ஐவகை நிலங்கள் பற்றிய முழு வரலாற்று தொகுப்பு | Ivagai Nilangal In Tamil

Updated On

ஐந்து வகை நிலங்கள் |
Five Landforms in Tamilnadu in Tamil

பண்டைய தமிழகத்தில் நிலம் அதன் வளம் மற்றும் மக்கள் செயல்பாடுகளுக்கு ஏற்ப நிலத்தை ஐந்து வகைகளாக பிரித்தனர். அவை குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் மற்றும் பாலை ஆகிய ஐந்திணைகளாகும். ஐவகை நிலங்கள் கருப்பொருள் தெய்வம், தொழில், உணவு, மரம், பூ, ஊர், நீர், பறவை, விலங்கு ஆகியன உள்ளது. அதை பற்றி தெளிவாக இந்த பதிவில் பார்ப்போம்.

5 வகை நிலங்கள் | Ivagai Nilangal Details in Tamil

நிலம்  திணை
குறிஞ்சி மலையும் மலை சார்ந்த நிலமும்
முல்லை காடும் காடு சார்ந்த நிலமும்
மருதம் வயலும் வயல் சார்ந்த நிலமும்
நெய்தல் கடலும் கடல் சார்ந்த நிலமும்
பாலை மணலும் மணல் சார்ந்த இடமும்

ஐந்திணைப் பொழுதுகள் | 5 Types of Land

பொழுது என்பது காலத்தைக் குறிக்கும். ஓர் ஆண்டின் ஆறு பருவகாலத்தைக் குறிப்பது ‘பெரும்பொழுது’.
ஒரு நாளின் ஆறு பிரிநிலைக் குறியீடுகளைக் குறிப்பது ‘சிறுபொழுது’

ஐவகை நிலங்கள் பொழுது

நிலம் பொழுது
குறிஞ்சி பெரும்பொழுது – கூதிர்காலம்
சிறுபொழுது – யாமம்
முல்லை பெரும்பொழுது – கார்
சிறுபொழுது – மாலை
மருதம் பெரும்பொழுது – ஆறு பெரும்பொழுது
சிறுபொழுது – வைகறை
நெய்தல் பெரும்பொழுது – ஆறு பெரும்பொழுது
சிறுபொழுது – எற்பாடு
பாலை பெரும்பொழுது – வேனில்
சிறுபொழுது – நண்பகல்

ஐந்து வகை நிலங்கள் அட்டவணை | Kurinji Mullai Five Types of Land in Tamil

ஐந்திணை கடவுள்

நிலம்  தெய்வம்
குறிஞ்சி முருகன்
முல்லை திருமால்
மருதம் இந்திரன்
நெய்தல் வருணன்
பாலை கொற்றவை

ஐவகை நிலங்கள் தலைவன்

நிலம்  மக்கள்
குறிஞ்சி குறவன், குறத்தியர்
முல்லை ஆயர், ஆய்ச்சியர்
மருதம் உழவர், உழத்தியர்
நெய்தல் பரதர், பரத்தியர்
பாலை எய்னர், எயிற்றியர்

ஐவகை நிலங்கள் உணவு

நிலம்  உணவு
குறிஞ்சி தினை, மலை நெல்
முல்லை வரகு, சாமை
மருதம் செந்நெல், வெண்ணெய்
நெய்தல் மீன்
பாலை சூறையாடலால் வரும் பொருள்

ஐவகை நிலங்கள் விலங்கு

நிலம்  விலங்கு
குறிஞ்சி புலி, கரடி, சிங்கம்
முல்லை முயல், மான்
மருதம் எருமை, நீர்நாய்
நெய்தல் முதலை, சுறா
பாலை வலிமை இழந்த யானை

ஐவகை நிலங்கள் பூக்கள்

நிலம்  பூ
குறிஞ்சி குறிஞ்சி, காந்தள்
முல்லை முல்லை, தோன்றி
மருதம் செங்கழுநீர், தாமரை
நெய்தல் தாழை, நெய்தல்
பாலை குரவம், பாதிரி

ஐவகை நிலங்கள் மரம்

நிலம்  மரம்
குறிஞ்சி அகில், வேங்கை
முல்லை கொன்றை, காயா
மருதம் காஞ்சி, மருதம்
நெய்தல் புன்னை, ஞாழல்
பாலை இலுப்பை, பாலை

ஐவகை நிலங்கள் பறவை

நிலம்  பறவை
குறிஞ்சி கிளி, மயில்
முல்லை காட்டுக்கோழி, மயில்
மருதம் நாரை, நீர்க்கோழி, அன்னம்
நெய்தல் கடற்காகம்
பாலை புறா, பருந்து

ஐவகை நிலங்கள் ஊர்

நிலம்  ஊர்
குறிஞ்சி சிறுகுடி
முல்லை பாடி, சேரி
மருதம் பேரூர், மூதூர்
நெய்தல் பட்டினம், பாக்கம்
பாலை குறும்பு

ஐவகை நிலங்கள் நீர்

நிலம்  நீர்
குறிஞ்சி அருவி நீர், சுனை நீர்
முல்லை காட்டாறு
மருதம் மனைக்கிணறு, பொய்கை
நெய்தல் மணற்கிணறு, உவர்க்கழி
பாலை வற்றிய சுனை, கிணறு

ஐவகை நிலங்கள் பறை

நிலம்  பறை
குறிஞ்சி தொண்டகப் பறை
முல்லை ஏறுகோட்
மருதம் மணமுழா, நெல்லரிகிணை
நெய்தல் மீன்கோட்பறை
பாலை துடி

ஐவகை நிலங்கள் யாழ்

நிலம்  யாழ்
குறிஞ்சி குறிஞ்சியாழ்
முல்லை முல்லையாழ்
மருதம் மருதயாழ்
நெய்தல் விளரியாழ்
பாலை பாலையாழ்

ஐவகை நிலங்கள் பண்

நிலம்  பண்
குறிஞ்சி குறிஞ்சிப்பண்
முல்லை முல்லைப்பண்
மருதம் மருதப்பண்
நெய்தல் செவ்வழிப்பண்
பாலை பஞ்சுரப்பண்

ஐவகை நிலங்கள் தொழில்

நிலம்  தொழில்
குறிஞ்சி தேன்எடுத்தல், கிழங்கு அகழ்தல் 
முல்லை ஏறு தழுவுதல், நிரை மேய்த்தல்
மருதம் நெல்லரிதல், களைபறித்தல்
நெய்தல் மீன்பிடித்தல், உப்புவிளைத்தல்
பாலை வழிப்பறி செய்தல்

ஐவகை நிலங்கள் ஆசிரியர்கள்

ஐங்குறுநூறு

குறிஞ்சி திணை – கபிலர்
முல்லை திணை – பேயனார்
மருதம் திணை – ஓரம் போகியார்
நெய்தல் திணை – அம்மூவனார்
பாலை திணை – ஓதலாந்தையார்

கலித்தொகை

குறிஞ்சி கலி – கபிலர்
முல்லை கலி – சோழன் நல்லுருத்திரன்
மருதம் கலி – மருதனில் நாகனார்
நெய்தல் கலி – நல்லந்துவனார்
பாலை கலி – பெருங்கடுங்கோன்

ஐவகை நிலங்கள் திருக்குறள்

ஐவகை நிலங்களை ஒரே திருக்குறளில் கூறியுள்ளார் திருவள்ளுவர்.

அதிகாரம் : நலம்புனைந்துரைத்தல்

முறிமேனி முத்தம் முறுவல் வெறிநாற்றம்
வேலுண்கண் வேய்த்தோ ளவட்கு. – 1113



திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore