வேர்க்கடலை சப்பாத்தி | Peanut Paratha Recipe in Tamil

Updated On 15/06/2022

வேர்க்கடலை பாரட்டா | Peanut Paratta in Tamil

பாதாம், பிஸ்தா அல்லது முந்திரி போன்ற உயர்தரமான பருப்புகளைப் போல வேர்க்கடலை ஊட்டச்சத்து மதிப்புமிக்கது அல்ல என்று பலர் நினைக்கின்றனர். ஆனால் உண்மையில், வேர்க்கடலை அதிக விலையுயர்ந்த பருப்புகளைப் போலவே பல ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டுள்ளது. வேர்க்கடலை மற்ற கொட்டை வகை உணவுகளை விட அதிக புரதத்தைக் கொண்டுள்ளது.

சத்தான வேர்க்கடலையை வைத்து சுவையான வேர்க்கடலை சப்பாத்தி எப்படி செய்வது என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

Peanut Stuffed Paratha Recipe in Tamil | வேர்க்கடலை சப்பாத்தி

தேவையான பொருட்கள்

கோதுமை மாவு – 1 கப்

உப்பு – தேவைக்கேற்ப

எண்ணெய் – 1 தேக்கரண்டி

வேர்க்கடலை – கால் கப்

பொட்டுகடலை – 2 தேக்கரண்டி

சிவப்பு மிளகாய் – 2

வருத்த சீரகம் –  1 தேக்கரண்டி

How to make Peanut Paratha in tamil?

செய்முறை

  • ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு நன்றாக பிசைந்து எடுக்கவும். அதை 1 மணி நேரம் முதல் 1.30 மணி நேரம் வரை ஊறவிடவும்.
  • வேர்க்கடலையை மிதமான தீயில் நன்றாக வறுத்து எடுத்துக் கொள்ளவும். அது ஆறியதும் தோலை நீக்கி எடுத்துக்கொள்ளவும்.
  • அடுத்து பொட்டு கடலை மற்றும் மிளகாயை லேசாக வறுத்து எடுக்கவும்.
  • வறுத்து ஆரிய பொருட்கள் அனைத்தையும் மிக்சி ஜாரில் சேர்த்து 90 சதவிகிதம் அளவிற்கு மட்டும் அரைத்து எடுக்கவும், அதனுடன் வறுத்த சீரகம் மற்றும் உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.
  • ஒரு உருண்டை சப்பாத்தி மாவை எடுத்து சிறிது தட்டவும். அதில் ஒரு தேக்கரண்டி வேர்க்கடலை பூரணத்தை வைத்து விளிம்புகளை ஒன்றாக சேர்த்து முருக்கி எடுக்கவும்.
  • பின்னர் உருண்டையை லேசாக தேய்த்து எடுக்கவும். அதை மிதமான சூட்டில் இரண்டு புறமும் சுட்டு எடுக்கவும்.

இப்போது சுவையான வேர்க்கடலை சப்பாத்தி தயார்.