திருக்குறள் - 482     அதிகாரம்: 
| Adhikaram: kaalamaridhal

பருவத்தோடு ஒட்ட ஒழுகல் திருவினைத்
தீராமை ஆர்க்குங் கயிறு.

குறள் 482 - திருவள்ளுவர் - ThiruValluvar

"paruvaththoadu otta ozhukal thiruvinaith" Thirukkural 482 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


காலத்தோடுப் பொருந்துமாறு ஆராய்ந்து நடத்தல் ( நில்லாத இயல்பு உடைய) செல்வத்தை நீங்காமல் நிற்குமாறு கட்டும் கயிறாகும்.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


காலத்தோடு பொருந்த ஒழுகுதல் செல்வத்தை நீங்காமல் கட்டுவதொரு கயிறாம். இனிக் காலமறிந்ததனால் வரும் பயன் கூறுவார் முற்படச் செல்வம் கெடாதென்றார்.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


பருவத்தோடு ஒட்ட ஒழுகல் - அரசன் காலத்தோடு பொருந்த வினைசெய்து ஒழுகுதல், திருவினைத் தீராமை ஆர்க்கும் கயிறு - ஒருவர்கண்ணும் நில்லாது நீங்கும் செல்வத்தைத் தன்கண் நீங்காமல் பிணிக்கும் கயிறாம். '(காலத்தோடு பொருந்துதல் - காலம் தப்பாமல் செய்தல். 'தீராமை' என்றதனால், தீர்தல் மாலையது என்பது பெற்றாம். வினை வாய்த்து வருதலான், அதனின் ஆகும் செல்வம் எஞ்ஞான்றும் நீங்காது என்பதாம்.)' .

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


பருவத்தோடு ஒட்ட ஒழுகல் - காலத்தொடு பொருந்த அரசன் வினைசெய்தொழுகுதல் ; திருவினைத் தீராமை ஆர்க்கும் கயிறு - நிலையில்லாத செல்வத்தைத் தன்னிடத்தினின்று நீங்காவண்ணங் கட்டிவைக்கும் கயிறாம் . காலத்தொடு பொருந்துதல் காலந்தவறாமற் செய்தல் . 'தீராமை 'என்றதனால் தீருந்தன்மைய தென்பது பெறப்படும் . வினைகள் தொடர்ந்து வெற்றியாய் முடிதலால் செல்வம் ஒரு போதும் நீங்கா தென்பது கருத்து .

திருக்குறளார் வீ. முனிசாமி உரை: - Thirukkural Meaning in Tamil


காலத்தோடு பொருந்த தொழில்செய்து நடந்து கொள்ளுதல் வேண்டும். அவ்வாறு செய்வதானது செல்வத்தினைத் தன்னிடமிருந்து நீங்காமல் கட்டுகின்ற கயிறாகும்.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


காலந் தவறாமல் காரியம் ஆற்றுவது, ஓடும் செல்வத்தை ஓடாமல் கட்டும் கயிறு ஆகும்.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


காலம் உணர்ந்து அதற்கேற்பச் செயல்படுதல், அந்த நற்செயலின் வெற்றியை நழுவவிடாமல் கட்டிப்பிணிக்கும் கயிறாக அமையும்.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


பருவ காலத்தை அறிந்து ஏற்றபடி வாழ்தலே உயர்ந்த செயல்களைத் தடையற்று நடத்தும் கயிறைப் போன்றது.

Thirukkural in English - English Couplet:


The bond binds fortune fast is ordered effort made,
Strictly observant still of favouring season's aid.

ThirukKural English Meaning - Couplet -Translation:


Acting at the right season, is a cord that will immoveably bind success (to a king).

ThiruKural Transliteration:


paruvaththoadu otta ozhukal thiruvinaith
theeraamai aarkkunG kayiRu,

திருத்தமிழ்
© 2022 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore