி, பொறாமைகள் மற்றும் மறைமுக எதிர்ப்புகள் அனைத்தும் மறைவதால் புதிய புதிய வாய்ப்புகள் தேடி வரும். சொன்ன நேரத்திற்கு ஆர்டர்களையும் சப்ளை செய்வதால் மேலும் மேலும் முன்னேற்றங்களைப் பெற முடியும். புதிய இடங்களில் கிளைகள் நிறுவும் நோக்கங்களும் நிறைவேறும். அரசு வழியில் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த உதவி கிடைக்கும். தொழிலாளர்கள் மற்றும் கூட்டாளிகளின் ஆதரவுகள் உங்களின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.

பெண்கள்

உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பிரச்சினைகள் தோன்றினாலும் உடனே சரியாகிவிடும். குடும்பத்தில் ஒற்றுமை, பொருளாதார மேன்மை, திருமண சுபகாரியங்கள் கைகூடக்கூடிய வாய்ப்பு போன்றவையும் உண்டாகும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். புத்திர வழியில் மகிழ்ச்சி உண்டாகும். எடுக்கும் காரியங்களை சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள். தெய்வ தரிசனங்களுக்காக பயணங்கள் மேற்கொள்வீர்கள். சிலருக்கு வீடு, மனை வாங்க கூடிய யோகங்கள் உண்டாகும். பணிபுரியக் கூடிய பெண்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைக்கும்.

கொடுக்கல்- வாங்கல்

சனி சாதகமாக சஞ்சரிப்பதால் பணம் கொடுக்கல்- வாங்கல் சிறப்பாக இருக்கும். கொடுத்த கடன்களும் திருப்திகரமாக வசூலாகும், கமிஷன் ஏஜென்ஸி, காண்டிராக்ட் போன்ற துறைகளில் இருப்பவர்களுக்கு நல்ல வருமானம் கிட்டும். குரு பகவான் வரும் 30-06-2020 முதல் 20-11-2020 வரை 5-ல் சஞ்சரிக்க உள்ள காலத்தில் பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்த முன்னேற்றங்களை எளிதில் அடைய முடியும்.

அரசியல்

அரசியல்வாதிகளுக்கு இந்த ஆண்டு ஒரு பொற்காலம் என்று சொன்னால் அது மிகையாகாது. உங்களின் பேச்சுக்கு மதிப்பும் மரியாதையும் உயரும். மக்கள் செல்வாக்கிற்கு காரகனான சனி 6-ல் ஆட்சி பெற்று பலமாக சஞ்சரிப்பதால் மக்களின் அமோக ஆதரவும் உங்கள் பக்கமே இருக்கும். மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் ஆற்றலும் மறைமுக எதிர்ப்புகளை வெல்லும் வலிமையும் உண்டாகும்.

விவசாயிகள்

விவசாயிகளுக்கு மகசூல் சிறப்பாக இருக்கும். நெல் முதல் தானியங்கள் வரை. காய் முதல் பழ வகைகள் வரை சிறப்பான விளைச்சல்களால் சந்தையில் விளைபொருளுக்கேற்ற விலையை பெற முடியும். பொருளாதார நிலையும் மேன்மையடையும். வங்கிக் கடன் பெற்றவர்களுக்கு எதிர்பாராத தன சேர்க்கையால் கடன்களில்லாத கண்ணிய வாழ்க்கை அமையும். புதிய பூமி மனை வாங்கும் யோகம் ஏற்படும்.

கலைஞர்கள்

கலைஞர்களுக்கு இந்த ஆண்டு தொட்டதெல்லாம் துலங்கும். நினைத்த கதாபாத்திரங்களில் நடிக்க முடியும். உங்களின் திறமைகளுக்கு நல்ல தீனி கிடைப்பதால் ரசிகர்களின் ஆதரவும் பெருகும். பணவரவுகள் தாராளமாக இருப்பதால் சுகவாழ்வு சொகுசு வாழ்வுக்கு பஞ்சம் இருக்காது. சிலருக்கு வெளியூர், வெளிநாடுகளுக்கு செல்லும் வாய்ப்புகள் எளிதில் கிடைக்கும், புதிய கார், பங்களா போன்றவற்றையும் வாங்கிக் சேர்ப்பீர்கள்.

மாணவ- மாணவியர்

மாணவ- மாணவியர்களின் கல்வித் திறன் மேலோங்கும். நல்ல மதிப்பெண்களைப் பெற்று பெற்றோர் ஆசிரியர்களிடம் நற்பெயர் எடுப்பீர்கள். பள்ளி கல்லூரிகளுக்கும் உங்களால் பெருமை ஏற்படும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் தேடி வரும். பெரிய மனிதர்களின் ஆதரவும் கிட்டும். விளையாட்டுப் போட்டிகளில் பரிசுகளையும் பாராட்டுகளையும் தட்டிச் செல்வீர்கள்.

துலாம்

சித்திரை3,4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம்1,2,3-ஆம் பாதங்கள்

மகிழ்ச்சியையோ, துக்கத்தையோ வெளிக்காட்டாமல் வாழும் ஆற்றலும், தன்னுடைய சொந்த கருத்துகளைக் கூட சிந்தித்து வெளிப்படுத்தும் தன்மையும் கொண்ட துலா ராசி நேயர்களே! உங்கள் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த சார்வரி வருடத்தில் உங்கள் ஜென்ம ராசிக்கு கேந்திர திரிகோணாதிபதியாகி யோககாரகனான சனிபகவான் இவ்வாண்டு முழுவதும் திருக்கணிதப்படி சுக ஸ்தானமான 4-ல் சஞ்சரிக்க உள்ளார். சனி 4-ல் சஞ்சரிப்பது அர்த்தாஷ்டமச் சனி என்பதால் தேவையற்ற அலைச்சல் இருப்பதை அனுபவிக்க தடங்கல்கள் உண்டாகும் என்றாலும் சனி உங்கள் ராசிக்கு யோக காரகன் என்பதால் மற்ற ராசி நேயர்களுக்கு பொதுவாக அர்த்தாஷ்டச் சனி காலங்களில் ஏற்படுத்தும் பாதிப்பை போல உங்களுக்கு கெடுதிகளை உண்டாக்க மாட்டார். உங்கள் ஆரோக்கியம் ஒரளவுக்கு சிறப்பாக இருக்கும் என்றாலும் உடல் அசதி, நேரத்திற்கு உணவு உன்ன முடியாத நிலை, இருப்பதை அனுபவிக்க இடையூறு உண்டாகும்.

பொன்னவன் என போற்றப்படும் குருபகவான் உங்கள் ராசிக்கு 3, 4-ல் சஞ்சரிப்பதால் பண விஷயத்தில் சிக்கனத்துடன் செயல்படுவது மிகவும் நல்லது. எதிர்பார்க்கும் தன வரவுகள் கிடைக்க தாமதம் ஏற்பட்டாலும் கிடைக்க வேண்டிய நேரத்தில் கிடைத்து விடும். சர்ப்ப கிரகமான கேது 3-ல் வரும் புரட்டாசி 7 (23-09-2020) வரை சஞ்சரிப்பதால் எதிர்பாராத உதவிகளால் உங்களது குடும்ப தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். தொழில் ரீதியாக நல்ல வாய்ப்புகள் கிடைத்தாலும் வேலையாட்களின் ஒத்துழைப்பு சாதகமாக இருக்காது. மறைமுக எதிர்ப்புகள் சிலவற்றால் மன அமைதி குறையும். கூட்டாளிகளின் உதவியால் கடுமையான நெருக்கடிகளை எளிதில் சமாளிக்கும் ஆற்றல் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்க்கும் வாய்ப்புகள் கிடைக்கும் என்றாலும் வேலைபளு அதிகப்படியாக இருக்கும். உடல் சோர்வால் பணியில் முழு கவனம் செலுத்த இடையூறு உண்டாகும், சிலருக்கு வேலை நிமித்தமாக வெளியூர் பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்புகள் ஏற்படும்,

திருக்கணிதப்படி சர்ப கிரகமான ராகு 8-லும், கேது 2-லும் வரும் புரட்டாசி 7 (23-09-2020) முதல் சஞ்சரிப்பதால் நெருங்கியவர்களை அனுசரித்துச் செல்வதும், பேச்சில் நிதானத்தைக் கடைபிடிப்பதும் உத்தமம். குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே தேவையற்ற கருத்து வேறுப்பாடுகள் உண்டாகும். கூட்டு குடும்பத்தில் உள்ளவர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய காலமாகும்.

உடல் ஆரோக்கியம்

தேவையற்ற அலைச்சல், டென்ஷன், உடல் அசதி ஏற்படும். நேரத்திற்கு உணவு உண்ண முடியாத நிலையால் வயிறு சம்மந்தபட்ட பாதிப்புகள் ஏற்படலாம் என்பதால் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்து கொள்வது நல்லது. எது எப்படி இருந்தாலும் அன்றாட பணிகளையும் உங்களது கடமைகளையும் தக்க சமயத்தில் முடித்து நற்பெயர் எடுப்பீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களிள் ஆதரவு மன அமைதியை தரும்.

குடும்பம் பொருளாதாரம்

குடும்ப ஒற்றுமையானது சுமாராக இருக்கும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளை மேற்கொண்டால் சிறுசிறு இடையூறுகளுக்கு பின்பு அனுகூலப்பலனை அடைய முடியும். வண்டி வாகனங்கள் மற்றும் வீடு, மனையை புதுபிப்பதற்காக செலவுகளைச் செய்ய நேரிடும். பணவரவுகள் ஏற்ற இருக்கமாக இருப்பதால் ஆடம்பர செலவுகளை குறைப்பது நல்லது. உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் அவர்களால் சில ஆதாயங்களை பெற முடியும்.

உத்தியோகம்

உத்தியோகஸ்தர்களுக்கு சிறுசிறு பிரச்சினைகளும் சங்கடங்களும் ஏற்படும். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றங்களால் வீண் அலைச்சல், பணி புரியும் இடத்தில் உடன் பணிபுரிபவர்களிடம் ஒத்து போக முடியாத நிலை உண்டாகும் என்றாலும் எதிர்பார்க்கும் பதவி உயர்வுகளும் ஊதிய உயர்வுகளும் தக்க சமயத்தில் கிடைக்கும். உயரதிகாரிகளின் ஆதரவு உங்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தும்.

தொழில் வியாபாரம்

தொழில் வியாபாரம் செய்பவர்கள் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் சிந்தித்துச் செயல்படுவது நல்லது. கூட்டாளிகள் உங்களுக்கு சற்று ஒத்துழைப்பாகச் செயல்படுவதால் ஒரளவுக்கு லாபம் கிட்டும். நவீன கருவிகள் பழுதடைந்து வீண் விரயத்தை ஏற்படுத்தும். வேலையாட்களை அனுசரித்து செல்வது நல்லது. எந்த வித போட்டிகளையும் சமாளிக்கும் ஆற்றலும் உண்டாகும். வெளியூர் வெளிநாட்டுத் தொடர்புடையவற்றால் லாபங்கள் கிட்டும்.

பெண்கள்

உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்த வேண்டியிருக்கும். பொருளாதார நிலை ஏற்ற இறக்கம் நிறைந்ததாக இருக்கும் என்பதால் ஆடம்பர செலவுகளை குறைப்பது நல்லது. தேவையற்ற அலைச்சல், டென்ஷன் உறவினர்களிடையே கருத்து வேறுபாடு போன்றவை உண்டாகும். குடும்பத்தில் ஒற்றுமை சுமாராக அமையும். திருமண சுப காரியங்கள் கைகூடும். புத்திர வழியில் சாதகமான பலன்கள் ஏற்படும். முடிந்தவரை பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதை தவிர்த்து விடுவது நல்லது.

கொடுக்கல்- வாங்கல்

இந்த ஆண்டின் குரு சாதகமற்று சஞ்சரிப்பதால் பணம் கொடுக்கல்- வாங்கலில் சற்று கவனமுடன் செயல்படுவது உத்தமம். கொடுத்த கடன்களை வசூலிப்பதில் வீண் பிரச்சினைகள் ஏற்படும். எனவே பெரிய தொகைகளை பிறருக்கு கடனாக கொடுப்பதை தவிர்க்கவும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற தேவையற்ற இடையூறு உண்டாகும்.

அரசியல்

அரசியல்வாதிகள் எதிலும் சற்று கவனமுடன் செயல்பட்டால் மக்களின் ஆதரவைப் பெற முடியும். பொருளாதார நிலை ஏற்ற இறக்கமாக இருக்கும். மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை எதிர் நீச்சல் போட்டாவது காப்பாற்றி விடுவீர்கள். கட்சிப் பணிகளுக்காக வீண் செலவுகளை செய்ய நேரிட்டாலும் பெரிய கெடுதிகள் இல்லை. எதிலும் சிந்தித்து நிதானமுடன் செயல்படுவதன் மூலம் பதவியைக் காப்பாற்றிக் கொள்ள முடியும்.

விவசாயிகள்

விவசாயிகளுக்கு மகசூல் சுமாராகத்தான் இருக்கும் என்றாலும் பட்டபாட்டிற்கான பலன்களைப் பெற்று விடுவீர்கள். வங்கிக் கடன்கள் எதிர்பார்த்த நேரத்தில் கிடைத்து மன ஆறுதலை ஏற்படுத்தும். கால் நடைகளால் ஒரளவுக்கு லாபம் கிட்டும். புதிய நவீன கருவிகள் வாங்கும் நோக்கங்களை சற்று தள்ளி வைப்பது நல்லது. புழு பூச்சிகளின் தொல்லைகளால் வீண் செலவுகள் உண்டாகும்.

கலைஞர்கள்

எதிர்பார்த்த வாய்ப்புகள் கை நழுவிப் போனாலும் புதிய வாய்ப்புகள் தேடி வரும். சிலருக்கு வெளியூர் வெளிநாடுகளுக்கு செல்லும் நிலை ஏற்படும், இந்த ஆண்டு தேவையற்ற அலைச்சல்களும், சுகவாழ்வு பாதிப்படையக் கூடிய சூழ்நிலைகளும் உண்டாகும். பண வரவுகள் ஓரளவுக்கு சாதகமாக இருக்கும். முடிந்த வரை பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதைத் தவிர்த்து விடுவது நல்லது.

மாணவ- மாணவியர்

கல்வியில் மந்தமான நிலை இருக்கும். எதையும் எளிதில் புரிந்து கொள்ள இயலாத அளவிற்கு ஞாபக மறதி, மனக் குழப்பங்கள் உண்டாகும். பெற்றோர்களின் ஆதரவு குறையும். விடாமுயற்சியுடன் செயல்பட்டால் மட்டுமே நல்ல மதிப்பெண்களைப் பெற முடியும். நண்பர்களின் ஆதரவு உங்களுக்கு உற்சாகத்தை உண்டாக்கும். விளையாட்டு போட்டிகளில் கவனம் தேவை.

விருச்சிகம்

விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை

எந்தவொரு காரியத்தையும் திறமையாகச் செய்து முடிக்க கூடிய ஆற்றலும், பிறரை அடக்கியாளும் தன்மையும் கொண்ட
விருச்சிக ராசி நேயர்களே! உங்கள் அனைவருக்கும் என் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள். ஒரு ராசியில் அதிக காலம் சஞ்சரிக்கும் கிரகமான சனி பகவான் திருக்கணிதப்படி இவ்வாண்டு முழுவதும் முயற்சி ஸ்தானமான 3-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி மேல் வெற்றி அடைவீர்கள். உங்களது நீண்ட நாள் கனவுகள் எல்லாம் நனவாகும் ஆண்டாக இவ்வாண்டு இருக்கும். உடல் ஆரோக்கியம் மிகவும் சிறப்பாக இருந்து எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். கடந்த கால மருத்துவ செலவுகள் முற்றிலும் குறைந்து உங்களது கையிருப்பு அதிகரிக்கும் யோகம் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் சிறப்பான லாபம் கிடைக்கும். போட்டிகள், மறைமுக எதிர்ப்புகள் சற்றே விலகுவதால் தடைபட்ட வாய்ப்புகளை பெறுவீர்கள். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்கள் உறுதுணையாக செயல்படுவார்கள். வெளியூர், வெளிநாட்டு தொடர்புடைய வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் திறம்பட செயல்பட்டு உயரதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவார்கள். உடன் பணிபுரிபவர்களிடையே இருந்த கருத்து வேறுபாடு மறையும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்து விட முடியும்.

குரு பகவான் வரும் ஆனி 15 முதல் கார்த்திகை 5 வரை (30-06-2020 முதல் 20-11-2020) தன ஸ்தானமான 2-ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பதால் திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சாதகமான பலன்களை அடைய முடியும். கொடுக்கல்- வாங்கலில் சிறப்பான லாபம் அமையும். புத்திர வழியில் மகிழ்ச்சியான நிகழ்ச்சி நடைபெறும்.

இவ்வாண்டு சர்ப கிரகமான ராகு 8-லும், கேது 2-லும் வரும் புரட்டாசி 7 (23-09-2020) வரையும் அதன் பின்பு ஜென்ம ராசியில் கேது, 7-ல் ராகு சஞ்சரிக்க இருப்பது சற்று சாதகமற்ற அமைப்பு என்பதால் கணவன்- மனைவியிடையே ஒன்றும் இல்லாத விஷயத்திற்கு கூட கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் விட்டு கொடுத்து சென்றால் ஒரளவிற்கு ஒற்றுமையை அடைய முடியும். உற்றார், உறவினர்களை அனுசரித்து செல்லவது நல்லது.

குரு பகவான் ஆனி 15 (30-06-2020) முடியவும் அதன் பின்பு கார்த்திகை 5ஆம் தேதி (20-11-2020) முதல் முயற்சி ஸ்தானமான 3-ல் சஞ்சரிக்க உள்ள காலத்தில் பண விஷயத்தில் சற்று சிக்கனத்துடன் செயல்படுவது நல்லது. சனி ஆண்டு முழுவதும் சாதகமாக செயல்படுவதால் பொருளாதார நிலையில் சாதகமான பலன்கள், படிப்படியான முன்னேற்றங்களை அடையும் வாய்ப்புகள் உண்டு.

உடல் ஆரோக்கியம்

உடல் நிலை ஒரளவுக்கு சிறப்பாகவே இருக்கும். அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட கூடிய ஆற்றல் உண்டாகும். குடும்பத்தில் உள்ளவர்களும் சுபிட்சமாக இருப்பார்கள். நீண்ட நாட்களாக மருத்துவ சிகிச்சை எடுத்து கொண்டிருப்பவர்களுக்கு மருத்துவ செலவுகள் குறையும். தேவையற்ற பயணங்களையும், அலைச்சலையும் குறைத்து கொள்வது நல்லது. எந்தவித எதிர்ப்புகளையும் சமாளிக்ககூடிய வலிமையும் வல்லமையும் இருக்கும்.

குடும்பம் பொருளாதாரம்

இந்த ஆண்டு முழுவதும் சனி பகவான் 3-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் சுபிட்சமான நிலை, சிறப்பான பொருளாதார நிலை உண்டாகும். உற்றார் உறவினர்களிடம் விட்டு கொடுத்து செல்வது மிகவும் சிறப்பு. தொட்டதெல்லாம் துலங்கும். நினைத்ததெல்லாம் நிறைவேறும். திருமண சுபகாரியங்களுக்கான பேச்சுவார்த்தைகள் கைகூடி மன நிம்மதி ஏற்படும். புதிய வீடு, மனை, வண்டி, வாகனங்கள் வாங்க வேண்டும் என்ற எண்ணங்கள் நிறைவேறும் ஆண்டாக இவ்வாண்டு இருக்கும்.

உத்தியோகம்

உத்தியோக ரீதியாக உயர்வான நிலையினை அடைவீர்கள். இருக்கும் இடத்தில் ராஜ மரியாதை கிடைக்கும். உங்களின் நிர்வாகத் திறனும், செயலாக்கமும் அனைவரையும் வியப்படையச் செய்யும், உயர்பதவிகள் தேடி வரும். புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கேற்ப எதிர்பார்க்கும் சம்பளத்துடன் வேலை வாய்ப்பு அமையும். வெளியூர் மற்றும் வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய விரும்புபவர்களின் விருப்பம் நிறைவேறும். உணவு விஷயத்தில் கட்டுப்பாடுடன் இருப்பது நல்லது.

தொழில் வியாபாரம்

தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு இந்த ஆண்டு ஒரு பொற்காலமாக அமையும் என்று சொன்னால் அது மிகையாகாது. நீங்கள் நினைத்ததெல்லாம் நிறைவேறும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். வெளியூர் வெளிநாட்டுத் தொடர்புகளால் லாபம் பெருகும். கூட்டாளிகள் மிகவும் நட்புடன் செயல்பட்டு ஆதரவாக இருப்பார்கள். தொழிலாளர்களின் உதவிகள் மேலும் அபிவிருத்தியைப் பெருக்க உதவும். எதிரிகளும் நண்பர்களாக மாறுவார்கள். புதிய நவீன கருவிகள் வாங்க அரசு வழியில் உதவிகள் கிடைக்கும்.

பெண்கள்

பணவரவுகள் தாராளமாக இருப்பதால் பொன், பொருள், சேரும். புத்திரர்களால் மகிழ்ச்சி நிலவும். ஆன்மிக தெய்வீக பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். சிலருக்கு பூமி, மனை, வண்டி, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்துக் கொள்வது, நேரத்திற்கு உணவு உண்பது நல்லது. உற்றார் உறவினர்களிடம் பேச்சில் பொறுமையுடன் இருப்பது நல்லது. எடுக்கும் முயற்சிகளில் நல்ல மேன்மைகள் அடைய முடியும். கணவன்- மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது.

கொடுக்கல்- வாங்கல்

கொடுக்கல்- வாங்கல் சரளமாக இருக்கும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி முன்னேற்றமான பலன்களை அடைவீர்கள். எதிரிகளும் நண்பர்களாக மாறுவார்கள். உங்களுக்குள்ள வம்பு வழக்குகளில் தீர்ப்பு சாதகமாக இருக்கும். இந்த ஆண்டு சர்ப்ப கிரகங்கள் சாதகமின்றி சஞ்சரித்தாலும் ஆண்டு முழுவதும் சனி சாதகமாக சஞ்சரிப்பதால் சகல விதத்திலும் லாபங்களை பெற முடியும்.

அரசியல்

இந்த வருடம் மக்கள் செல்வாக்கிற்கு காரகனாகிய சனி 3-ல் சஞ்சரிப்பதால் உங்களுக்கு மக்களின் ஆதரவு பெருகும். எதிர்பாராத மாண்புமிகு பதவிகள் தேடி வரும். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றி நல்ல பெயரை எடுப்பீர்கள். சமுதாயத்தில் உங்களின் பேச்சுக்கு மதிப்பும் மரியாதையும் உயரும். வெளியூர் வெளிநாடுகளுக்கு பயணங்களை மேற்கொள்வீர்கள்.

விவசாயிகள்

விவசாயிகளுக்கு உழைப்பிற்கேற்ற பலனை அளிக்கக் கூடிய ஆண்டாக இந்த ஆண்டு இருக்கும். மகசூல் பெருகும். விளைபொருளுக்கேற்ற விலையினை சந்தையில் பெறுவீர்கள். கால்நடைகளால் லாபம் கிடைக்கும். புதிய பூமி, மனை வாங்கும் யோகம் உண்டாகும். அசையாச் சொத்து வகையில் இருந்த பிரச்சினைகள் ஒரு முடிவுக்கு வரும். பங்காளிகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் அனைத்தும் விலகும்.

கலைஞர்கள்

கலைஞர்களுக்கு தொழிலில் புதிய வாய்ப்புகள் தேடி வரும். உங்களுக்கேற்ற கதாபாத்திரங்கள் அமைவதால் உங்கள் திறமைகள் அனைத்தும் வெளிப்படும். அரசு வழியில் கௌரவிக்கப் படுவீர்கள். பணம் வரவுகளும் தாராளமாக இருப்பதால் சுகவாழ்வு, சொகுசு வாழ்வு யாவும் சிறப்பாக அமையும். ஆடம்பர பங்களாக்களும், கார் வசதிகளும் உண்டாகும். வெளிநாடுகளுக்கும் பட பிடிப்பிற்காக பயணங்கள் மேற்கொள்வீர்கள்.

மாணவ- மாணவியர்

கல்வியில் நல்ல ஈடுபாடு உண்டாகும். முழு முயற்சியுடன் பாடுபட்டால் அதிக மதிப்பெண்களைப் பெற முடியும். பெற்றோர் ஆசிரியர்களின் ஆதரவும், நல்ல நண்பர்களின் நட்பும் உங்களை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்லும். விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பாக ஈடுபட்டு பரிசுகளை தட்டிச் செல்வீர்கள்.

தனுசு

மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்

எந்த காரியத்திலும் சுறுசுறுப்பாகச் செயல்பட்டு வெற்றிகள் பல பெறக்கூடிய ஆற்றல் கொண்ட தனுசு ராசி நேயர்களே! உங்கள் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த சார்வரி வருடத்தில் உங்கள் ராசியதிபதி குரு பகவான் வரும் ஆனி 15 (30-06-2020) முடியவும் அதன் பின்பு கார்த்திகை 5-ஆம் தேதி (20-11-2020) முதல் உங்கள் ராசிக்கு தன ஸ்தானமான 2-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்க கூடிய இனிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கும். கடந்த கால பொருளாதார நெருக்கடிகள் விலகி படிப்படியான முன்னேற்றங்களை அடைவீர்கள் என்றாலும் ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வது நல்லது. குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய இனிய நிகழ்ச்சிகள் நடைபெறும் திருமண சுபகாரியங்களும் கைகூடும். தொழில் வியாபாரத்தில் கடந்தகால நெருக்கடிகள் குறைந்து படிப்படியான முன்னேற்றம் ஏற்படும். புதிய யுக்திகளைக் கையாளக் கூடிய வாய்ப்பு உண்டு. உத்தியோகஸ்தர்கள் கௌரவமான பதவிகளையும், ஊதிய உயர்வுகளையும் பெற்றாலும் வேலைபளு காரணமாக அதிக நேரம் உழைக்க வேண்டிய நிலை ஏற்படும். வெளியூர் வெளிநாடுகளுக்குச் செல்லக் கூடிய வாய்ப்பு, பயணங்களால் அனுகூலங்களும் உண்டாகும்.

இவ்வாண்டு முழுவதும் சனி பகவான் உங்கள் ஜென்ம ராசிக்கு தனஸ்தானமான 2-ல் சஞ்சரிக்க இருப்பதால் உங்களுக்கு ஏழரைச்சனி பாதச்சனி நடைபெறுகிறது. இதனால் தேவையற்ற அலைச்சல், டென்ஷன், நெருங்கியவர்களிடம் கருத்து வேறுப்பாடு ஏற்படும். உடல்நிலை ஓரளவுக்கு சாதகமாக இருந்தாலும் குடும்பத்தில் எதிர்பாராத மருத்துவ செலவுகள் உண்டாகும். உங்கள் வேலையில் மட்டும் கவனம் செலுத்துவதும் முடிந்த வரை மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருப்பதும் நல்லது. குரு பகவான் வரும் ஆனி 15 முதல் கார்த்திகை 5 வரை (30-06-2020 முதல் 20-11-2020) ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதால் இக்காலங்களில் கொடுக்கல்- வாங்கலில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது.

இவ்வாண்டு தொடக்கத்தில் ஜென்ம ராசியில் கேது, 7-ல் ராகு சஞ்சரிப்பதால் கணவன்- மனைவியிடையே சிறுசிறு மனஸ்தாபம் ஏற்படும் என்றாலும் எதையும் சமாளிக்கும் வலிமை உண்டாகும். வரும் புரட்டாசி 7 (23-09-2020) முதல் ராகு 6-லும் கேது 12-லும் சஞ்சரிக்க இருப்பதால் குடும்பத்தில் நிம்மதி, பிரிந்து சென்ற உறவினர்களும் ஒற்றுமை பாராட்டுகின்ற நிலை, சகல விதத்திலும் முன்னேற்றமான பலன்கள் ஏற்படும்.

உடல் ஆரோக்கியம்

உங்களின் உடல் ஆரோக்கியமானது ஒரளவுக்கு சுமாராக இருக்கும். அடிக்கடி சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் சிறு செலவுகளுக்குப்பின் குணமாகும். தேவையற்ற அலைச்சல், டென்ஷன், நெருங்கியவர்களிடம் கருத்து வேறுப்பாடுகள் காரணமாக மன உளைச்சல் உண்டாகும். முடிந்த வரை அனைவரையும் அனுசரித்துச் செல்வதும் பேச்சில் நிதானத்தைக் கடைபிடிப்பதும் நல்லது. நேரத்திற்கு உணவு உண்பது நல்லது. ஆண்டின் பிற்பாதியில் சாதகமான பலன்களை அடைவீர்கள்.

குடும்பம் பொருளாதாரம்

இவ்வாண்டில் திருமண சுபகாரியங்கள் கைகூடி குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். புதிய வீடு, வண்டி, வாகனங்கள் வாங்கும் வாய்ப்பும் அதற்காக கடன் ஏற்படும் சூழ்நிலையும் உண்டு. குடும்ப ஒற்றுமை ஆண்டின் பிற்பாதியில் சிறப்பாக இருக்கும். பணவரவுகள் திருப்திகரமாக இருந்தாலும் ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வது நல்லது. பூர்வீகச் சொத்துகளால் சிறுசிறு விரயங்கள் ஏற்பட்டாலும் அதன் மூலம் ஒரளவுக்கு அனுகூலப் பலன்களைப் பெறுவீர்கள்.

உத்தியோகம்

உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும். எதிர்பார்க்கும் உயர்பதவிகள் தாமதப்பட்டாலும் ஊதிய உயர்வுகள் தடையின்றி கிடைக்கும். கொடுத்த பணிகளைக் குறித்த நேரத்தில் செய்து முடித்து உயரதிகாரிகளின் பாராட்டுதல்களைப் பெறுவீர்கள். எந்தவொரு காரியத்திலும் சிந்தித்து செயல்பட்டால் அனுகூலமான நற்பலன்களைப் பெற முடியும். வேலைபளு காரணமாக மன நிம்மதி குறையும்.

தொழில் வியாபாரம்

தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு சிறசிறு போட்டி பெறாமைகளை சமாளிக்க வேண்டி இருந்தாலும் எதிர்பார்த்த லாபத்தைப் பெற முடியும். புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் சிந்தித்து செயல்பட்டால் அனுகூலமானப் பலன்களை அடையலாம். வெளியூர் வெளிநாடுகள் மூலம் ஆதாயங்களை பெற முடியும். முடிந்த வரை கூட்டாளிகளை அனுசரித்து செல்வது, தொழிலாளர்களிடம் தட்டி கொடுத்து வேலை வாங்குவது நல்லது.

பெண்கள்

திருமண வயதை எட்டியவர்களுக்கு மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும். குடும்பத்தில் ஒற்றுமை சுமாராக இருக்கும். பேச்சில் பொறுமையுடன் இருந்தால் தேவையற்ற மன கசப்புகள் குறையும். பண வரவுகள் நன்றாக இருக்கும். பகைமை பாராட்டிய உறவினர்களும் தேடி வந்து நட்புக்கரம் நீட்டுவார்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது, தேவையற்ற பயணங்களை தவிர்த்து விடுவது நல்லது.

கொடுக்கல்- வாங்கல்

பணவரவுகள் ஒரளவுக்கு சிறப்பாக இருக்கும். கமிஷன் ஏஜென்ஸி, காண்டிராக்ட் போன்ற துறைகளில் இருப்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். கொடுத்த கடன்களும் திருப்திகரமாக வசூலாகும். பெரிய தொகைகளை கையாளும் விஷயத்தில் சற்று சிந்தித்து செயல்படுவது மூலம் எளிதில் ஈடுபடுத்தி லாபம் காண முடியும்.

அரசியல்

அரசியல்வாதிகள் உடனிருப்பவர்களை அனுசரித்துச் செல்வது, பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது, எதிலும் சிந்தித்து செயலாற்றுவது நல்லது. மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை எப்பாடுபட்டாவது காப்பாற்றி அனைவரின் ஆதரவையும் பெறுவீர்கள். எதிர்பார்த்துக் காத்திருக்கும் உயர்பதவிகள் சில தடைகளுக்குப்பின் கிடைக்கப் பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள்.

விவசாயிகள்

மகசூல் சற்று சுமாராக இருந்தாலும் சந்தையில் நல்ல விலை போகும். பங்காளிகளை அனுசரித்துச் செல்வதும் வாய்க்கால் வரப்பு பிரச்சினைகளில் கவனமாக கையாள்வதும் நல்லது. தன வரவுகள் ஒரளவிற்கு தாராளமாக இருப்பதால் குடும்பத்தில் தேவைகள் பூர்த்தியாகும். கால் நடைகளால் தேவையற்ற வீண் செலவுகள் ஏற்படும். ஆழ்கிணறு போடுவதற்காகவும் புதிய நவீன கருவிகள் வாங்குவதற்காகவும் கடன் வாங்க நேரிடும்.

கலைஞர்கள்

கலைஞர்கள் கையிலிருக்கும் வாய்ப்புகளை நழுவிடாமல் பாதுகாத்துக் கொள்வது நல்லது. பொருளாதார நிலை சாதகமாக இருப்பதால் சுகவாழ்வு, சொகுசு வாழ்வு யாவும் ஒரளவுக்கு சிறப்பாக இருக்கும். வெளியூர் வெளிநாடுகளுக்குச் செல்லக்கூடிய வாய்ப்புகள் அமையும். நீண்ட நாட்களாக வராமல் இருந்த பணவரவுகள் தடையின்றி வந்து சேரும்.

மாணவ- மாணவியர்

கல்வியில் சற்று மந்த நிலை ஏற்பட்டாலும் விடாமுயற்சியுடன் செயல்பட்டால் சாதகமான பலனைப் பெற முடியும். உடன் பழகும் நண்பர்களிடம் கவனமுடன் செயல்படுவது, பெற்றோர், ஆசிரியர்களின் அறிவுரையை கேட்டு நடப்பதன் மூலம் நற்பலன் உண்டாகும். விளையாட்டு போட்டிகளில் ஈடுபடும் போது மிகவும் கவனமுடன் இருப்பது நல்லது.

மகரம்

உத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம்1,2-ஆம் பாதங்கள்

பிடித்ததை விடாத பிடிவாதக்காரர் என்றாலும் வீண் பிடிவாதக்காரராக இல்லாமல் எதிலும் நிதானமுடன் செயல்படும் மகர ராசி நேயர்களே! உங்கள் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த சார்வரி வருடத்தில் உங்கள் ராசியாதிபதி சனி பகவான் திருக்கணிதப்படி ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதால் ஏழரைச் சனியில் ஜென்மச்சனி நடைபெறுகிறது. இதனால் உங்களது உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது உணவு விஷயத்தில் கட்டுப்பாடுடன் இருப்பது நல்லது.

இவ்வாண்டில் தன காரகன் ஆண்டு கோள் என வர்ணிக்கப்படும் குரு பகவான் உங்கள் ராசிக்கு ஜென்ம ராசி மற்றும் 12-ல் சஞ்சரிப்பதால் பண வரவுகள் சுமாராக தான் இருக்கும். வரவுக்கு மிறிய செலவுகள் ஏற்படலாம் என்பதால் எதிலும் சிக்கனமாக செயல்படுவது ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வது நல்லது. குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. குரு பார்வை 7-ம் வீட்டிற்கு உள்ளதால் திருமண சுபகாரியங்கள் கைகூடும். உற்றார் உறவினர்கள் ஒரளவுக்கு சாதகமாக செயல்படுவார்கள். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு ஒரளவுக்கு அனுகூலங்கள் இருந்தாலும் கூட்டாளிகளை அனுசரித்து செல்வது, வேலையாட்களிடம் சற்று கவனமுடன் இருப்பது நல்லது. பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் சிந்தித்துச் செயல்படுவதும். அப்படி செய்ய வேண்டிய கட்டாயம் இருந்தால் உங்கள் பெயரில் செய்யாமல் குடும்ப உறுப்பினர்கள் பெயரில் செய்வது நல்லது. உத்தியோகத்தில் எதிர்பார்க்கும் உயர்வுகளும், பண வரவும் இருக்கும் என்றாலும் வேலைபளு சற்று அதிகப்படியாக இருக்கும். சக ஊழியர்களிடமும், மேலதிகாரிகளிடமும் பேசும் போது சற்று பொறுமையுடன் இருப்பது நல்லது. பொதுவாக ஏழரைச்சனி நடைபெற்றால் கெடுப்பலன்கள் ஏற்படும் என்றாலும் சனி உங்கள் ராசியாதிபதி என்பதால் மற்ற ராசி நேயர்களுக்கு கெடுதியை தருவது போல அதிக கெடுதியை உங்களுக்கு ஏற்படுத்தாது.

இவ்வாண்டில் உங்களுக்கு மிகவும் சிறப்பான அமைப்பு என்னவென்றால் உங்கள் ராசிக்கு சர்ப கிரகமான ராகு 6-ல் வரும் புரட்டாசி 7 (23-09-2020) வரையும் அதன் பின் ஏற்படும் ராகு- கேது பெயர்ச்சி மூலம் கேது 11-ல் சஞ்சரிக்க இருப்பதால் எவ்வளவு நெருக்கடிகள் இருந்தாலும் எதையும் எதிர்கொண்டு வெற்றி மேல் வெற்றி அடையும் வாய்ப்பு உங்களுக்கு ஏற்படுத்தும் அமைப்பாகும். பொருளாதார பிரச்சினைகள் இருந்தாலும் கிடைக்க வேண்டிய நேரத்தில் தக்க சமயத்தில் பண வரவுகள் கிடைத்து உங்களது அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும்.

உடல் ஆரோக்கியம்

உங்களுக்கு ஏழரைச் சனியில் ஜென்மச் சனி நடைபெறுவதால் வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் அஜீரணக் கோளாறு, உடல் சோர்வு, மந்தமான நிலை ஏற்படலாம் என்பதால் நேரத்திற்கு உணவு உண்பது, முடிந்த வரை பொறுப்புகளை குறைத்து கொள்வது நல்லது. குடும்பத்தில் மனைவி பிள்ளைகளால் மருத்துவ செலவுகள் ஏற்படும் என்றாலும் இந்த வருட சர்ப்ப கிரகங்கள் சாதகமாக சஞ்சரிப்பதால் எதையும் சமாளித்து விடும் ஆற்றல் உண்டாகும். மற்றவர்கள் விஷயத்தில் தலையீடு செய்யாது இருப்பது உடல் நலத்திற்கும், மனநலத்திற்கும் நல்லது. தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது, வீண் அலைச்சலைக் குறைக்கும்.

குடும்பம் பொருளாதாரம்

சர்ப்ப கிரகங்கள் சாதகமாக சஞ்சரிப்பதால் குடும்பத்தில் ஒற்றுமை, மகிழ்ச்சி, சுபிட்சம் உண்டாகும். திருமண சுப காரியங்கள் கைகூடக் கூடிய யோகம், புத்திர வழியில் பூரிப்பு ஏற்படும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். உங்களுக்கு ஏழரைச் சனியில் ஜென்மச் சனி நடைபெறுவதால் நெருங்கியவர்களை அனுசரித்துச் செல்வதும், ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துக் கொண்டு பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாது இருப்பதும் மிகவும் நல்லது.

உத்தியோகம்

உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் கவனமுடன் செயல்படுவது நல்லது. உங்களுக்கு ஏழரைச்சனி நடைபெறுவதால் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படும் என்றாலும் சர்ப்ப கிரகங்கள் சாதகமாக சஞ்சரிப்பதால் எதையும் சமாளிப்பீர்கள். உயரதிகாரிகளின் ஆதரவுகளும் மகிழ்ச்சியினை உண்டாக்கும். எதிர்பார்த்த ஊதிய உயர்வுகள் கிடைத்தாலும் வேலைபளு மிகவும் அதிகப்படியாக இருந்து அதிக நேரம் உழைக்க வேண்டி இருக்கும். பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதைத் தவிர்த்து அனைவரையும் அனுசரித்து நடப்பது நல்லது.

தொழில் வியாபாரம்

தொழில் வியாபாரம் செய்பவர்கள் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் கவனம் தேவை. தேவையற்ற பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். தொழிலில் போட்டி பொறாமைகளால் சற்று மந்த நிலை நிலவினாலும் பொருட்தேக்கம் ஏற்படாமல் சமாளித்து விடமுடியும். சர்ப்ப கிரகங்கள் சாதகமாக சஞ்சரிப்பதால் வெளியூர் வெளிநாட்டுத் தொடர்புடையவற்றால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். கிடைக்கும் வாய்ப்புகளை நழுவ விடாமல் பார்த்து கொள்ளவும்.

பெண்கள்

உங்களது ஆரோக்கியத்தில் கவனம் எடுத்துக் கொள்வது நல்லது. வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் கர்ப்பப்பை சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் ஏற்படலாம் என்பதால் கவனமாக இருப்பது நல்லது. கணவன்- மனைவி ஒற்றுமை சிறப்பாக இருப்பது மன அமைதியை தரும். பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது குடும்ப ஒற்றுமையைக் காப்பாற்ற உதவும். பணவரவுகள் சற்று அனுகூலமாக இருக்கும். திருமணம் போன்ற சுப காரியங்கள் கை கூடும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும்.

கொடுக்கல்- வாங்கல்

சர்ப்ப கிரகங்கள் சாதகமாக சஞ்சரிப்பதால் பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் ஏற்படும் எந்த வித சூழ்நிலையையும் சமாளித்து ஏற்றம் அடைவீர்கள். கொடுத்த கடன்கள் திருப்திகரமாக வசூலாகும். கமிஷன் ஏஜென்ஸி, காண்டிராக்ட் போன்ற துறைகளில் லாபம் கிட்டும் என்றாலும் ஏழரை சனி நடப்பதால் வீண் பிரச்சினைகளை சந்திக்கக் கூடிய சந்தர்ப்பங்கள் ஏற்படக் கூடும் என்பதால் பெரிய தொகைகளை கையாள்வதில் மிகவும் கவனமாக இருப்பது நல்லது.

அரசியல்

அரசியல்வாதிகள் மக்களின் ஆதரவைப் பெற சற்று கஷ்டப்பட வேண்டியிருக்கும். மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்ற முடியாமல் போகும் என்பதால் எதிலும் சிந்தித்துச் செயல்படுவது சிறப்பு. எடுக்கும் முயற்சிகளில் தடையும் தாமதமும் உண்டாகும். கட்சிப் பணிக்காக நிறைய செலவு செய்ய நேரிடும். தேவையற்றப் பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும் உடல் நிலை சோர்வடையும்.

விவசாயிகள்

விவசாயிகளுக்கு மகசூல் சுமாராக இருக்கும். புழு, பூச்சி போன்றவற்றின் தொல்லைகளால் வீண் விரயங்கள் ஏற்படும். காய், கனி, பூ வகைகள் மூலம் ஒரளவுக்கு லாபங்களைப் பெற முடியும். புதிய நவீன கருவிகள் வாங்குவதற்காக கடன் வாங்க நேரிடும். குடும்பத்தில் மங்களகரமான சுப காரியங்கள் நடைபெறும். பங்காளிகளை அனுசரித்து செல்வது மூலம் பெரிய பிரச்சினைகளை தவிர்க்க முடியும்.

கலைஞர்கள்

ஏழரைச் சனி நடைபெறுவதால் தொழிலில் முன்னேற்றத் தடைகள் ஏற்படும் என்றாலும் சர்ப்ப கிரகங்கள் சாதகமாக சஞ்சரிப்பதால் நினைத்ததை நிறைவேற்றுவீர்கள். ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வது நல்லது. பணவரவுகள் சற்று சாதகமாக இருக்கும். புதிய வாய்ப்புகள் தேடி வரும் என்றாலும் எதிலும் சற்று கவனமுடன் செயல்படுவதும், உடனிருப்பவர்களை அனுசரித்துச் செல்வதும் உத்தமம். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது.

மாணவ- மாணவியர்

மாணவர்களின் கல்வியில் சற்று மந்தமான நிலை எதிலும் ஈடுபாட்டோடு செயல்பட முடியாத அளவிற்கு படிப்பில் கவனம் குறைவு போன்றவை இருந்தாலும் கிடைக்க வேண்டிய மதிப்பெண்கள் கிடைக்கும். பெற்றோர்களின் ஆதரவுகள் மன நிறைவை தரும். தேவையற்ற நண்பர்களின் சகவாசங்களைத் தவிர்க்கவும்.

கும்பம்

அவிட்டம்3,4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள்

வெள்ளை உள்ளமும், நெறி தவறாத பண்பும் கொண்ட கும்ப ராசி நேயர்களே! உங்கள் அனைவருக்கும் என் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இந்த சார்வரி வருடத்தில் பொன்னவன் என போற்றப்படும் குருபகவான் லாப ஸ்தானமான 11-ல் வரும் ஆனி 15 முதல் கார்த்திகை 5 வரை (30-06-2020 முதல் 20-11-2020) சஞ்சரிப்பதும், சர்ப்ப கிரகமான கேது வரும் புரட்டாசி 7 (23-09-2020) வரை லாப ஸ்தானத்தில் வலுவாக சஞ்சரிப்பது அற்புதமான அமைப்பு என்பதால் உங்களது பொருளாதரா நிலை சாதகமாக இருந்து அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருந்தாலும் நேரத்திற்கு உணவு உண்ண இயலாத நிலை ஏற்படும். இந்த வருடத்தில் உங்கள் ராசியாதிபதி சனிபகவான் திருக்கணிதப் பஞ்சாங்கப்படி விரய ஸ்தானமான 12-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் உங்களுக்கு ஏழரைச் சனியில் விரயசனி நடைபெறுவதால் ஒருபுறம் பண வரவுகள் சிறப்பாக இருந்தாலும் தேவையற்ற திடீர் செலவுகள் ஏற்படலாம் என்பதால் எதிலும் சிக்கனமாக இருப்பது நல்லது. எல்லாம் இருந்தும் அனுபவிக்க முடியாத சூழ்நிலை உண்டாகும். ஏழரைச் சனி நடந்தாலும் சனி உங்கள் ராசியாதிபதி என்பதால் பெரிய கெடுதல்களை ஏற்படுத்தாது.

எடுக்கும் முயற்சிகளில் ஏற்றங்களைப் பெறுவீர்கள். குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும். அசையும் அசையாச் சொத்துகள் வாங்கக் கூடிய யோகம் உண்டாகும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் சில போட்டி பொறாமைகளைச் சந்தித்தாலும் எதிர்நீச்சல் போட்டாவது முன்னேறி விடுவீர்கள். பொருட் தேக்கங்கள் இல்லாமல் லாபகரமான பலன்களை அடைவீர்கள். வேலையாட்கள் ஒத்துழைப்பு சற்று சுமாராக இருக்கும் என்பதால் சற்று கவனமாக செயல்படுவது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும் என்றாலும் வேலைபளு சற்று அதிகமாக இருக்கும். பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதைத் தவிர்த்தாலே வீண் பிரச்சினைகளில் சிக்காமல் விலகிக் கொள்ளலாம். தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது நல்லது.

குரு பகவான் வரும் ஆனி 15 (30-06-2020) முடியவும் அதன் பின்பு கார்த்திகை 5-ஆம் தேதி (20-11-2020) முதல் விரய ஸ்தானமான 12-ல் சஞ்சரிக்க உள்ள நேரங்களில் பண வரவுகள் சற்று சுமாராக இருக்கும் என்பதால் எதிலும் கவனமுடன் செயல்படுவதே நல்லது. குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து செல்வது மூலம் ஏற்படும் எந்த வித நெருக்கடிகளையும் எதிர் கொண்டு வலமான பலன்களை அடையும் வாய்ப்புகள் ஏற்படும்.

உடல் ஆரோக்கியம்

உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்த வேண்டிய ஆண்டாகும். உங்களுக்கு ஏழரைச் சனி நடைபெறுவதால் சிறுசிறு பாதிப்புகள் ஏற்பட்டு வீண் மருத்துவச் செலவுகள் உண்டாகும். நெருங்கியவர்களால் மன நிம்மதி குறையும். உணவு விஷயத்தில் கட்டுப்பாடுடன் இருப்பது சிறப்பு. வண்டி வாகனங்களில் பயணம் செய்யும் போது நிதானமாக இருப்பது நல்லது. மனைவிக்கு சிறு சிறு உடம்பு பாதிப்பு ஏற்படும்.

குடும்பம் பொருளாதாரம்

குடும்பத்தில் உள்ளவர்களை சற்று அனுசரித்துச் செல்வதும், ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து கொள்வதும் நல்லது. கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்களிடம் பேச்சில் நிதானமாக இருப்பது நல்லது. உங்களுக்கு தேவையற்ற நெருக்கடிகள் இருந்தாலும் எதிர்பாராத தன சேர்க்கைகள் ஏற்பட்டு தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும். புத்திர வழியில் சிறுசிறு மனக்கவலைகள் தோன்றினாலும் உடனே சரியாகிவிடும்.

உத்தியோகம்

உத்தியோகஸ்தர்கள் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும் என்றாலும் வேலைப் பளுவும் சற்று அதிகமாக இருக்கும். உங்களின் திறமைகளுக்கு ஏற்ற சன்மானத்தை அடைவீர்கள். பயணங்களால் அனுகூலங்கள் உண்டாகும். உடன் பணிபுரிபவர்கள் செய்யும் தவறுகளுக்கு சில நேரங்களில் நீங்கள் பொறுப்பேற்க வேண்டிய காலம் என்பதால் எதிலும் சற்று சிந்தித்து செயல்படுவதும் தேவையற்ற பிரச்சினைகளில் தலையீடு செய்யாது இருப்பது நல்லது. உயரதிகாரிகளிடம் பேசும் போது பேச்சில் நிதானத்தை கடைபிடிக்கவும்.

தொழில் வியாபாரம்

தொழில் வியாபாரம் செய்பவர்கள் போட்ட முதலீட்டினை எடுக்கும் அளவுக்கு லாபங்கள் கிடைக்கும். நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். புதிய முயற்சிகளில் ஈடுபடும் போது கூட்டாளிகளிடம் கலந்து ஆலோசித்து செயல்படுவது முலம்அபிவிருத்தியைப் பெருக்கிக் கொள்ள முடியும். வேலையாட்களிடம் சற்று விட்டுக் கொடுத்து நடந்து கொண்டால் விண் செலவுகளை குறைத்து கொண்டு ஏற்றத்தை அடைய முடியும். எதிலும் ஒரு முறைக்கு பல முறை சிந்தித்து செயல்பட்டால் எவ்வித நெருக்கடிகளையும் சமாளித்து முன்னேற்றம் காண முடியும்.

பெண்கள்

உடல் ஆரோக்கியத்தில் வயிறு பாதிப்பு ஏற்படலாம் என்பதால் நேரத்திற்கு உணவு உன்பது எதிலும் கட்டுப்பாடுடன் இருப்பது நல்லது. பேச்சில் நிதானத்தைக் கடைபிடிப்பது உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் அவர்களால் உங்களுக்கு சாதகப்பலன் உண்டாகும். பொருளாதார நிலையில் நெருக்கடிகள் நிலவினாலும் நெருங்கியவர்களின் உதவியால் எதையும் சமாளிக்க முடியும். குடும்பத்தில் திருமணம் போன்ற மங்களகரமான சுபகாரியங்கள் சிறு தடைக்கு பின்பு கைகூடும். புத்திரர்களால் சிறுசிறு மனக்குழப்பங்கள் ஏற்பட்டாலும் பெரிய கெடுதியில்லை.

கொடுக்கல்- வாங்கல்

பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் உண்டாகும் என்றாலும் உற்றார் உறவினர்கள் உதவியால் எதையும் சமாளிப்பீர்கள். பணம் கொடுக்கல்- வாங்கலில் கவனமுடன் இருப்பது நல்லது. கொடுத்த கடன்களை வசூல் செய்து விட முடியும். வம்பு வழக்குகளில் ஒரு நல்ல முடிவு கிடைக்கும். கமிஷன் ஏஜென்ஸி, காண்டிராக்ட் போன்ற துறைகளில் இருப்பவர்களுக்கும் நல்ல லாபம் அடைய முடியும். பெரிய தொகைகளை முதலீடுகளில் ஈடுபடுத்தும் போது கவனமாக இருப்பது நல்லது.

அரசியல்

அரசியல்வாதிகளுக்கு தங்கள் பேச்சாலேயே பிரச்சினைகளை சந்திக்க நேரிடும் என்பதால் பேச்சில் சற்று நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது. சனி விரய ஸ்தானத்தில் இருப்பதால் கட்சி பணிகளுக்காக நிறைய செலவு செய்ய நேரிடும். மக்களின் செல்வாக்கினைப் பெற அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வது நல்லது. வெளியூர் வெளிநாடுகளுக்கு செல்லக் கூடிய வாய்ப்புகளும் அதன் மூலம் அனுகூலமும் உண்டாகும்.

விவசாயிகள்

விவசாயிகளுக்கு மகசூல் ஒரளவுக்கு திருப்தி அளிப்பதாக அமையும். விளை பொருளுக்கேற்ற விலையை சந்தையில் பெற முடியும். வாய்க்கால் வரப்பு பிரச்சினைகளால் உறவினர்களிடையே சிறுசிறு மன சஞ்சலங்கள் உண்டாகக் கூடும். எதிலும் சற்று எதிர்நீச்சல் போட வேண்டி இருக்கும். வங்கிக் கடன்கள் தக்க சமயத்தில் கிடைத்து உங்களது தேவைகள் பூர்த்தியாகும். கால்நடைகளால் ஒரளவுக்கு லாபத்தினை அடைவீர்கள்.

கலைஞர்கள்

இந்த ஆண்டு உங்கள் திறமைகள் வெளிப்படும் அளவிற்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும். உங்களுக்கு தேவையற்ற அலைச்சல் ஏற்பட்டாலும் அதன் மூலம் பொருளாதார ரீதியாக மேன்மைகளை அடைய முடியும். ரசிகர்களின் ஆதரவு பெருகும். பண விவகாரங்களில் சற்று கவனமுடன் இருப்பது நல்லது. தேவையற்ற கிசுகிசுக்களால் மன அமைதி குறையும். வெளியூர், வெளிநாடுகளுக்கு செல்லும் வாய்ப்பு ஏற்படும்.

மாணவ- மாணவியர்

கல்வியில் சற்று மந்த நிலை ஏற்பட்டாலும் விடாமுயற்சியுடன் செயல்பட்டால் சாதகமான பலனைப் பெற முடியும். உடன்பழகும் நண்பர்களிடம் சற்று கவனமுடன் செயல்படுவதும், பெற்றோர், ஆசிரியர்களின் அறிவுரையை கேட்டு நடப்பதும் மிகவும் நற்பலனை உண்டாக்கும். விளையாட்டு போட்டிகளில் ஈடுபடும் போது நிதானமாக இருப்பது உத்தமம்.

மீனம்

பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி

நீதி நேர்மை தவறாமல் நடக்கும் பண்பும், ஏழை எளியவர்களுக்கு உதவி செய்யும் ஆற்றலும் கொண்ட மீன ராசி நேயர்களே! உங்கள் அனைவருக்கும் என் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இந்த சார்வரி வருடத்தில் ஒரு ராசியில் அதிக காலம் சஞ்சரிக்கும் கிரகமான சனி பகவான் திருக்கணிப்படி இவ்வாண்டு முழுவதும் உங்கள் ராசிக்கு லாப ஸ்தானமான 11-ஆம் வீட்டில் சஞ்சரிப்பது அற்புதமான அமைப்பாகும். உங்கள் ராசியாதிபதி குரு பகவான் வரும் ஆனி 15 (30-06-2020) முடியவும் அதன் பின்பு கார்த்திகை 5-ஆம் தேதி (20-11-2020) முதல் லாப ஸ்தாகமான 11-ல் சஞ்சரிக்க இருப்பதும் சிறப்பாகும். உங்களது உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதால் எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். கடந்த கால மருத்துவ செலவுகள் அனைத்தும் குறையும், இந்த ஆண்டு நீங்கள் நினைத்ததெல்லாம் நிறைவேறும். மண்ணைத் தொட்டாலும் பொன்னாகும். பணம் பல வழிகளில் தேடி வந்து உங்கள் பாக்கெட்டை நிரப்பும். கடன்களை பைசல் செய்வீர்கள். ஆடை, ஆபரணச் சேர்க்கை, புதிய வீடு, மனை, வண்டி வாகனங்கள் வாங்கும் வாய்ப்பு உண்டாகும். உற்றார் உறவினர்களின் உபசரணைகள் உங்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தும். கணவன்- மனைவியிடையே அன்யோன்னியம் அதிகரிக்கும். சிலர் நினைத்தவரை கைபிடிப்பர். சிறப்பான புத்திர பாக்கியம் உண்டாகும். பூர்வீகச் சொத்து வழியில் இருந்த பிரச்சினைகள் ஒரு நல்ல முடிவுக்கு வரும். கொடுக்கல்- வாங்கல் லாபம் தரும். எதிரிகள் கூட நண்பர்களாக மாறுவார்கள். தொழில் வியாபாரத்தில் கடந்த கால தேக்கங்கள் முற்றிலும் விலகி சிறப்பான லாபம் கிடைக்கும். புதிய யுக்திகளைக் கையாண்டு வெற்றி மேல் வெற்றி பெறுவீர்கள். சிலருக்கு தொழிலை விரிவு படுத்தும் யோகம் உண்டு. உத்தியோகஸ்தர்களுக்கு கௌரவமான பதவிகள் கிடைக்கப் பெற்று சமுதாயத்தில் மதிப்பும் மரியாதையும் உயரும். பெரிய மனிதர்களின் ஆசியும் ஆதரவும் கிட்டும்.

உங்கள் ராசிக்கு 10-ல் குரு பகவான் ஆனி 15 முதல் கார்த்திகை 5 வரை (30-06-2020 முதல் 20-11-2020) சஞ்சரிப்பதால் இக்காலத்தில் பண விஷயத்தில் சற்று சிக்கனத்துடன் இருப்பதும், ஆடம்பர செலவுகளை சற்று குறைத்து கொள்வதும் நல்லது. சர்ப கிரகமான ராகு வரும் புரட்டாசி 7 (23-09-2020) முதல் உங்கள் ராசிக்கு 3-ஆம் வீட்டில் சஞ்சரிப்பது மிகவும் அற்புதமான அமைப்பு என்பதால் உங்களது முயற்சிகளுக்கு பரிபூரண வெற்றியும் உங்களுக்கு இருக்கும் சிறுசிறு அலைச்சல்கள் குறையும் வாய்ப்புகளும் உண்டாகும்.

உடல் ஆரோக்கியம்

உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருந்து எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். கடந்த கால மந்த நிலை விலகும். மனைவி பிள்ளைகளும் ஆரோக்கியத்துடன் இருப்பார்கள். எடுக்கும் முயற்சிகளில் சுறுசுறுப்பாக செயல்பட்டு ஏற்றத்தைப் பெறுவீர்கள். கடந்த கால உடல் ரீதியான பிரச்சினைகள் முழுமையாக குறைந்து மன நிம்மதி உண்டாகும். உற்றார் உறவினர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் மறைவதால் பிரிந்தவர்களும் தேடி வந்து நட்பு பாராட்டுவார்கள்.

குடும்பம் பொருளாதாரம்

குடும்பச் சூழ்நிலையானது மகிழ்ச்சியளிப்பதாக அமையும். உங்கள் கனவுகள் நிறைவேறும். கணவன்- மனைவி இடையே இருந்த கருத்து வேற்றுமை மறைந்து மகிழ்ச்சி ஏற்படும். சிலருக்கு அழகிய குழந்தை பாக்கியம் கிட்டும். தடைப்பட்ட சுப காரியங்கள் கைகூடும். பணவரவுகள் தாராளமாக இருப்பதால் குடும்ப தேவைகளை பூர்த்தி செய்து விட முடியும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் வாய்ப்பு ஏற்படும். ஆடம்பரச் செலவுகளை சற்று குறைத்து கொள்வது நல்லது. ஆண்டின் முற்பாதியில் ராகு 4-ல் இருப்பதால் தேவையற்ற அலைச்சல் இருக்கும்.

உத்தியோகம்

உத்தியோகத்தில் கடந்த கால நெருக்கடிகள் விலகி மன நிம்மதி ஏற்படும். செய்யும் பணியில் உயர்வான நிலை ஏற்படும். கௌரவமான பதவிகள் கிடைக்கும். உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் மகிழ்ச்சியளிப்பதாக அமையும். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றங்கள் கிடைக்கப் பெற்று குடும்பத்தோடு சேருவார்கள். பயணங்களால் மறக்க முடியாத இனிய நிகழ்ச்சிகள் நடைபெறும். புதிய வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும்.

தொழில் வியாபாரம்

தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டி பொறாமைகளும் மறைமுக எதிர்ப்புகள் விலகி நல்ல முன்னேற்றமும் அபிவிருத்தியும் பெருகும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் தடையின்றி கிடைக்கும். கூட்டுத் தொழிலில் கூட்டாளிகள் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். தொழிலை விரிவு செய்யும் நோக்கம் நிறைவேறும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புகளால் அனுகூலம் ஏற்படும். நவீன கருவிகளை வாங்கும் வாய்ப்பு உண்டாகும். வேலையாட்கள் ஆதரவு சிறப்பாக இருக்கும்.

பெண்கள்

உடல்நிலையில் சிறுசிறு பாதிப்புகள் ஏற்பட்டாலும் எதையும் சமாளித்து ஏற்றமிகு பலன்களைப் பெறுவீர்கள். கணவன்- மனைவி சற்று விட்டுக் கொடுத்து நடப்பதும் நெருங்கியவர்களை அனுசரித்துச் செல்வதும் நல்லது. நினைத்த காரியங்கள் நிறைவேறும். தடைப்பட்ட திருமண சுபகாரியங்கள் கைகூடி மகிழ்ச்சி அளிக்கும். அசையும், அசையாச் சொத்துக்கள் வாங்கக்கூடிய வாய்ப்பும் உண்டாகும். பணிபுரியும் பெண்கள் எதிர்பாராத உயர்வுகளைப் பெறுவார்கள். ஆடை, ஆபரணம் சேரும்.

கொடுக்கல்- வாங்கல்

இந்த ஆண்டில் சனி 11-ல் சஞ்சரிப்பதால் பணவரவுகள் சரளமாக இருக்கும். பிறரை நம்பி முன் ஜாமீன் கொடுப்பதில் சற்று கவனத்துடன் இருப்பது நல்லது. வீண் வம்பு வழக்குகளில் இருந்த பிரச்சினைகள் விலகி மன நிம்மதி ஏற்படும். கமிஷன் ஏஜென்ஸி, காண்டிராக்ட் போன்ற துறைகளில் இருப்போர் ஏற்றமான பலன்களை பெற முடியும். புதிய நட்புகள் கிடைத்து பல்வேறு வகையில் வளமான பலனை அடைவீர்கள்.

அரசியல்

அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த கௌரவமான பதவிகள் கிடைக்கும். தொண்டர்கள் மற்றும் மக்களின் ஆதரவுகள் சிறப்பாக அமைந்து மனமகிழ்ச்சியை ஏற்படுத்தும். எடுக்கும் காரியங்களை சிறப்பாக செய்து முடித்து மக்களின் ஆதரவைப் பெறுவீர்கள். உடனிருப்பவர்களை அனுசரித்து நடந்து கொண்டால் தேவையற்ற பிரச்சினைகளில் இருந்து தப்பித்துக் கொள்ள முடியும்.

விவசாயிகள்

எல்லா வகையிலும் ஏற்றமிகுந்த பலன்கள் ஏற்படும். வேலையாட்களின் ஒத்துழைப்பால் லாபம் பெருகும். நவீன முறைகளை கையாண்டு பயிர் விளைச்சலை பெருக்குவீர்கள். அரசு வழியில் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். பொருளாதாரம் மேன்மையடையும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிக்கும். கடன்கள் குறையும். பங்காளிடம் இருந்த கருத்து வேறுப்பாடுகள் மறையும்.

கலைஞர்கள்

உங்களை தேடி நல்ல வாய்ப்புகள் வரும். உங்கள் திறமைகளை வெளிப்படுத்தக்கூடிய அளவிற்கு கதாபாத்திரங்கள் அமையும். தடைப்பட்ட சம்பள பாக்கிகள் கைக்கு கிடைக்கும். வெளியூர் வெளிநாடுகளுக்கு செல்லக்கூடிய வாய்ப்புகளும் அதன் மூலம் சாதகமான பலன்களையும் பெறுவீர்கள். நவீன பொருட்கள் வாங்கும் யோகம் உண்டாகும்.

மாணவ- மாணவியர்

கல்வியில் நல்ல ஈடுபாடு உண்டாகும். கடந்த கால மந்த நிலைகள் விலகும். நண்பர்களின் உதவி தக்க சமயத்தில் கிடைக்கும். அரசு வழியில் ஆதரவுகள் உண்டாகும். விளையாட்டுப் போட்டி, கட்டுரை, கவிதை போன்றவற்றில் பரிசுகளைத் தட்டிச் செல்வீர்கள். சுற்றுலா செல்லும் வாய்ப்புகள் அமையும்.திருத்தமிழ்
© 2023 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore