மேஷம்
செவ்வாய் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மேஷ ராசிக்காரர்களுக்கு சந்திரன் இந்த வாரத்தில் உங்கள் ராசியில் இருந்து பயணத்தை ஆரம்பிக்கிறார். இரண்டாம் வீட்டில் ராகு, ஐந்தாம் வீட்டில் சூரியன், செவ்வாய்,ஆறாம் வீட்டில் புதன், சுக்கிரன், எட்டாம் வீட்டில் கேது பத்தாம் வீட்டில் சனி, லாப ஸ்தானத்தில் குருவும் பயணம் செய்கின்றனர். நினைத்த காரியங்களில் வெற்றி ஏற்படும். சந்திரன் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் உயர் பதவி தேடி வரும். உங்கள் ராசிக்கு ஐந்தாவது வீடு வலிமையடைந்துள்ளது என்றாலும் கர்ப்பிணிப்பெண்கள் கவனமுடன் இருப்பது நல்லது. பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு குருவின் பார்வையும் கிடைப்பதால் பிள்ளைகள் வழியில் சுப செய்திகள் தேடி வரும். நினைத்த காரியம் நினைவேறும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். ஆறாம் வீட்டில் புதன் ஆட்சி உச்சம் பெற்று பயணம் செய்வதால் மாணவர்களுக்கு உயர்கல்வி யோகம் தேடி வரும். ஆறுக்குடைய புதன் ஆறாம் வீட்டில் உச்சம் பெறுவது விபரீத ராஜயோகத்தை கொடுக்கும். போட்டித்தேர்வுகளை எதிர்கொள்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். சுக்கிரன் நீச்ச பங்க ராஜயோகம் பெறுகிறார். சுறுசுறுப்பும் உற்சாகமும் அதிகரிக்கும். பணம் அதிகம் வந்தாலும் சுப செலவுகளும் அதிகரிக்கும். வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள்.
ரிஷபம்
சுக்கிரபகவானை ராசி அதிபதியாகக் கொண்ட ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் கிரகங்களின் சஞ்சாரத்தைப் பார்த்தால் ராசியில் ராகு, நான்காம் வீட்டில் சூரியன், செவ்வாய் ஐந்தாம் வீட்டில் சுக்கிரன், புதன், ஏழாம் வீட்டில் கேது, ஒன்பதாம் வீட்டில் சனி, பத்தாம் வீட்டில் குரு என கிரகங்கள் பயணம் செய்கின்றன. குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். புதிய முயற்சிகளில் வெற்றி உண்டாகும். சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். அரசு வேலைக்கு பதவிக்கு முயற்சி செய்யலாம். புத்திரபாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். புதிய ஏஜென்சி எடுக்கலாம். உங்க ராசிநாதன் சுக்கிரன் நீசபங்க ராஜயோகம் பெறுவதால் பெண்கள் தங்க நகைகள் வாங்கலாம். பழைய வண்டியை கொடுத்து விட்டு புதிய வண்டியை வாங்கலாம். குரு பகவான் தொழில் ஸ்தானத்தில் பயணம் செய்வதால் நல்ல மாற்றங்கள் ஏற்படும். வேலையில் இருந்த சிக்கல்கள் நீங்கும். புதிய வேலைக்கு முயற்சி செய்யலாம். பதவி மாற்றம், வேலை மாற்றம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. மாணவர்களுக்கு உயர்கல்வி யோகத்தை புதன் தரப்போகிறார். நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்பட்டிருந்த பாதிப்புகள் நீங்கும். பாதுகாப்பற்ற பயணங்களைத் தவிர்த்து விடுவது நல்லது.
மிதுனம்
அறிவும் திறமையும் கொண்ட புதன் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மிதுன ராசிக்காரர்களே, இந்த வாரம் ராசிக்கு விரைய ஸ்தானத்தில் ராகு மூன்றாம் வீட்டில் சூரியன்,செவ்வாய், நான்காம் வீட்டில் சுக்கிரன்,புதன், ஆறாம் வீட்டில் கேது, எட்டாம் வீட்டில் சனி வக்ர நிலையிலும் ஒன்பதாம் வீட்டில் குரு வக்ர நிலையிலும் பயணம் செய்கிறார். சந்திரன் சஞ்சாரம் சாதகமாக உள்ளதால் குடும்பத்தில் குதூகலம் அதிகரிக்கும் பணவரவு நன்றாக இருக்கும். அபரிமிதமான பண வரவினால் வீட்டிற்குத் தேவையான பொருட்கள் வாங்குவீர்கள். குருவின் பார்வை உங்கள் ராசிக்கு கிடைப்பதால் மனதில் தெளிவு பிறக்கும். அப்பாவின் உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். தைரிய ஸ்தானத்தில் தைரிய ஸ்தான அதிபதி ஆட்சி பெற்று பயணிப்பதால் அரசு தொடர்பான ஆதாயம் கிடைக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். கடன் பிரச்சினை நீங்கும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். வேலையில் இருந்து வந்த பிரச்சினைகள் நீங்கும். ராசிநாதன் புதன் சாதகமாக இருப்பதால் சமூகத்தில் மதிப்பு மரியாதை அதிகரிக்கும். வீடு கட்டுவதற்கு லோன் கிடைக்கும். திருமணம் சுபகாரியம் கை கூடி வரும். பெருமாள் கோவிலுக்கு சென்று விளக்கேற்றி வழிபட நன்மைகள் நடைபெறும். அஷ்டமத்து சனி சில நேரங்களில் மனக்குழப்பத்தைக் கொடுப்பார். எதிரிகளால் தொல்லை அதிகரிக்கும். உங்கள் ராசி அதிபதி நான்காம் வீட்டில் ஆட்சி உச்சம் பெற்று பயணம் செய்கிறார். வேலையில் ஏற்பட்டிருந்த பிரச்சினைகள் நீங்கும் கேட்ட இடத்திற்கு இடமாற்றம் கிடைக்கும். சொத்து வாங்குவது விற்பதில் கவனம் தேவை. சுப காரியங்களில் ஏற்பட்ட தடைகள் நீங்கும்.
கடகம்
சந்திரனை ராசி அதிபதியாகக் கொண்ட கடக ராசிக்காரர்களே, இந்த வாரம் ராசிக்கு இரண்டாம் வீட்டில் சூரியன்,செவ்வாய், மூன்றாம் வீட்டில் சுக்கிரன்,புதன், லாப ஸ்தானத்தில் ராகு, ஐந்தாம் வீட்டில் கேது, ஏழாம் வீட்டில் சனி, எட்டாம் வீட்டில் குரு என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. பண வருமானம் அதிகரிக்கும். புதிய வேலை கிடைக்கும். காதல் வாழ்க்கையில் கவலைகள் நீங்கி உற்சாகம் அதிகரிக்கும். மனைவி வழியில் வருமானம் அதிகரிக்கும். புத்திரபாக்கியம் கிடைக்கும். கடந்த சில நாட்களாக மனதில் ஏற்பட்டிருந்த பயம் நீங்கும். கணவன் மனைவி இடையே ஏற்பட்ட பிரச்சினைகள் நீங்கும். வெற்றியும் சந்தோஷமும் உண்டு. செவ்வாயின் பயணம் சாதகமாக உள்ளது. வெற்றி உண்டு. வீடு மனை வாங்கலாம். குடும்ப வாக்கு ஸ்தானத்தில் செவ்வாய் சூரியன் இருப்பதால் பேச்சில் கவனம் தேவை. கோபமான பேச்சுக்களையும் வீண் விதண்டாவாதங்களையும் தவிர்க்கவும். அஷ்டம குருவினால் இந்த மாதம் சில பாதிப்புகள் வந்தாலும் பெரிய அளவில் பிரச்சினைகள் இல்லை. வேலை செய்யும் இடத்தில் உயர் அதிகாரிகளின் உதவி கிடைக்கும்.
சிம்மம்
சூரியனை ராசி அதிபதியாகக் கொண்ட சிம்ம ராசிக்காரர்களே, இந்த வாரம் உங்க ராசிக்குள் சூரியன், செவ்வாய், இரண்டாம் வீட்டில் சுக்கிரன்,புதன், நான்காம் வீட்டில் கேது, ஆறாம் வீட்டில் சனி, ஏழாம் வீட்டில் குரு, பத்தாம் வீட்டில் ராகு என கிரகங்கள் பயணம் செய்கின்றன. சந்திரன் உங்கள் ராசிக்கு சாதகமான நிலையில் பயணம் செய்கிறார். பணவருமானம் அதிகரிக்கும் திடீர் சுப செலவுகள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். பிள்ளைகளால் சந்தோஷம் அதிகரிக்கும். பாராட்டுக்களும் பதவி உயர்வும் தேடி வரும். குருவின் பார்வை சிம்ம ராசியில் உள்ள செவ்வாயின் மீது விழுவதால் குரு மங்கல யோகம் கூடி வந்துள்ளது. இரண்டாம் வீட்டில் புதன் ஆட்சி உச்சம் பெற்று பயணம் செய்கிறார் சுக்கிரன் நீசபங்க ராஜயோகம் பெறுகிறார். செய்யும் செயல்களில் திறமைப் பளிச்சிடும் புத்திக் கூர்மை அதிகரிக்கும். புதிய முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். பண வரவு அபரிமிதமாக இருக்கும் உங்களுக்கு இந்த வாரம் பொருளாதார நெருக்கடிகள் நீங்கும். வங்கிக் கடன் கிடைக்க வாய்ப்புள்ளது. பெண்கள் புதிதாக நகைகளை வாங்குவீர்கள். ஆடை ஆபரணச் சேர்க்கை ஏற்படும். நினைத்த காரியம் நிறைவேறும் நல்ல வாரம் உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
கன்னி
புதன் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட கன்னி ராசிக்காரர்களே. இந்த வாரம் உங்களுடைய ராசியில் சுக்கிரன்,புதன், ராசிக்கு மூன்றாம் வீட்டில் கேது, ஐந்தாம் வீட்டில் சனி ஆறாம் வீட்டில் குரு, ஒன்பதாம் வீட்டில் ராகு, விரைய ஸ்தானத்தில் சூரியன், செவ்வாய், என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. ராசிநாதன் ராசியில் ஆட்சி உச்சம் பெற்று பயணம் செய்வதால் உங்களின் உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். மனதில் உற்சாகமும் மகிழ்ச்சியும் அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் மேலதிகாரிகள் உங்களுக்கு உதவி செய்வார்கள். தைரியம் தன்னம்பிக்கை அதிகரிக்கும். நன்மைகள் அதிகம் நடைபெறும். மறைமுக எதிர்கள் பிரச்சினை முடிவுக்கு வரும். எதிரிகள் தொல்லைகள் நீங்கும். சாதகமான அம்சங்கள் அதிகம் நடைபெறும். எதையும் துணிச்சலுடன் எதிர்க்கொள்வீர்கள். உங்களின் திறமையும் புத்திசாலித்தனமும் பளிச்சிடும். சிலரது வாழ்க்கையில் காதல் மணியடிக்கும். வீடு நிலம் வகைகளில் முதலீடுகள் அதிகரிக்கும். முகத்தில் பொலிவும் அழகும் அதிகரிக்கும். பயணங்களில் கவனம் தேவை. தொட்டது துலங்கும் வாரம் என்றாலும் முதல் இரண்டு நாட்கள் சந்திராஷ்டம் உள்ளதால் வேலையில் நிதானம் தேவை. ஆகஸ்ட் 27,2021 முதல் ஆகஸ்ட் 29,2021 காலை 10.19 மணி வரைக்கும் சந்திராஷ்டமம் உள்ளதால் பேச்சில் கவனம் தேவை. முதலீடுகளைத் தவிர்க்கவும்.
துலாம்
சுக்கிர பகவானை ராசி நாதனாகக் கொண்ட துலாம் ராசிக்காரர்களே உங்களுடைய ராசிக்கு இரண்டாம் வீட்டில் கேது, நான்காம் வீட்டில் சனி, ஐந்தாம் வீட்டில் குரு, எட்டாம் வீட்டில் ராகு, லாப ஸ்தானத்தில் சூரியன், செவ்வாய், விரைய ஸ்தானத்தில் சுக்கிரன்,புதன் என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. திருமணம் சுப காரிய பேச்சுவார்த்தைகளில் வெற்றி கிடைக்கும். இதுநாள் வரை தடைபட்டு வந்த சுபகாரியங்கள் கை கூடி வரும். குடும்ப வாழ்க்கையில் நிம்மதியும் சந்தோஷமும் ஏற்படும். நினைத்த காரியம் நிறைவேறும். விரைய ஸ்தானத்தில் ராசிநாதன் சுக்கிரன் நீச்ச பங்க ராஜயோகம் பெற்று பயணம் செய்கிறார். தொலைதூர பயணங்கள் ஏற்படும். சுப செலவுகள் அதிகரிக்கும். உறவினர்கள் வீட்டு சுப காரியங்களில் பங்கேற்பீர்கள். உங்கள் ராசிக்கு குருவின் பார்வை கிடைப்பதால் முயற்சிகளுக்கு வெற்றி தேடி வரும். புதிய தொழில் தொடங்கலாம். வீடு பராமரிப்பு செய்வீர்கள் வீட்டினை அழகு படுத்துவீர்கள். அர்த்தாஷ்டம சனி காலமாக இருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தொழில் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். சுப காரிய தடைகள் நீங்கும். நினைத்த காரியங்கள் படிப்படியாக நிறைவேறும். தொழில் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். வேலையில் திறமை பளிச்சிடும். உடன் பிறந்தவர்களால் நன்மை உண்டாகும். திருமணமாகி குழந்தை பாக்கியத்திற்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி தேடி வரும். ஆகஸ்ட் 29,2021 காலை 10.19 மணி முதல் ஆகஸ்ட் 31,2021 காலை 11.12 மணி வரைக்கும் சந்திராஷ்டம் உள்ளதால் பணம் கொடுக்கல் வாங்கலில் கவனமும் நிதானமும் அவசியம். வெளியூர் பயணங்களில் கவனம் தேவை.
விருச்சிகம்
செவ்வாயை ராசி அதிபதியாகக் கொண்ட விருச்சிக ராசிக்காரர்களே, இந்த வாரம் உங்க ராசிக்குள் கேது, மூன்றாம் வீட்டில் சனி, நான்காம் வீட்டில் குரு, ஏழாம் வீட்டில் ராகு, பத்தாம் வீட்டில் சூரியன், செவ்வாய், லாப ஸ்தானத்தில் சுக்கிரன்,புதன் என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. புதிய வேலை கிடைக்கும். வேலையில் சிலருக்கு புரமோசனும் தொழிலில் லாபமும் அதிகரிக்கும். மனதில் நிம்மதியும் சந்தோஷமும் ஏற்படும். பிள்ளைகளால் சந்தோஷம். அதிகமான லாபம் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் சின்னச் சின்ன பிரச்சினைகள் வரலாம் கவனம் தேவை. வேலை, திருமண விசயங்களில் வெற்றிகள் கிடைக்கும். தடைகள் நீங்கி சுப காரியம் கைகூடி வரும். பண வரவு அதிகமாக கிடைப்பதால் சேமிப்பும் கை கூடி வரும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். திருமணமானவர்களுக்கு புத்திரபாக்கியம் கிடைக்க வாய்ப்புள்ளது. பண வரவு அதிகமாக கிடைப்பதால் வங்கி சேமிப்பும் கை கூடி வரும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். மகனுக்கோ,மகளுக்கோ திருமணம் கை கூடி வரும். வீடு கட்டும் யோகம் கை கூடி வரும். மன சங்கடங்கள் நீங்கி மகிழ்ச்சி அதிகரிக்கும். தொட்டது துலங்கும் வாரமாகும். அரசியல் பதவிகளில் இருப்பவர்களுக்கு திறமைகள் வெளிப்படும். வார இறுதியில் சந்திராஷ்டமம் உள்ளது. ஆகஸ்ட் 31,2021 இரவு 11.12 மணி முதல் 03.09. 2021 வரைக்கும் சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமும் நிதானமும் தேவை. இரவு நேர பயணங்களைத் தவிர்க்கவும்.
தனுசு
குரு பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட தனுசு ராசிக்காரர்களே, இந்த வாரம் உங்களுடைய ராசிக்கு விரைய ஸ்தானத்தில் கேது,இரண்டாம் வீட்டில் சனி, மூன்றாம் வீட்டில் குரு, ஆறாம் வீட்டில் ராகு, ஒன்பதாம் வீட்டில் சூரியன், செவ்வாய், பத்தாம் வீட்டில் சுக்கிரன்,புதன் என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. பத்தில் புதன் ஆட்சி உச்சம் பெற்று பயணம் செய்வதால் வேலையில் திறமை பளிச்சிடும் சம்பள உயர்வும் புரமோசனும் கிடைக்கும். ராசி நாதன் குரு மூன்றாவது வீட்டில் பயணிப்பதால் வெற்றிகள் தேடி வரும். முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். குடும்ப ஸ்தானத்தில் உள்ள சனியால் வாக்கில் கவனம் தேவை. தேவையில்லாமல் பேசி சிக்கலை இழுத்துக்கொள்ள வேண்டாம். பொருளாதார நிலை நன்றாக இருக்கும். வேலையில் சிலருக்கு புரமோசன் கிடைக்கும். நல்ல சம்பளத்தில் புதிய வேலை கிடைக்க வாய்ப்புள்ளது. வங்கி சேமிப்பு கை கொடுக்கும். வழக்குகள் சாதகமாக முடியும் வெற்றிகள் தேடி வரும். மகளுக்கோ மகனுக்கோ திருமணம் நடைபெறும். வீடு மனை வாங்கலாம் வண்டி வாகனம் வாங்கலாம். கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்டிருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். எதிர்பாராத அதிர்ஷ்டங்கள் தேடி வரும். வெளியூர் பயணங்களால் நன்மைகள் ஏற்படும். மாணவர்களுக்கு விரும்பிய கல்லூரிகளில் படிக்க இடம் கிடைக்கும்.
மகரம்
சனி பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மகரம் ராசிக்காரர்களே, இந்த வாரம் உங்கள் ராசியில் சனி, இரண்டாம் வீட்டில் குரு ஐந்தாம் வீட்டில் ராகு, எட்டாம் வீட்டில் சூரியன், செவ்வாய், ஒன்பதாம் வீட்டில் சுக்கிரன், புதன், லாப ஸ்தானத்தில் கேது என கிரகங்கள் பயணம் செய்கின்றன. வண்டி வாகனங்களில் வேகமாக செல்வதை விட நிதானமாக செல்லவும். பயணங்களில் கவனம் தேவை. இரவு நேர பயணங்களைத் தவிர்க்கவும். ராசியில் ஜென்ம சனி இருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டவும். இந்த வாரம் பொழுதுபோக்கு விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். செய்யும் தொழிலில் லாபம் அதிகரிக்கும். பெண்கள் மின்சாதனங்களைக் கையாளும் போதும், கூர்மையான பொருட்களைக் கையாளும் போதும் கவனம் தேவை. வேலை செய்பவர்களுக்கு கவனமும் நிதானமும் அவசியம். கோபத்தை கட்டுப்படுத்தவும். தேவையற்ற டென்சனை குறைக்கவும். வேலைப்பளு கூடும். வியாழக்கிழமையில் சித்தர் ஆலயம் சென்று வணங்குவது மன அமைதியைத் தரும்.
கும்பம்
சனி பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட கும்ப ராசிக்காரர்களே இந்த வாரம் உங்கள் ராசியில் குரு, ராசிக்கு நான்காம் வீட்டில் ராகு, ஏழாம் வீட்டில் சூரியன், செவ்வாய், எட்டில் சுக்கிரன்,புதன், பத்தாம் வீட்டில் கேது விரைய ஸ்தானத்தில் சனி என கிரகங்கள் பயணம் செய்கின்றன. களத்திர ஸ்தானத்தில் சூரியன், புதன் இணைந்து புத ஆதிபத்ய யோகத்தை கொடுப்பது நன்மையை தரும். காதல் கை கூடி வரும். திருமணம் சுபகாரியம் வெற்றியை தரும். குழந்தைக்காக காத்திருப்பவர்களுக்கு புத்திர பாக்கியம் கிடைக்கும். சகோதரர்களால் நன்மை உண்டாகும். பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். விரைய சனி நடைபெறுவதால் சுப விரைய செலவுகள் ஏற்படும். வரவுக்கு ஏற்ப செலவுகளும் அதிகரிக்கும். இந்த வாரம் உங்களின் தைரியம் அதிகரிக்கும். புதிய முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். புது வேலைக்கு முயற்சி செய்யலாம். நல்ல வேலை கிடைக்கும். தெளிவான மனநிலையில் இருப்பீர்கள். கணவன் மனைவி இடையேயான பிரச்சினைகள் முடிவுக்கு வரும். விரைய சனி காலமாக இருப்பதால் பண வருமானம் அதிகம் வந்தாலும் செலவும் அதிகரிக்கும். சுப விரைய செலவுகளாக மாற்றவும். திடீர் மருத்துவ செலவுகள் வரும் கவனம் தேவை.
மீனம்
குரு பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மீனம் ராசிக்காரர்களே, இந்த வாரம் உங்களுடைய ராசிக்கு மூன்றாம் வீட்டில் ராகு, ஆறாம் வீட்டில் சூரியன், செவ்வாய், புதன், ஏழாம் வீட்டில் சுக்கிரன், ஒன்பதாம் வீட்டில் கேது, லாப ஸ்தானத்தில் சனி, விரைய ஸ்தானத்தில் குரு என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. ஆட்சி உச்சம் பெற்ற புதனின் பார்வை உங்கள் ராசிக்கு கிடைக்கிறது. வேலையில் புத்திசாலித்தனம் பளிச்சிடும். உங்களுக்கு சாதகமாக இருப்பதால் பழைய நண்பர்களால் உதவி கிடைக்கும். நீச்ச பங்க ராஜயோகம் பெற்ற சுக்கிரன் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் திடீர் பண வரவு வரும். படிப்பில் மாணவர்களுக்கு ஆர்வம் அதிகரிக்கும். வேலை விசயமாக நல்ல செய்தி தேடி வரும். குடும்ப வாழ்க்கையில் நிறைய சந்தோஷ சம்பவங்கள் நடைபெறும். மனதில் மகிழ்ச்சியும் உற்சாகமும் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையுடன் நல்லுறவு நீடிக்கும். திருமணம் புத்திரபாக்கியம் கை கூடி வரும். சுப விரைய செலவுகள் வரும். வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். அரசு வேலைக்கான தேர்வுகளை எழுதலாம். விரைய குருவினால் திடீர் மருத்துவ செலவுகள் வரலாம் உணவு விசயத்தில் கவனம் தேவை. உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டவும்.