108 எம்.பி. பிரைமரி கேமராவுடன் உருவாகும் சாம்சங் ஸ்மார்ட்போன்

Updated On

சாம்சங் நிறுவனத்தின் புதிய கேலக்ஸி ஸ்மார்ட்போன் 108 எம்.பி. கேமரா கொண்டிருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்11 சீரிஸ் ஸ்மார்ட்போன் அடுத்த ஆண்டின் முதல் காலாண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. தற்சமயம் கிடைத்திருக்கும் தகவல்களில் புதிய சாம்சங் ஸ்மார்ட்போன் 108 எம்.பி. பிரைமரி கேமரா சென்சார் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
புதிய விவரங்கள் மூன்றாவது ஒன் யு.ஐ. 2.0 பீட்டாவிற்கான சாம்சங் கேமரா செயலியில் எக்ஸ்.டி.ஏ. டெவலப்பர்களிடம் இருந்து கிடைத்திருக்கிறது. கேமரா செயலியில் 12000 – 9000 பிக்சல் ரெசல்யூஷனை சப்போர்ட் செய்கிறது.
செயலியின் குறியீடுகளில் கேலக்ஸி எஸ்11 என குறிப்பிடப்படவில்லை என்றாலும் 108 எம்.பி. சென்சார் கொண்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை கிடைத்திருக்கும் தகவல்களில் கேலக்ஸி எஸ்11 சீரிஸ் ஸ்மார்ட்போனில் 108 எம்.பி. கேமராவுடன் 5X ஆப்டிக்கல் சூம் லென்ஸ் வழங்கப்படுகிறது.
சாம்சங் ஸ்மார்ட்போனின் கேமரா Mi மிக்ஸ் ஆல்ஃபா மற்றும் Mi நோட் 10 ஸ்மார்ட்போன்களில் வழங்கப்பட்டு இருந்ததை போன்று 4-இன்-1 பிக்சல் பின்னிங் தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் என கூறப்படுகிறது. இது குறைந்த வெளிச்சத்திலும் அதிக தெளிவான புகைப்படங்களை எடுக்கும்.
108 எம்.பி. ISOCELL சென்சார் புகைப்படங்களை 27 எம்.பி. தரத்தில் வழங்கும். இது அனைத்து விதமான வெளிச்சங்களிலும் புகைப்படத்தின் தரத்தை குறையாமல் பார்த்துக் கொள்ளும்.
இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி எஸ்11 ஸ்மார்ட்போனில் எக்சைனோஸ் 9830 ஆக்டா-கோர் பிராசஸரும், அமெரிக்காவில் வெளியாகும் மாடல்களில் ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர் வழங்கப்படும் என கூறப்படுகிறது.


திருத்தமிழ்
© 2022 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore