விநாயகர் சதுர்த்தியின்போது, வீடுகளில் வைத்து வழிபடும் விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைக்க இந்து சமய அறநிலையத்துறை மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் வரும் 10-ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படவுள்ளது. கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளதால், பொது இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபட அனுமதியில்லை.
அதேபோல, மதம் சார்ந்த ஊர்வலம், திருவிழாக்கள் நடத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. விநாயகர் சதுர்த்தி அன்று வீடுகளில் சிறிய விநாயகர் சிலை வைத்து வழிபட அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
வீடுகளில் வழிபட்ட விநாயகர் சிலைகளை தனிநபராக சென்று,அருகே உள்ள நீர்நிலைகளில் கரைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், வீடுகளில் வைத்த வழிபட்ட விநாயகர் சிலைகளை அருகே உள்ள கோயில்களிலும், பொது இடங்களிலும் பொதுமக்கள் வைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இச்சிலைகளை இந்து சமய அறநிலையத்துறை மூலம் நீர்நிலைகளில் கரைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.