திருக்குறள் - 881     அதிகாரம்: 
| Adhikaram: utpakai

நிழல்நீரும் இன்னாத இன்னா தமர்நீரும்
இன்னாவாம் இன்னா செயின்.

குறள் 881 - திருவள்ளுவர் - ThiruValluvar

"nizhalnheerum innaadha innaa thamarnheerum" Thirukkural 881 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


இன்பம் தரும் நிழலும் நீரும் நோய் செய்வனவாக இருந்தால் தீயனவே ஆகும், அதுபோலவே சுற்றத்தாறின் தன்மைகளும் துன்பம் தருவானால் தீயனவே ஆகும்.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


நிழலகத்து நீர் இனிதேயாயினும் அவற்றுள் இன்னாத செய்யும் நீர் இன்னாதாகும். அதுபோலச் சுற்றத்தார் நன்மை இனிதாயினும் அவர் இன்னாதவற்றைச் செய்வாராயின் அஃது இன்னாதாயே விடும். இது சுற்றமென் றிகழற்க என்றது.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


நிழல் நீரும் இன்னாத இன்னா - ஒருவனுக்கு அனுபவிக்க வேண்டுவனவாய நிழலும் நீரும் முன் இனியவேனும் பின் நோய் செய்வன இன்னாவாம்; தமர் நீரும் இன்னா செயின் இன்னாவாம் - அதுபோலத் தழுவவேண்டுவனவாய தமரியல்புகளும் முன் இனியவேனும் பின் இன்னா செய்வன இன்னாவாம். (நோய் - பெருங்கால், பெருவயிறு முதலாயின. 'தமர்' என்றதனால் உட்பகை யாதற்குரியராய ஞாதியர் என்பது அறிக. இன்னா செயல் - முன் வெளிப்படாமை நின்று துணை பெற்றவழிக் கெடுதல்.) .

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


நிழல் நீரும் இன்னாத இன்னா- மக்கள் இன்பமாக நுகரும் நிழலும் நீரும் பின்பு நோய் செய்வனவாயின் தீயனவேயாம்; தமர் நீரும் இன்னா செயின் இன்னா ஆம்- அதுபோலத் தமக்குத்துணையாயிருக்க வேண்டிய தம்மைச் சேர்ந்தவர் இயல்புகளும் நன்மை செய்வனபோல் தோன்றித் தீமை செய்யின் தீயனவே யாம். தீய நிழலால் வரும் நோய் தலைவலி, காய்ச்சல் முதலாயின. தீய நீரால் வரும்நோய். யானைக்கால், பெருவயிறு (மகோதரம்) முதலாயின. தமர் என்பார் தம் குடும்பத்தாரும், தம் உறவினரும் தம் வகுப்பாரும், தம் கூட்டத்தாரும், தம் ஊராரும், தம் நாட்டாரும் தம் மொழியாரும் எனப் பல திறத்தார். முன் தோற்றத்தாலன்றிப் பின்விளைவாலேயே, பொருள்களும் மக்களும் முறையே நல்லனவுந் தீயனவும் நல்லவருந் தீயவருமாதல் அறியப்படும் என்பதாம். இக்குறளால் உட்பகையின் இயல்பு கூறப்பட்டது.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


நிழலும் நீரும் முதலில் இனியவாக இருந்தாலும், பிறகு துன்பம் தருவனவே. அதபோல, நெருக்கமான உறவும் சொந்தக் கட்சிக்காரரும் கூடப் பழக்கத்தில் இனியவராக இருந்து, செயலில் துன்பம் தந்தால் அது பெருந் துன்பமே.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


இனிமையாகத் தெரியும் நிழலும் நீரும்கூடக் கேடு விளைவிக்கக் கூடியவையாக இருந்தால் அவை தீயவைகளாகவே கருதப்படும். அது போலவேதான் உற்றார் உறவினராக உள்ளவர்களின் உட்பகையும் ஆகும்.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


இருப்பிடத்தின் தன்மையும் துன்பத்தை போக்காமல் துன்பம் தரும். அதுபோல் உயர்ந்த சுற்றத்தாரின் தன்மையும் துன்பமானதே துன்பமானதை செய்தால்.

புலியூர்க் கேசிகன் - Thirukkural Meaning in Tamil


நிழலும் நீரும் நுகரும் காலத்தில் இன்பமானாலும், பின்னர் நோய் செய்யும்; தழுவவேண்டும் சுற்றத்தாரின் இயல்புகளும் முதலில் இனியவாயினும், பின்னர் இன்னாதனவாகும்.

Thirukkural in English - English Couplet:


Water and shade, if they unwholesome prove, will bring you pain.
And qualities of friends who treacherous act, will be your bane.

ThirukKural English Meaning - Couplet -Translation:


Shade and water are not pleasant, (if) they cause disease; so are the qualities of (one's) relations not agreeable, (if) they cause pain.

ThiruKural Transliteration:


nizhalnheerum innaadha innaa thamarnheerum
innaavaam innaa seyin.

திருத்தமிழ்
© 2023 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore