திருக்குறள் - 701     அதிகாரம்: 
| Adhikaram: kuripparidhal

கூறாமை நோக்கக் குறிப்பறிவான் எஞ்ஞான்றும்
மாறாநீர் வையக் கணி.

குறள் 701 - திருவள்ளுவர் - ThiruValluvar

"kooraamai noakkak kuripparivaan egngnaandrum" Thirukkural 701 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


ஓருவர் சொல்லாமலே அவறுடைய முகத்தை நோக்கி அவர் கருதிய குறிப்பை அறிகின்றவன் எப்போதும் உலகத்திற்க்கு ஓர் அணிகலன் ஆவான்.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


ரசன் மனநிகழ்ச்சியை அவன் கூறுவதன்முன்னே நோக்கி அறியுமவன், எல்லா நாளும் மாறாநீர் சூழ்ந்த வையத்துக்கு அணிகலனாவான். இது மக்களிற் சிறப்புடையனா மென்றது.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


குறிப்பு கூறாமை நோக்கி அறிவான் - அரசனால் குறித்த கருமத்தை அவன் கூறவேண்டா வகை அவன் முகத்தானும் கண்ணானும் நோக்கி அறியும் அமைச்சன்; எஞ்ஞான்றும் மாறாநீர் வையக்கு அணி - எஞ்ஞான்றும் வற்றாத நீரால் சூழப்பட்ட வையத்துள்ளார்க்கு ஓர் ஆபரணமாம். (ஒட்பமுடையனாய் எல்லார்க்கும் அழகுசெய்தலான், 'வையக்கு அணி' என்றார். குறிப்பும் வையமும் ஆகுபெயர். வையத்திற்கு என்பது விகாரப்பட்டு நின்றது.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


குறிப்புக் கூறாமை நோக்கி அறிவான் - அரசன் கருதிய கருமத்தை அவன் கூறாமலே அவன் முகத்தை நோக்கி அறியவல்ல அமைச்சன்; எஞ்ஞான்றும் மாறாநீர் வையக்கு அணி - உலகுள்ள அளவும் ஒருபோதும் வற்றாத கடலைத் தன்னுட்கொண்ட ஞாலத்தில் வாழ்வார்க்கு ஓர் அணிகலமாம். குறிப்பு உள்ளத்திற் குறித்தது. நோக்குதல் நுணித்துப் பார்த்தல். முகம் என்பது முகத்திலுள்ள கண், கன்னம், மீசை, உதடு, பல், நா முதலிய வுறுப்புக்களைக் குறிக்கும். இவற்றுள் முதன்மையானது கண். உலகம் முத்தொழிற்படுதலின் 'உலகுள்ள அளவும்' என்றும்; ஞாலம் நீராற் சூழப்படாமல் அதைத் தன்னுள் ஒரு கூறாகக் கொண்டிருப்பதனாலும், நீராற் சூழப்பட்ட நிலப்பகுதி பலவாயிருப்பதனாலும், 'தன்னுட்கொண்ட ஞாலம்' என்றும்; கூறப்பட்டது. உலக முழுவதையுங் குறித்தற்கு 'மாறாநீர் வையம்' என்றார். கடலை 'மாறாநீர்' என்றது எதுகை நோக்கி. 'வையத்திற்கு' என்பதன் அத்துச் சாரியை தொக்கது. 'வையம்' என்பது மக்கள் வைகும் நிலப் பகுதிகளைமட்டுங் குறிப்பின், நீராற் சூழப்பட்ட என்று பரிமேலழகர் கூறியதும் பொருந்தும். 'குறிப்பு', 'வையம்' என்பன ஆகுபெயர். ஒண்மையும் நுண்மையுமுள்ள மதியினால் என்பதை முழுவதற்கும் அழகு செய்தலின், 'வையக் கணி' என்றார்.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


ஒருவன் வாயால் சொல்லாமல் இருக்க, அவனுடைய முகத்தையும் கண்ணையும் பார்த்தே அவன் மனக்கருத்தை அறிந்து கொள்பவன், எப்போதும் வற்றாத கடலால் வளைக்கப்பட்ட இவ்வுலகத்தவர்க்கு ஆபரணம் போன்றவன்.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


ஒருவர் எதுவும் பேசாமலிருக்கும் போதே அவர் என்ன நினைக்கிறார் என்பதை முகக்குறிப்பால் உணருகிறவன் உலகத்திற்கே அணியாவான்.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


பேசாது பொழுதும் பார்த்தே குறிப்பறிந்துக் கொள்பவர் எந்நிலையிலும் மாறாது நீரால் நிறைந்த உலகிற்கு அணியாவார்.

Thirukkural in English - English Couplet:


Who knows the sign, and reads unuttered thought, the gem is he,
Of earth round traversed by the changeless sea.

ThirukKural English Meaning - Couplet -Translation:


The minister who by looking (at the king) understands his mind without being told (of it), will be a perpetual ornament to the world which is surrounded by a never-drying sea.

ThiruKural Transliteration:


kooRaamai noakkak kuRippaRivaan eGnGnaandrum
maaRaanheer vaiyak kaNi.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore