கனவு பலன்கள் | Kanavu Palangal in Tamil

Updated On

நம் கனவில் என்ன வந்தால் என்ன பலன்

கனவு என்பது பிறந்த குழந்தை முதல் முதியவர்கள் வரை அனைவருக்கும் தோன்றும் ஒரு விஷயமாகும். பிறந்த குழந்தை தூக்கத்தில் சிரிப்பது கூட கனவு என்று தான் கூறுகின்றனர், இப்படி கனவு என்பது நமது விருப்பம், நமது ஆல் மனதில் இருக்கும் ஆசை அல்லது அன்று நமது மனதை பாதித்த ஒரு செயல் இப்படி ஒரு சில விஷயங்கள் நமது கனவில் வருவதற்கு வாய்ப்புள்ளது. இவ்வாறு வரும் கனவுகளுக்கு என்ன பலன் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். எந்த மாதிரி கனவுகளுக்கு என்ன பலன் (dreams and meaning in tamil) என்பதை பாப்போம்.

Kanavu Palangal in tamil

Tamil Astrology Dream Meaning

 

உறவினர்கள் கனவில் வந்தால் என்ன பலன்?

உங்களின் உறவினர்கள் யாராவுது இறந்து விட்டது போல் கனவு வந்தால், அவருடைய துன்பங்கள் வெகு விரைவில் நீங்கும் என்பதைக் குறிக்கும்.

நண்பர்கள் கனவில் வந்தால் என்ன பலன்?

உங்கள் நண்பன் ஒருவன் இறந்து போனது போல் கனவு வந்தால், வெகு விரைவில் ஏதேனும் நற்செய்தி ஒன்று வரும் என்பது பொருள்.

காதலி கனவில் வந்தால் என்ன பலன்?

காதலியை கனவில் கண்டால் பல சிக்கல்கள் வரும், அதை கடந்து தான் வெற்றிபெற வேண்டும் என்பதாகும்.

Astrological meaning of Dreams in tamil

பெண்கள் கனவு பலன்கள்

பெண்கள் கனவில் வந்தால் என்ன பலன்?

கன்னிப் பெண் கனவில் வந்தால் என்ன பலன்?

கன்னிப் பெண்ணை கனவில் கண்டால் நன்மைகள் உங்களை வந்து சேரும்.

அழகான பெண் கனவில் வந்தால் என்ன பலன்?

அழகான பெண்ணை நீங்கள் கனவில் கண்டால் உங்கள் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருப்பீர்கள்.

சுமங்கலிப் பெண்கள் கனவில் வந்தால் என்ன பலன்?

சுமங்கலிப் பெண் வீட்டிற்கு வருவது போல கனவு கண்டால் ஏராளமான நன்மைகள் கிடைக்கும். 

ஒரு பெண் மங்கலப் பொருட்களுடன் உங்கள் வீட்டிற்கு வருவது போல கனவு கண்டால் அந்த குடும்பத்தில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் விரைவில் நடைபெறும்.

 காதல் சொல்வது போல் கனவு கண்டால் உங்களுக்கு லாபம் உண்டாகும்.

குழந்தை கனவில் வந்தால் என்ன பலன்?

பெண் குழந்தை பிறப்பது போல் கனவு கண்டால் மேன்மை உண்டாகும்.

விதவைப் பெண் கனவில் வந்தால் என்ன பலன்?

விதவைப் பெண் வீட்டிற்குள் வருவது போல கனவு கண்டால் திட்டமிட்ட செயல் சிறிய தடங்களுடன் நடக்கும்.

நெருப்பை கனவில் கண்டால் என்ன பலன்? | Neruppu kanavu palangal in tamil

நீங்கள் தீயை மிதிப்பது போல கனவு கண்டால் மிகப்பெரிய ஒரு சிக்கலில் நீங்கள் மாட்டி கொள்ள போகிறீ கிர்கள் என அர்த்தம்.

dream astrology in tamil

தீ பிடித்து எரிவது போல கனவு கண்டால் ஏதோ தீய செய்திகள் உங்களை வந்து சேரும் என அர்த்தம்.

தீபம் நன்றாக எரிவது போல கனவு கண்டால் எல்லா பலன்களும் கிடைக்கும்.

கர்ப்பம் ஆவது போல் கனவு வந்தால் என்ன பலன்?

karbam aavathu pol kanavu palangal in tamil

ஒரு பெண் கர்ப்பமாக இருப்பது போல கனவு கண்டால் உங்களுக்கு புதிய வாய்ப்புகள் மூலமாக முன்னேற்றமான சூழல் உண்டாகும்.

திருமண கனவு பலன் (thirumana kanavu palangal in Tamil)

 திருமணக் கோலத்துடன் இருப்பது போல கனவு கண்டால் சமூகத்தில் நல்லமதிப்பு கிடைக்கும்.

திருமணமான ஜோடியை கனவில் கண்டால் சுபசெய்திகள் வரும்.

கனவில் விலங்குகள் வந்தால் என்ன பலன்?

(animals in dreams and their meaning in tamil)

பாம்பை கனவில் கண்டால் என்ன பலன்?

(seeing snake in dreams tamil astrology)
கனவில் பாம்பு வந்து நம்மைக் கடிப்பது போல் கனவு கண்டால் நம்மைப் பீடித்து வந்த துன்பம் நம்மை விட்டு விலகி விடும்.

பச்சை பாம்பை கனவில் கண்டால் என்ன பலன்?
(green snake in dream meaning in tamil)
பச்சை பாம்பை கனவில் கண்டால் புதிய முயற்சிகளில் சில சிக்கல் உண்டாகும் என்பதை குறிக்கின்றது.

யானை கனவில் வந்தால் என்ன பலன்?

(elephant in dream astrology in tamil)

யானை நமது கனவில் வந்தால், நமக்குப் பெரும் செல்வம் ஏதோ ஒரு வகையில் கிடைக்கப்போகிறதென்று பொருள்.

யானையின் மீது உட்கார்ந்துகொண்டு சவாரிசெய்வது போல கனவு வந்தால், நமக்கு பதவிஉயர்வு கிடைக்கலாம். சொந்தமாக வீடு வாங்கும் வாய்ப்பு நமக்குக் கிடைக்கலாம்.

கனவில் நாய் வந்தால் என்ன பலன்?
(dogs in dreams tamil astrology)

நாய் கடிப்பது போல கனவு வந்தால் நம்பிக்கை தொடர்பான பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore