பூசணி விதை பருப்பு பொடி | Poosani Vidhai Paruppu Podi Recipe in Tamil

Updated On

பூசணி விதை பொடி | Poosani Vidhai Podi in Tamil

பூசணி விதை இட்லி பொடி | Idli Podi Powder Recipe

பூசணி விதைகள் அளவில் சிறியதாக இருந்தாலும் அதில் மனித உடலுக்கு அவசியமான மற்றும் நன்மை பயக்கும் ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளது.

இந்த பூசணி விதையை வைத்து பருப்பு இட்லி பொடி எப்படி அரைப்பது என்று இந்த பதிவில் பார்ப்போம்.

பூசணி விதை பருப்பு பொடி | Idli Podi Recipe in Tamil

தேவையான பொருட்கள்

  1. பூசணி விதை – 1/2 கப்
  2. கடலைப்பருப்பு – 1/4 கப்
  3. உளுந்தம் பருப்பு – 1/4 கப்
  4. சிவப்பு மிளகாய் – 4
  5. சீரகம் – 1/2 தேக்கரண்டி
  6. மிளகு – 1/2 தேக்கரண்டி
  7. பெருங்காயம் – ஒரு சிட்டிகை
  8. உப்பு – தேவைக்கேற்ப

செய்முறை

  • ஒரு கடாயை சூடாக்கி அதில் பூசணி விதையை சேர்த்து பழுப்பு நிறமாகும் வரை வறுத்து எடுக்கவும். அதை அகலமான தட்டில் கொட்டி ஆறவிடவும்.
  • பின்னர் அதே கடாயில் கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, மிளகு, மிளகாய் மற்றும் சீரகம் ஆகியவற்றை சேர்த்து நன்றாக வறுத்து எடுக்கவும்.
  • இவை அனைத்தும் நன்றாக ஆறியதும், மிக்ஸி ஜாரில் போட்டு உப்பு மற்றும் பெருங்காயம் சேர்த்து அரைத்து எடுக்கவும்.
  • இதை ஒரு தட்டில் கொட்டி, கட்டிகளை நன்றாக உடைத்து விட்டு ஆறவிடவும். நன்றாக ஆறியதும் காற்றுப்புகாத பாத்திரத்தில் போட்டு மூடி வைத்துக் கொள்ளவும்.

இந்த பூசணி விதை பருப்பு பொடி இட்லி, தோசை மற்றும் சாதத்திற்கு சிறந்த சுவையாக இருக்கும். இந்த பொடியுடன் நல்லெண்ணெய் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.



திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore