வீட்டு வாசலில் மாவிலை தோரணம் கட்டுவதற்கான காரணம் என்ன ?

Updated On

வாசலில் மாவிலை தோரணம் கட்டுவதற்கான காரணம்

வீட்டு வாசல் புறத்தில் மாவிலையை தோரணமாக கட்டுவதன் மூலம் புதிய இல்லத்தின் கிரகபிரவேசம் நிகழ்ச்சியாயிருந்தாலும் வீட்டிற்க்குள் அதிகமாக மக்கள்  குழுமி இருக்கும் நேரத்தில் வெளிப்படும் கார்பன் டை ஆக்சைடை நீக்கி பிராண வாயுவை வெளியேற்றிய வண்ணம் உள்ளது.

ஓர் எளிய வழி, வீட்டு வெளி வாசலில், அடிக்கடி மாவிலைத் தோரணம் கட்டுங்கள்; விசேஷங்களுக்கு மட்டும் தான் கட்டணும் என்றில்லாமல், மாவிலைகள் கிடைக்கும் போதெல்லாம் வாசல் நிலைப் படியில் கட்டிவிடுங்கள்.
‘மாவிலை’ கரியமில வாயுவை எடுத்துக் கொண்டு, பிராண வாயுவைக் கொடுக்கும். நம் உடம்பின் வியர்வை நாற்றத்தையும், காற்றில் ஆவியாகிப்  பரவியிருக்கிற கிருமிகளையும், வாசலிலேயே தடுத்து அழித்து விடும்.
மாவிலை காற்றை சுத்தம் செய்து தூய்மைபடுத்தி புதிய உற்சாகத்தை கொடுக்கும் அதே வேளையில் மஞ்சள் பொடி கொண்டு போட்டு வைப்பது வீட்டினுள் சிறிய சிறிய பூச்சிகளும் விஷ ஜந்துகளும் வரா வண்ணம் தடுக்கின்றது. மஞ்சள் சிறந்த கிருமி நாசினி என்பதாலும் மாவிலையும் மஞ்சளும் வீட்டிற்க்கு களை சேர்ப்பதுடன் நம்மை பாதுக்காக்கவும் செய்கின்றன.
மேலும் கலசங்களில் மாவிலை வைக்க படுகின்றது. சில சமயம் கலசத்தில் வைக்கப்படும் நீரில் வெட்டிவேர், ஏலக்காய், கிராம்பு, சந்தன எண்ணெய், மஞ்சள் பொடி போன்றவை சேர்க்க படும். மாவிலைக்கு நீரில் உள்ள கிருமிகளை நாசம் செய்யும் சக்தி உண்டு. அது கலச நீரை தூய்மை படுத்தி அதிக அளவு ஆக்சிஜன்  வெளியிட்டு கொண்டிருக்கும்.
பல விதமான மக்கள் கூடும் விசேஷங்களில் நெகடிவ் சக்திகளை களைந்து நல்ல ஆரோகியமான சூழல் ஏற்படுத்தும் சக்தி மாவிலைக்கு உள்ளது.


திருத்தமிழ்
© 2023 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore