20 Easy Thirukkural in Tamil | 20 எளிமையான திருக்குறள்

Updated On

20 எளிமையான திருக்குறள் மற்றும் விளக்கம் | 20 Easy Thirukkural in Tamil with Meaning

Tamil Thirukkural with Meaning |
திருக்குறள் மற்றும் விளக்கம்

1. துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉ மழை.

விளக்கம் (Thirukkural meaning):

உண்பவர்க்குத் தக்க உணவுப் பொருள்களை விளைவித்துத் தருவதோடு, பருகுவார்க்குத் தானும் ஓர் உணவாக இருப்பது மழையாகும்.

விரிவான விளக்கத்திற்கு: இங்கே கிளிக் செய்யவும்

2. அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம்.

விளக்கம் (Thirukkural meaning):

பொறாமை, ஆசை, சினம், கடுஞ்சொல் ஆகிய இந்த நான்கு குற்றங்களுக்கும் இடங்கொடுக்காமல் அவற்றைக் கடித்து ஒழுகுவதே அறமாகும்.

விரிவான விளக்கத்திற்கு: இங்கே கிளிக் செய்யவும்

நீரின்றி அமையாது உலகு திருக்குறள்

3. நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வான்இன்று அமையாது ஒழுக்கு.

விளக்கம் (Thirukkural meaning):

எப்படிப்பட்டவர்க்கும் நீர் இல்லாமல் உலக வாழ்க்கை நடைபெறாது என்றால், மழை இல்லையானால் ஒழுக்கமும் நிலைபெறாமல் போகும்.

விரிவான விளக்கத்திற்கு: இங்கே கிளிக் செய்யவும்

4. குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர்.

விளக்கம் (Thirukkural meaning):

தம் மக்களின் மழலைச் சொல்லைக் கேட்டு அதன் இனிமையை நுகராதவரே குழலின் இசை இனியது யாழின் இசை இனியது என்று கூறுவர்.

விரிவான விளக்கத்திற்கு: இங்கே கிளிக் செய்யவும்

திருக்குறள் 1330 தமிழ் | Thirukkural in Tamil 1330

5. ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்.

விளக்கம் (Thirukkural meaning):

தன் மகனை நற்பண்பு நிறைந்தவன் என பிறர் சொல்லக் கேள்வியுற்ற தாய், தான் அவனை பெற்றக் காலத்தில் உற்ற மகிழ்ச்சியை விடப் பெரிதும் மகிழ்வாள்.

விரிவான விளக்கத்திற்கு: இங்கே கிளிக் செய்யவும்

6. அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
புன்கணீர் பூசல் தரும்.

விளக்கம் (Thirukkural meaning):

அன்புக்கும் அடைத்து வைக்கும் தாழ் உண்டோ? அன்புடையவரின் சிறு கண்ணீரே ( உள்ளே இருக்கும் அன்பைப் ) பலரும் அறிய வெளிப்படுத்திவிடும்.

விரிவான விளக்கத்திற்கு: இங்கே கிளிக் செய்யவும்

திருக்குறள் பொருளுடன் | Thirukkural in Tamil with Meaning

7. காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது.

விளக்கம் (Thirukkural meaning):

உற்ற காலத்தில் ஒருவன் செய்த உதவி சிறிதளவாக இருந்தாலும், அதன் தன்மையை அறிந்தால் உலகைவிட மிகப் பெரிதாகும்.

விரிவான விளக்கத்திற்கு: இங்கே கிளிக் செய்யவும்

8. அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை.

விளக்கம் (Thirukkural meaning):

தன்னை வெட்டுவோரையும் விழாமல் தாங்குகின்ற நிலம் போல், தம்மை இகழ்வாரையும் பொறுப்பதே தலையான பண்பாகும்.

விரிவான விளக்கத்திற்கு: இங்கே கிளிக் செய்யவும்

Thirukkural in Tamil

9. தீயவை தீய பயத்தலால் தீயவை
தீயினும் அஞ்சப் படும்.

விளக்கம் (Thirukkural meaning):

தீயசெயல்கள் தீமையை விளைவிக்கும் தன்மை உடையனவாக இருத்தலால், அத் தீயச் செயல்கள் தீயைவிடக் கொடியனவாகக் கருதி அஞ்சப்படும்.

விரிவான விளக்கத்திற்கு: இங்கே கிளிக் செய்யவும்

10. ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது
ஊதியம் இல்லை உயிர்க்கு.

விளக்கம் (Thirukkural meaning):

வறியவர்க்கு ஈதல் வேண்டும் அதனால் புகழ் உண்டாக வாழ வேண்டும், அப் புகழ் அல்லாமல் உயிர்க்கு ஊதியமானது வேறொன்றும் இல்லை.

விரிவான விளக்கத்திற்கு: இங்கே கிளிக் செய்யவும்

திருக்குறள் 20 to 30 | Thirukkural 20 to 30

11. தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று.

விளக்கம் (Thirukkural meaning):

ஒரு துறையில் முற்பட்டுத் தோன்றுவதானால் புகழோடு தோன்ற வேண்டும், அத்தகைய சிறப்பு இல்லாதவர் அங்குத் தோன்றுவதைவிடத் தோன்றாமலிருப்பதே நல்லது.

விரிவான விளக்கத்திற்கு: இங்கே கிளிக் செய்யவும்

12. எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்
பொய்யா விளக்கே விளக்கு.

விளக்கம் (Thirukkural meaning):

(புறத்தில் உள்ள இருளை நீக்கும்) விளக்குகள் எல்லாம் விளக்குகள் அல்ல, சான்றோர்க்கு (அகத்து இருள் நீக்கும்) பொய்யாமையாகிய விளக்கே விளக்கு ஆகும்.

விரிவான விளக்கத்திற்கு: இங்கே கிளிக் செய்யவும்

திருக்குறள் பொருள் | Thirukkural Tamil Meaning

13. இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால்
என்ன பயத்ததோ சால்பு.

விளக்கம் (Thirukkural meaning):

துன்பமானவற்றைச் செய்தவர்க்கும் இனிய உதவிகளைச் செய்யா விட்டால், சான்றோரின் சால்பு என்ன பயன் உடையதாகும்.

விரிவான விளக்கத்திற்கு: இங்கே கிளிக் செய்யவும்

14. உள்ளம் உடைமை உடைமை பொருளுடைமை
நில்லாது நீங்கி விடும்.

விளக்கம் (Thirukkural meaning):

ஒருவர்க்கு ஊக்கமுடைமையே நிலையான உடைமையாகும், மற்றப் பொருளுடைமையானது நிலைபேறு இல்லாமல் நீங்கிவிடுவதாகும்.

விரிவான விளக்கத்திற்கு: இங்கே கிளிக் செய்யவும்

குழந்தைகளுக்கான எளிய திருக்குறள் | Thirukkural for Kids

15. உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது
தள்ளினுந் தள்ளாமை நீர்த்து.

விளக்கம் (Thirukkural meaning):

எண்ணுவதெல்லாம் உயர்வைப்பற்றியே எண்ண வேண்டும், அவ் வுயர்வுக் கைகூடாவிட்டாலும் அவ்வாறு எண்ணுவதை விடக்கூடாது.

விரிவான விளக்கத்திற்கு: இங்கே கிளிக் செய்யவும்

16. செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்து ளெல்லாந் தலை.

விளக்கம் (Thirukkural meaning):

செவியால் கேட்டறியும் செல்வம், செல்வங்களுள் ஒன்றாகப் போற்றப்படும் செல்வமாகும், அச் செல்வம் செல்வங்கள் எல்லாவற்றிலும் தலையானதாகும்.

விரிவான விளக்கத்திற்கு: இங்கே கிளிக் செய்யவும்

திருக்குறள் மற்றும் பொருள் | Thirukkural with Porul

17. எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு..

விளக்கம் (Thirukkural meaning):

எண் என்று சொல்லப்படுவன எழுத்து என்று சொல்லப்படுவன ஆகிய இரு வகைக் கலைகளையும் வாழும் மக்களுக்குக் கண்கள் என்று கூறுவர்.

விரிவான விளக்கத்திற்கு: இங்கே கிளிக் செய்யவும்

18. இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயஞ் செய்து விடல்.

விளக்கம் (Thirukkural meaning):

இன்னா செய்தவரைத் தண்டித்தல் அவரே நாணும் படியாக அவருக்கு நல்லுதவி செய்து அவருடைய தீமையையும் நன்மையையும் மறந்து விடுதலாகும்.

விரிவான விளக்கத்திற்கு: இங்கே கிளிக் செய்யவும்

பெய்யும் மழை திருக்குறள்

19. தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை.

விளக்கம் (Thirukkural meaning):

வேறு தெய்வம் தொழாதவளாய்த் தன் கணவனையே தெய்வமாகக் கொண்டு தொழுது துயிலெழுகின்றவள் பெய் என்றால் மழை பெய்யும்!.

விரிவான விளக்கத்திற்கு: இங்கே கிளிக் செய்யவும்

20. தீயவை தீய பயத்தலால் தீயவை
தீயினும் அஞ்சப் படும்.

விளக்கம் (Thirukkural meaning):

தீயசெயல்கள் தீமையை விளைவிக்கும் தன்மை உடையனவாக இருத்தலால், அத் தீயச் செயல்கள் தீயைவிடக் கொடியனவாகக் கருதி அஞ்சப்படும்.

விரிவான விளக்கத்திற்கு: இங்கே கிளிக் செய்யவும்

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore