பிட் காயின் என்றால் என்ன?

Updated On
Bitcoin பிட்காயின்

பிட்காயின் (Bitcoin), மெய்நிகர் நாணயம் அல்லது எண்மநாணயம் என்பது சத்தோசி நகமோட்டோவால் உருவாக்கப்பட்ட ஒரு எண்ணிம நாணயமுறை ஆகும். இப்பயன்பாட்டுக்காக அவர் உருவாக்கிய திறந்த மூல மென்பொருளும் இதே பெயராலேயே அழைக்கப்படுகிறது. சரியிணை வலைப்பின்னல் முறையில் இது இயங்குகிறது.

பெரும்பாலான நாணயமுறைகளைப் போலன்றி, பிட்காயின் நாணயத்தைக் கட்டுப்படுத்தும் நடுவண் அமைப்பு ஏதும் இல்லை. இரகசியக் குறியீட்டு முறையைப் பயன்படுத்துவது மூலம் இதில் அடிப்படை பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மோசடிகளைத் தவிர்க்க ஒரு பிட்காயினை அதன் உரிமையாளர் ஒரு முறை மட்டுமே செலவழிக்க முடியும். ஒரே பிட்காயினை மீண்டும் மீண்டும் பயன்படுத்த முடியாது.

அடையாளம் காட்டாதவர் கூட பிட்காயினைப் பயன்படுத்த முடியும். பிட்காயின்களை தனிப்பட்ட கணிணிகளிலோ அல்லது மூன்றாம் தரப்பு வலைத்தளங்களிலோ சேமிக்க முடியும். எப்படியாக இருந்தாலும் பிட்காயின் முகவரி உள்ள யாருக்கு வேண்டுமானாலும் இணையம் மூலம் பணத்தை அனுப்பலாம். எந்த அரசாங்கமும் பிட்காயினின் மதிப்பை மாற்ற முடியாது. அதிக பிட்காயின்களை உருவாக்கி யாரும் பணவீக்கத்தையும் உருவாக்க முடியாது.

பெரும்பாலும் பிட் காயினைப் பெறுவதற்குக் கைரேகை போன்ற அடையாளம் அவசியம் என்ற போதும், அடையாளம் காட்டாதவர் கூடப் பிட் காயினைப் பயன்படுத்த முடியும். பிட் காயின்களை தனிப்பட்டமுறையில் கணினிகளிலோ அல்லது வலைத்தளங்களிலோ சேமிக்க முடியும். பிட் காயினுக்கு எனத் தனியாகக் கணக்கு வைத்துள்ள யாருக்கு வேண்டுமானாலும் அனுப்பலாம்.



திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore