மத்திய பட்ஜெட் 2018-19

Updated On 03/02/2018

பட்ஜெட் 2018 -19: முக்கிய அம்சங்கள்

* வருமான வரி உச்சவரம்பில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை.

* சம்பளதாரர்களுக்கு மருத்துவ மற்றும் போக்குவரத்திற்கு ரூ.40,000 வரை நிரந்தர கழிவாக பெறலாம்.

* விவசாய பொருட்கள் சந்தைப்படுத்துதலுக்கு ரூ. 2,000 கோடி நிதியுதவி.

* மூத்த குடிமக்கள் வங்கி சேமிப்பு வட்டிக்கு ரூ.50,000  வரை விலக்கு பெறலாம்

* அனைத்து மூத்த குடிமக்களும், ரூ.50,000 வரை மருத்து இன்சூரன்ஸ்களுக்கு கழிவு பெறலாம்

* மிக மோசமான நோய் பாதிப்புகளுக்கு ரூ. 1 லட்சம் வரை விலக்கு பெறலாம்

* சவுபாக்யா யோஜனா திட்டத்தின் கீழ் 4 கோடி வீடுகளுக்கு இலவச மின்சார இணைப்பு வழங்கப்படும்

* உஜ்வாலா திட்டத்தின் கீழ் 8 கோடி ஏழை பெண்களுக்கு இலவச கேஸ் இணைப்பு வழங்கப்படும்

* அனைத்து பயிர்களுக்கும் குறைந்தபட்ச ஆதார விலை வழங்கப்படும்

*  சிறு மற்றும் குறு நிறுவனங்களுக்கு உற்பத்தி செலவு மானியம் 1.5 மடங்கு அதிகரிக்கப்படும்

* அனைத்து துறைகளிலும் 12% புதிய ஊழியர்கள் பணியமர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்

* தேசிய அளவில் புதிய உடல்நல பாதுகாபு திட்டம் செயல்படுத்தப்படும். இதன்படி 5 லட்சம் ரூபாய்க்கான குடும்ப மருத்துவ காப்பீடு வழங்கப்படும்.

* ரயில்வ திட்டங்களுக்கு 1.48 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்படும்

* அரசு நிறுவனங்களின் பங்குகளை விலக்கிக் கொள்வதன் மூலம் 80,000 கோடி ரூபாய் நிதி திரட்டப்படும்

* குடியரசு தலைவரின் சம்பளம் 5 லட்சமாக உயர்த்தப்படும். விலைவாசி உயர்வுக்கு ஏற்ப எம்.பிக்களின் சம்பளம் உயர்த்தப்படும்.