திருக்குறள் - 1098     அதிகாரம்: 
| Adhikaram: kuripparidhal 2

அசையியற்கு உண்டாண்டோர் ஏஎர்யான் நோக்கப்
பசையினள் பைய நகும்.

குறள் 1098 - திருவள்ளுவர் - ThiruValluvar

"asaiyiyarku untaantoar eeryaan noakkap" Thirukkural 1098 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


யான் நோக்கும் போது அதற்காக அன்பு கொண்டவனாய் மெல்லச் சிரிப்பாள், அசையும் மெல்லிய இயல்பை உடைய அவளுக்கு அப்போது ஓர் அழகு உள்ளது.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


அசைந்த இயல்பினையுடையாட்கு அவ்விடத்தோர் அழகுண்டு; யான் நோக்க நெகிழ்ந்து மெல்ல நகாநின்றாள் அவ்விடமென்றது தானே நெகிழ்ந்து நக்க இடம்: அழகு- தன்வடிவினுள் மிக்க குணம்: பைய நகுதல்- ஓசைப்படாமல் நகுதல்.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


(தன்னை நோக்கி மகிழ்ந்த தலைமகளைக் கண்டு தலைமகன் கூறியது.) யான் நோக்கப் பசையினள் பைய நகும் - என்னை அகற்றுகின்ற சொற்கு ஆற்றாது யான் இரந்து நோக்கியவழி அஃது அறிந்து நெகிழ்ந்து உள்ளே மெல்ல நகாநின்றாள்; அசையியற்கு ஆண்டு ஓர் ஏர் உண்டு - அதனால் நுடங்கியஇயல்பினை உடையாட்கு அந்நகையின்கண்ணே தோன்றுகின்றதோர் நன்மைக் குறிப்பு உண்டு . (ஏர்: ஆகுபெயர். 'அக்குறிப்பு இனிப் பழுதாகாது' என்பதாம்.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


(தன்னை நோக்கி மகிழ்ந்த தலைமகளைக் கண்டு தலைமகன் கூறியது.) யான் நோக்கப் பசையினள் பைய நகும் - தோழி என்னைச் சேட்படுத்துரைக்குஞ் சொற்காற்றாது யான் இரங்கி நோக்கியவிடத்து, அஃதறிந்து அன்பால் நெகிழ்ந்து மெல்ல நகுவாள்; அசையியற்கு ஆண்டு ஓர் ஏர் உண்டு - ஆதலால், அசையும் மெல்லியலாளாகிய என் காதலிக்கு அந்நகையின்கண் ஓர் அழகிய குறிப்புள்ளது. அக்குறிப்பால் என் வேணவா நிறைவேறும் என்று மகிழ்ந்தான் என்பதாம். 'அசையியல்' அன்மொழித்தொகை. 'ஏஎர்' இசைநிறையளபெடை. 'ஏர்' ஆகுபெயர்.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


யாரோ எவரோ போல அவள் பேசிய பின்பும் நான் அவளைப் பார்க்க, அவள் மனம் நெகிழ்ந்து மனத்திற்குள் மெல்ல சிரித்தாள்; அச்சிரிப்பிலும் அவளுக்கு ஏதோ ஒரு குறிப்பு இருப்பது தெரிகிறது.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


நான் பார்க்கும் போது என் மீது பரிவு கொண்டவளாக மெல்லச் சிரிப்பாள்; அப்போது, துவளுகின்ற அந்தத் துடியிடையாள் ஒரு புதிய பொலிவுடன் தோன்றுகிறாள்.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


இணக்கம் உண்டா என்று மாணவனாகிய நான் நோக்கப் இசைவினால் உடனே சிரித்தாள்.

புலியூர்க் கேசிகன் - Thirukkural Meaning in Tamil


அவளை இரப்பது போல யான் பார்த்த போது, அதனால் நெகிழ்ந்தவளாய் மெல்ல நகைத்தாள்; அதனால் அசையும் இயல்பு உடையவளுக்கு நன்மைக் குறிப்பும் உண்டு.

Thirukkural in English - English Couplet:


I gaze, the tender maid relents the while;
And, oh the matchless grace of that soft smile!.

ThirukKural English Meaning - Couplet -Translation:


When I look, the pitying maid looks in return and smiles gently; and that is a comforting sign for me.

ThiruKural Transliteration:


asaiyiyaRku uNtaaNtoar Eeryaan noakkap
pasaiyinaL paiya nakum.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore