திருக்குறள் - 1303     அதிகாரம்: 
| Adhikaram: pulavi

அலந்தாரை அல்லல்நோய் செய்தற்றால் தம்மைப்
புலந்தாரைப் புல்லா விடல்.

குறள் 1303 - திருவள்ளுவர் - ThiruValluvar

"alandhaarai allalnoai seydhatraal thammaip" Thirukkural 1303 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


தம்மோடு பிணங்கியவரை ஊடலுணர்த்தித் தழுவாமல் விடுதல், துன்பத்தால் வருந்தியவரை மேலும் துன்ப நோய் செய்து வரத்தினாற் போன்றது.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


தம்மைப் பெறாது புலந்த மகளிரைப் புலவிநீக்கிக் கலவாது ஆடவர் சேறல், பண்டே துன்பமுற்றழிந்தாரை அதன் மேலும் மிக்க துன்பத்தினைச் செய்தாற்போலும்.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


(பரத்தையர் இடத்துநின்றும் வந்த தலைமகனொடு தலைமகள் புலந்து சொல்லியது.) தம்மைப் புலந்தாரைப் புல்லாவிடல் - தம்மைப் பெறாது புலந்த மகளிரைப் புலவி நீக்கிக்கலவாது ஆடவர் சேறல்; அலந்தாரை அல்லல் நோய் செய்தற்று - பண்டே துன்பமுற்று அழிந்தாரை அதன் மேலும் மிக்க துன்பத்தினைச் செய்தாற்போலும். ('பிறர்பால் சேறலின் நும்மைப் பெறாது புலந்தூடியிருக்கின்ற பரத்தையரைப் போய்ப் புலவி நீக்கிப் புல்லீராயின், அவராற்றார்' என்பதாம்.

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


(பரத்தையரிடமிருந்து நின்றும் வந்ததாகக் கருதப்பட்ட தலைமகனொடு தலைமகள் புலந்து சொல்லியது.) தம்மைப் புலந்தாரைப் புல்லா விடல் - தம்மைப் பெறாது புலந்த மகளிரைப் புலவி நீக்கிக் கலவாது ஆடவர் விட்டுவிடுதல்; அலந்தாரை அல்லல் நோய் செய்த அற்று- முன்னமே துன்பமுற் றழிந்தாரை அதன் மேலுந் துன்புறுத்தினாற் போலும். நீர் பிறர்பாற் செல்லுதலின் நும்மைப் பெறாது புலந்திருக்கின்ற பரத்தையரிடஞ் சென்று , அவர் புலவி நீக்கித் தழுவீராயின் அவர் ஆற்றார் என்பதாம் . 'ஆல்' அசைநிலை.(பரத்தையரிடமிருந்து நின்றும் வந்ததாகக் கருதப்பட்ட தலைமகனொடு தலைமகள் புலந்து சொல்லியது.) தம்மைப் புலந்தாரைப் புல்லா விடல் - தம்மைப் பெறாது புலந்த மகளிரைப் புலவி நீக்கிக் கலவாது ஆடவர் விட்டுவிடுதல்; அலந்தாரை அல்லல் நோய் செய்த அற்று- முன்னமே துன்பமுற் றழிந்தாரை அதன் மேலுந் துன்புறுத்தினாற் போலும். நீர் பிறர்பாற் செல்லுதலின் நும்மைப் பெறாது புலந்திருக்கின்ற பரத்தையரிடஞ் சென்று , அவர் புலவி நீக்கித் தழுவீராயின் அவர் ஆற்றார் என்பதாம் . 'ஆல்' அசைநிலை.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


தன்னுடன் ஊடல் கொண்ட மனைவியின் ஊடலை நீக்கிக் கூடாமல் போவது, ஏற்கனவே துன்பப்பட்டவர்களுக்கு மேலும் அதிகத் துன்பத்தைக் கொடுத்தது போலாம்.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


ஊடல் கொண்டவரின் ஊடல் நீக்கித் தழுவாமல் விடுதல் என்பது, ஏற்கனவே துன்பத்தால் வருந்துவோரை மேலும் துன்பநோய்க்கு ஆளாக்கி வருத்துவதாகும்.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


பிரிந்து இருந்தவரை வேதனை நோய் பற்றச் செய்வது தம்மை கூடியவரை கூடவிடாமல் செய்வது.

புலியூர்க் கேசிகன் - Thirukkural Meaning in Tamil


தம்மோடு ஊடியவரைத் தெளிவித்துத் தழுவாமல் விட்டுவிடுதல், துன்புற்று வருந்துவாரை மேலும் துன்பஞ் செய்து வருந்தச் செய்வது போன்ற கொடுமையாகும்!

Thirukkural in English - English Couplet:


'Tis heaping griefs on those whose hearts are grieved;
To leave the grieving one without a fond embrace.

ThirukKural English Meaning - Couplet -Translation:


For men not to embrace those who have feigned dislike is like torturing those already in agony.

ThiruKural Transliteration:


alandhaarai allalnoai seydhatraal thammaip
pulandhaaraip pullaa vidal.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore