மனையடி சாஸ்திரம் 2024 | Manaiyadi Sastram in Tamil

Updated On

வாஸ்து மனையடி சாஸ்திரம் | Manayadi Sastra Vasthu in Tamil

வீடு கட்ட தொடங்கும் முன்பு நாம் முக்கியமாக பார்க்க வேண்டியது வாஸ்து சாஸ்திரம் தான். ஒரு வீட்டின் ஒவ்வொரு அறைக்கும் ஒரு அளவு சாஸ்திரம் உண்டு, அதற்கேற்ற பலன்களும் உண்டு. 6 அடி முதல் 100 அடி வரை ஒவ்வொரு அடிக்கும் உண்டான பலன்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

மனையடி சாஸ்திரம் அடி கணக்கு (Manaiyadi Shastra Vastu In Tamil/ Manaiyadi Sasthiram Tami)

அடி கணக்கு

பலன்கள்

6 அடி நன்மை தரக்கூடியது
7 அடி தரித்திரம் பீடிக்கும்.
8 அடி மிகுந்த பாக்கியம் உண்டாகும்.
9 அடி ஆயுள் குறையும், சலிப்புகள் உண்டாகும்.
10 அடி ஆடு, மாடுகள் முதல் அனைத்து செல்வமும் உண்டு.
11 அடி பிள்ளைப்பேறு உண்டாகும்.
12 அடி செல்வம் அழியும்.
13 அடி பகை அதிகரிக்கும், பொருள் இழப்பு ஏற்படும்.
14 அடி நஷ்டம்,விரயம் சபலம்.
15 அடி நல்ல காரியம் தடைபடும். 
16 அடி மிகுந்த செல்வம் உண்டாகும். 
17 அடி அரசனை போல வாழ்வு கிடைக்கும்.
18 அடி அனைத்தும் அழியும், பெண்களுக்கு நோய் ஏற்படும்.
19 அடி உயிர் சேதம் ஏற்படும்.
20 அடி ராஜயோகம் கிடைக்கும்.
21 அடி வளர்ச்சி ஏற்படும், பால் சம்மந்தமான அனைத்தும் சிறக்கும்.
22 அடி பகைவர்கள் அஞ்சும் நிலை உண்டாகும்.
23 அடி நோய் மற்றும் கலக்கம் ஏற்படும்.
24 அடி ஆயுள் குறையும்.
25 அடி தெய்வ பலன் கிடைக்காது. 
26 அடி செல்வம் சேரும் ஆனால் அமைதி இருக்காது.
27 அடி செல்வ செழிப்புடன் வாழ்வீர்கள். 
28 அடி வீட்டில் செல்வம் அதிகரிக்கும். தெய்வ பலன் கிடைக்கும்.
29 அடி செல்வம் பெருகும், பால் பாக்கியம் கிடைக்கும்.
30 அடி லட்சுமி கடாட்சம் உண்டாகும்.
31 அடி இறைவன் அருள் கிடைக்கும்.
32 அடி ஏற்றத்தாழ்வு ஏற்படும். ஆனால் கடவுள் அருள் நிச்சயம் உண்டு.
33 அடி குடி உயரும்.
34 அடி வீட்டை விட்டு ஓடும் நிலை உண்டாகும்.
35 அடி லட்சுமிகடாட்சம் இருக்கும்.
36 அடி அரசர் போல வாழ்வார்கள்.
37 அடி இன்பம், லாபம் இரண்டும் உண்டு.
38 அடி தீய சக்திகள் குடிகொள்ளும்.
39 அடி சுகம், இன்பம் இரண்டும் உண்டு.
40 அடி வெறுப்பு, சோர்வு உண்டாகும்.
41 அடி செல்வம், இன்பம் இரண்டும் உண்டு.
42 அடி மகாலட்சுமி குடியிருப்பாள்.
43 அடி தீங்கு உண்டாகும்.
44 அடி கண் சம்மந்தமான பிரச்சனைகள் ஏற்படும்.
45 அடி சகல பாக்கியம் உண்டாகும்.
46 அடி குடி பெயரும் நிலை ஏற்படும்.
47 அடி வறுமை பீடிக்கும்.
48 அடி நெருப்பு சம்மந்தமான பாதிப்புகள் ஏற்படும்.
49 அடி மூதேவி வாசம் செய்வாள்.
50 அடி பால் பாக்கியம் உண்டாகும்.
51 அடி துன்பங்களும் தொல்லைகளும் ஏற்படும்.
52 அடி தானியம் அதிகரிக்கும்.
53 அடி விரயம் உண்டாகும்.
54 அடி லாபம் பெருகும்.
55 அடி சுற்றத்தாரிடம் பகைமை ஏற்படும்.
56 அடி வம்சம் விருத்தியாகும். 
57 அடி குழந்தை இன்மை ஏற்ப்படும்.
58 அடி விரோதம் அதிகரிக்கும்.
59 அடி நன்மை தீமை அதிகம் இல்லாத மத்திம நிலை.
60 அடி பொருள் சேர்க்கை உண்டாகும்.
61 அடி பகை அதிகரிக்கும்.
62 அடி வறுமை பீடிக்கும்.
63 அடி குடி பெயரும் நிலை ஏற்படும்.
64 அடி சகல சம்பத்தும் உண்டாகும்.
65 அடி இல்லற வாழ்க்கையில் பிரச்சனைகள் ஏற்படும்.
66 அடி புத்திர பாக்கியம் ஏற்படும்.
67 அடி வீட்டில் ஏதாவது ஒரு பயம் நிலைத்திருக்கும்.
68 அடி லாபம் பெருகும்.
69 அடி நெருப்பினால் சேதம் உண்டாகும்.
70 அடி பிறருக்கு நன்மை செய்யும் நிலை உண்டாகும்.
71 அடி புகழ், யோகம்.
72 அடி ஆடம்பர வாழ்வு கிடைக்கும்.
73 அடி குதிரை கட்டி வாழ்வான்.
74 அடி அதிக செல்வம் உண்டாகும்.
75 அடி வீட்டில் சுகம் உண்டாகும்.
76 அடி பயம் உண்டாகும். 
77 அடி யானை கட்டி வாழ்வான்.
78 அடி வாரிசுகளுக்கு தீமை உண்டாகும்.
79 அடி கால்நடைகள் பெருகும்.
80 அடி லட்சுமி கடாச்சம் வீசும்.
81 அடி ஆபத்து உண்டாகும்.
82 அடி இயற்கையால் சேதம் உண்டாகும்.
83 அடி மரண பயம் உண்டாகும்.
84 அடி சகல பாக்கியமும் கிடைக்கும்.
85 அடி செல்வந்தராக வாழ்வார்கள்.
86 அடி தொல்லை, துயரங்கள் அதிகரிக்கும்.
87 அடி பிரயாணங்களால் நன்மைகள் ஏற்படும்.
88 அடி செளக்கியம் உண்டாகும்.
89 அடி அடுத்தடுத்து வீடு கட்டும் நிலை உண்டாகும்.
90 அடி யோகம் உண்டாகும்.
91 அடி விஸ்வாசமான மனிதர்களின் சேர்க்கை ஏற்படும்.
92 அடி ஐஸ்வரியம் பெருகும்.
93 அடி கடல் கடந்து பொருள் ஈட்டுவர்.
94 அடி அந்நிய தேசத்தில் இருப்பான்.
95 அடி தனம் பெருகும்.
96 அடி அனைத்தும் அழியும் நிலை உண்டாகும்.
97 அடி நீர் சம்பந்தமான வியாபாரம் செய்வர்.
98 அடி வெளிநாடு செல்லும் வாய்ப்பு உண்டாகும்.
99 அடி நாடு ஆழ்வார்.
100 அடி அனைத்து பலன்களும் கிடைக்கும். 

வாஸ்து பார்க்கும் முறை

  • அலுவலக அறை – வடமேற்கு திசை
  • புத்தக அறை – தென்மேற்குத் திசை
  • சமையல் அறை – தென் கிழக்குத் திசை
  • சாப்பிடும் அறை – தெற்குத் திசை
  • படுக்கை அறை – மேற்கு, வடகிழக்குத் திசைகள்
  • பூஜை அறை – மேற்கு, வடகிழக்குத் திசைகள்
  • குளியல் அறை – கிழக்கு திசை
  • சேமிப்பு அறை – வடக்கு திசை.
  • கழிவறை – வட மேற்கு திசை.


திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore