தனுஷ்கோடி இந்தியாவின், தமிழ்நாட்டில், ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் தீவின் தென் கிழக்குப் பகுதியில் உள்ள ஒரு நகரமாகும்.
ராமனின் கையில் இருந்த வில்லினை போன்ற தோற்றம் கொண்ட நிலப்பகுதி இது என்பதால் இதற்கு தனுஷ்கோடி என்ற பெயர் வந்ததாக வரலாறு உண்டு
தனுஷ்கோடி வரலாற்றுக் காலத்தில் பிரிட்டிஷ் இந்தியாவிலும் வணிக மையமாக விளங்கிய துறைமுக நகரம் திகழ்ந்தது
1964 டிசம்பர் 22 நடந்தது என்ன?
ராமேஸ்வரம் அருகில் தனுஷ்கோடி என்ற கிராமத்தை ஒரு புயல் தாக்கியது. அந்தப் புயல் டிசம்பர் மாதம் 22ஆம் நாள் 1964 அன்று தனுஷ்கோடியில் அதிகமான காற்றுடன் புயல் மழை வீசியது. ஆனால் அங்கே இருக்கும் மக்கள், புயல் சாதாரணமாக வருவதுதான் என்று எண்ணி எந்த பயமும் இல்லாமல் இருந்தனர்.
புயல் வந்தால் கடலுக்கு மட்டும் செல்லக்கூடாது என்ற அளவு மட்டுமே அங்கு இருப்பவர்களுக்கு தெரியும். ஆனால் அந்தப் புயலின் தீவிரம் பற்றி யாருக்கும் தெரியாது. அதற்கு காரணம் வங்க கடலில் உருவான புயல் எங்கே, எப்போது, எவ்வளவு வேகத்தில் கரையை கடக்கும் என்று துல்லியமாக கணிக்கும் அளவிற்கு அப்பொழுதைய தொழில்நுட்பம் இல்லை.
ஆனால் அன்று தனுஷ்கோடியை தாக்கிய புயல் கரையை கடந்த பின்புதான் தெரிந்தது அந்தப் புயலின் தீவிரம்.
பாம்பன் பேசஞ்சர் இரயில்
அந்தப் புயல் தீவிரமடைந்த அந்த சமயத்தில் பாம்பன் முதல் தனுஷ்கோடி வரை செல்லும் பாம்பன் பேசஞ்சர் ரயில் அன்று சரியாக இரவு 11.55 மணிக்கு தனுஷ்கோடி நோக்கி வந்து கொண்டிருந்தது. அதில் 115 பயணிகள் பயணித்து வந்தனர். அந்த ரயில் தனுஷ்கோடி ரயில் நிலையம் வர சிறிது மணித்துளிகளுக்கு முன்பு அந்த கடலின் கொந்தளிப்பு அதிகரித்து காற்று அதி வேகமாக வீச தொடங்கியது. அங்கே இருந்த அனைத்து தகவல் தொலைத் தொடர்பு துண்டிக்கப்பட்டு இருந்தது.
புயல் காற்றினால் அனைத்து மின் கம்பங்களும் விழுந்து அந்து இடம் முழுதும் இருள் சூழ்ந்து இருந்தது. அந்த ரயில் வருவது கூட தெரியாத அளவிற்கு இருள் சூழ்ந்திருந்தது. அப்பொழுது திடீரென்று ஒரு பொரும் காற்றுடன் ஒரு பேரலை வந்து அந்த ரயிலை அப்படியே இழுத்து சென்றது, அதில் பயணித்த 115 பயணிகளின் உயிரையும் ஒரே நேரத்தில் பரித்துகொண்டது.
அந்த தனுஷ்கோடி கிராமத்தில் இருந்த மக்களுக்கு என்ன நடக்கிறது என்று கூட தெரியவில்லை. இப்படி ஒரு புயல் வரும் என்று அவர்கள் நினைத்து கூட பார்க்கவில்லை. அங்கே இருந்து தப்பித்த சில மக்கள் தனுஷ்கோடி ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த ரயிலில் ஏறி கதவு, சன்னல் அனைத்தையும் அடைத்து உள்ளே இருந்தனர். அதில் இருந்த மக்களின் உயிர்கள் காப்பாற்றப்பட்டது. பலர் தனது உறவுகளை இழந்து தவித்தனர்.
புயலின் வேகம்
அந்த புயல் தலைமன்னார் கடக்கும் போது 150 கி. மீ வேகத்தில் நகர்ந்தது ஆனால் அது தனுஷ்கோடி நெருங்கிய போது 250 கி. மீ வேகத்தில் தாக்கியது அதன் விளைவினால் 3 கிராமங்களும் கடலுக்கு அடியில் சென்று விட்டது.
தனுஷ்கோடியி்ன் துறைமுகமும் சேதமடைந்தது.
தேசிய இயற்கை பேரழிவு
இது 20ஆம் நூற்றாண்டின் தேசிய இயற்கை பேரழிவு என்று ஐ.நா சபை அறிவித்தது. இந்த இயற்கை பேரழிவில் மொத்தம் 1800 கும் மேற்பட்ட மக்கள் இறந்துவிட்டனர்.
அந்த இயற்கை பெரும் சீற்றம் நடந்து 56 வருடங்களை கடந்து விட்டது. ஆனால் இன்றும் தனுஷ்கோடியில் அந்த இடிந்த கட்டிடங்கள், அப்போது இருந்த மருத்துவமனை, தேவாலயங்களில் இடிந்த சுவர்களுடன் காணலாம். இது எல்லாம் நமக்கு அந்த பெருந்துயரை நினைவு படுத்துகிறது.