அசுவினி முதல் ரேவதி வரை 27 நட்சத்திரங்களுக்கான குரு பெயர்ச்சி பலன்கள் 2021

Updated On

குரு பெயர்ச்சி 2021 – அசுவினி முதல் ரேவதி வரை 27 நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு பலன்கள்

குரு பகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு இடப்பெயர்ச்சியாகிறார். குருப்பெயர்ச்சியினால் சில ராசிக்காரர்களுக்கு தடைகள் நீங்கும். அஸ்வினி முதல் ரேவதி வரை 27 நட்சத்திரக்காரர்களுக்கும் இந்த குருப்பெயர்ச்சி எப்படி இருக்கிறது என்ன பலன்கள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

அஸ்வினி

குருப்பெயர்ச்சியினால் அஸ்வினி நட்சத்திரக்காரர்களுக்கு செல்வாக்கு அதிகரிக்கும். திருமணம் நடைபெறும், சுபகாரியங்கள் நடைபெறும். திருமணமான தம்பதியினருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். அரசு தனியார் வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வும், வேலை செய்யும் இடத்தில் இடம் மாற்றமும் கிடைக்கும். குடும்பத்தில் உற்சாகம் பிறக்கும்.

பரணி

குருபகவானின் அருள் பரிபூரணமாக கிடைக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். அப்பாவின் ஆதரவு கிடைக்கும். பணத்தை முதலீடு செய்யும் முன்பு யோசித்து செய்யவும். சுபகாரியங்கள் அதிகம் நடைபெறும் புது வீடு கட்டும் முயற்சி வெற்றிகரமாக நிறைவேறும். வண்டி வாகன சேர்க்கை நடைபெறும்.

கிருத்திகை

குடும்பத்தில் குதூகலம் பிறக்கும். புதிய தொழில் தொடங்கலாம். அலுவலகத்தில் நிம்மதியான சூழ்நிலை உருவாகும். எடுத்த காரியத்தை சிறப்பாக முடிப்பீர்கள். வார்த்தைகளில் கவனம் தேவை. சொன்ன சொல்லை காப்பாற்ற போராட வேண்டியிருக்கும் பண விவகாரங்களில் கவனம் தேவை.

ரோகிணி

குடும்பத்தில் நிம்மதி, செய்யும் தொழிலில் லாபம் கிடைக்கும். அலுவலகத்தில் சம்பள உயர்வும் கிடைக்கும். நீண்ட நாட்கள் இருந்து வந்த பிரச்சினைகள் தீரும். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும்.

மிருகஷீரிடம்

நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த நிகழ்ச்சிகள் மனதிற்கு மகிழ்ச்சி தரும் வகையில் நடைபெறும். திருமணத்தடைகள் நீங்கும். புது வீடு கட்டுவீர்கள். கடன்கள் அடைபடும். குடும்பத்தில் சுப காரியங்கள் நடைபெறும். மாணவர்கள் உயர்கல்விக்காக வெளியூர் வெளிநாடு செல்வார்கள்.

திருவாதிரை

பண வரவு அதிகரிக்கும். வழக்குகள் சாதகமாக முடியும். அலுவலகத்தில் நல்ல பெயர் கிடைக்கும். அதிகம் நன்மைகள் நடைபெறும். மூத்த, இளைய சகோரதரர்கள், சகோதரிகள் உதவி செய்வார்கள். உடல்நிலை பாதிக்கப்படும் மருத்துவ செலவுகள் ஏற்படும்.

புனர்பூசம்

இதுநாள் வரை இருந்த தடைகள் நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த தடைகள் நீங்கும். வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். அலுவலகத்தில் பதவி உயர்வும், பணியிட மாற்றமும் கிடைக்கும்.

பூசம்

குருப்பெயர்ச்சி நன்மை தரக்கூடியதாக அமையும். குடும்பத்துடன் வெளியூருக்கு உல்லாச பயணம் செல்வீர்கள். உழைப்பிற்கு ஏற்ப அங்கீகாரம் கிடைக்கும். இதுநாள் வரை இருந்த கஷ்டங்கள் நீங்கும்.

ஆயில்யம்

வெளிநாடு சென்று பணி செய்யும் வாய்ப்பு கிடைக்கும். சுபகாரியங்கள் செய்வதற்கு இருந்த தடைகள் நீங்கும். பெண்களுக்கு இந்த குருப்பெயர்ச்சியினால் அதிக நன்மைகள் நடைபெறும். அலுவலகத்தில் புதிய பொறுப்புகள் தேடி வரும்.

மகம்

திருமண யோகம் கூடி வந்து விட்டது. செல்வமும், செல்வாக்கும் தேடி வருகிறது. புது வீடு கட்டலாம். வீடு கட்ட மனை வாங்கலாம். வருமானம் அதிகரிக்கும். அலுவலகத்தில் இருந்த சச்சரவுகள் முடிவுக்கு வரும். சிலருக்கு புதிய வேலைகள் கிடைக்கும். தொழிலில் லாபம் அதிகரிக்கும்.

பூரம்

திருமணத்திற்காக நீண்ட நாட்கள் காத்திருந்தவர்களுக்கு நல்ல வரன் அமையும். திருமணம் செய்தவர்களுக்கு பிள்ளை பாக்கியம் கிடைக்கும். சிலருக்கு சம்பள உயர்வும், பதவி உயர்வும் தேடி வரும்.

உத்திரம்

நல்ல செய்திகள் தேடி வரும். குடும்பத்தில் உறவினர்களிடையே அன்பும் பாசமும் அதிகரிக்கும் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக வர வேண்டிய பணம் கைக்கு வந்து சேரும். குருவின் துணையால் தொழிலில் லாபம் அதிகரிக்கும்.

ஹஸ்தம்

செய்யும் தொழிலில் லாபம் கிடைக்கும். புகழும், பெருமையும் கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். கொடுத்த கடன்கள் திரும்ப வரும். சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். பணம் வரவு அதிகரிக்கும். அலுவலகத்தில் பதவி உயர்வும், சம்பள உயர்வும் தேடி வரும்.

சித்திரை

நல்ல காரியம் நடைபெறுவதற்கு இருந்த தடைகள் நீங்கும், குடும்பத்துடன் ஆன்மீக சுற்றுலா சென்று வருவீர்கள். நிதி வசதிகள் அதிகரிக்கும். அலுவலகத்தில் இருந்து வந்த பிரச்சினைகள் தீரும். புதிய தொழில்கள் தொடங்குவீர்கள்.

சுவாதி

கடன்கள் தீரும். தன தான்யம் அதிகரிக்கும். குடும்பத்தில் உற்சாகம் பிறக்கும். தம்பதியரிடையே ஒற்றுமையும், அன்பும் அதிகரிக்கும். புதிய தொழில் தொடங்கலாம். அம்மாவின் உடல் நலனில் அக்கறை செலுத்துங்கள்.

விசாகம்

திருமண வயதில் உள்ளவர்களுக்கு திருமணம் கைகூடி வரும். கணவன் மனைவி இடையே இருந்த பிரச்சினைகள் தீரும். அலுவலகத்தில் சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கும். எதையும் வெளிப்படையாக கூடி வம்பில் மாட்டிக்கொள்ள வேண்டாம். பணம் கொடுக்கல் வாங்கல் விசயத்தில் கவனமாக இருப்பது நல்லது.

அனுஷம்

வாழ்க்கையில் மகிழ்ச்சியும், உற்சாகமும் அதிகரிக்கும். முன்னோர்கள் சொத்துக்களில் இருந்து பங்கு, பாகங்கள் கிடைக்கும். வழக்குகள் முடிவுக்கு வரும். வெளிநாடு செல்ல முயற்சி செய்யலாம் நன்மைகள் நடைபெறும். அப்பாவின் ஆலோசனையை தவறாமல் கேளுங்கள். காதல் விசயங்களில் கவனம் தேவை.

கேட்டை

குருவின் அருளினால் நீண்ட நாட்களாக குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்தவர்களுக்கு நல்ல செய்தி தேடி வரும். வேலைப்பளு அதிகரிக்கும். அலுவலத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். சுப செய்திகள் தேடி வரும். பெண்களுக்கு இந்த குருப்பெயர்ச்சியால் மன நிம்மதியும் சந்தோஷமும் அதிகரிக்கும்.

மூலம்

சுப விரைய செலவுகள் நடைபெறும். புதிய வீடு கட்டி குடியேறுவீர்கள். தொழிலில் இருந்த தடைகள் அகலும் வருமானம் அதிகரிக்கும். புதிய தொழில் தொடங்கலாம். வண்டி, வாகனம் வாங்கலாம். வேலையில் இருந்த பிரச்சினைகள் தீரும்.

பூராடம்

கடன்கள் அடையும். நிதி உதவிகள் தாராளமாக கிடைக்கும். சுப காரியங்கள் நல்ல முறையில் நடைபெறும். உடல் நிலையில் ஆரோக்கியம் அதிகரிக்கும். சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். புதிய தொழில்கள் தொடங்க முயற்சி செய்யலாம்.

உத்திராடம்

குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் முடிவுக்கு வரும். நோய்கள் தீரும் காலம் வந்து விட்டது. செய்யும் தொழிலில் லாபம் கிடைக்கும். வருமானம் கிடைக்கும். திருமணத்தில் இருந்த தடைகள் நீங்கும். சிலருக்கு புத்திர பாக்கியம் கிடைக்கும்.

அவிட்டம்

குருப்பெயர்ச்சியினால் நீண்ட நாட்களாக தடைபட்டிருந்த காரியம் ஜெயமாகும். திருமண தடை நீங்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். கும்ப ராசி அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கவனம் தேவை. அலுவலகத்தில் சக ஊழியர்களுடன் சண்டை சச்சரவில் ஈடுபடவேண்டாம். எடுத்துக்கொண்ட காரியம் வெற்றி பெறும் வரை தொழில் ரகசியங்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ளாதீர்கள்.

சதயம்

பணம் விசயத்தில் கவனமாக இருக்கவும். தொழிலில் நஷ்டத்தை தவிர்க்க கவனமாக இருக்கவும். குடும்பத்தினரிடம் பேசும் போது கவனம் தேவை. இடம் பொருள் அறிந்து பேசினால் பிரச்சினைகளை தவிர்க்கலாம். குரு அருளால் அனைத்து நன்மைகளும் நடக்கப் போகிறது.

பூரட்டாதி

குருப்பெயர்ச்சியினால் துன்பங்களும், துயரங்களும் நீங்கும் காலம் வந்துவிட்டது. உத்தியோகம் தொடர்பாக குடும்பத்தை விட்டு சில காலம் பிரிந்திருக்க நேரிடலாம். பணப்பிரச்சினைகள் தீரம். எதிர்பார்த்த இடத்தில் இருந்து கடன் கிடைக்கும். அலுவலகத்தில் எதிர்பார்த்திருந்த இடமாற்றம் கிடைக்கும். வெளியூர், வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிடைக்கும்.

உத்திரட்டாதி

குருப்பெயர்ச்சி சுப விரைய செலவுகள் ஏற்படும். வாழ்வில் இதுநாள் வரை இருந்த பிரச்சினைகள் தீரும். புதிய வீடு, கட்டிடங்களை கட்டுவீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை நீடிக்கும். உடல் நலனில் இருந்த பிரச்சினைகள் தீரும். தொழிலை விரிவுபடுத்துவீர்கள். திடீர் செலவுகள் அதிகரிக்கும் வரவும் செலவும் சமமாக இருக்கும்.

ரேவதி

குருப்பெயர்ச்சி சுப விரைய செலவுகளை ஏற்படுத்தும். வீடு, மனை, வாகனம் வாங்குவீர்கள். அலுவலகத்தில் சக ஊழியர்களுடன் இருந்து வந்த பிரச்சினைகள் தீரும். காரியத்தடைகள் நீங்கும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் நிம்மதியும் ஒற்றுமையும் நிலவும்.திருத்தமிழ்
© 2023 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore