சரவணபவன் ஹோட்டல் சாம்பார் | Saravana Bhavan Hotel Sambar

Updated On

சரவணபவன் ஹோட்டல் சாம்பார் | Saravana Bhavan Hotel Sambar

சரவண பவன் ஹோட்டல் சாம்பார் மிகவும் பிரபலமான ஒன்று. இந்த சாம்பார் இட்லி, தோசை, பொங்கல், ஊத்தாப்பம் போன்ற டிபன் வகைகளுடன் சாப்பிட மிகவும் அருமையாக இருக்கும். இதன் வாசனை மற்றும் சுவை குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். இந்த சாம்பார் செய்வது மிகவும் எளிது, குறைந்த நேரத்தில் செய்து முடிக்கலாம். இந்த சரவண பவன் ஹோட்டல் சாம்பார் எப்படி செய்வது என்று பாப்போம்.

தேவையான பொருட்கள்

  1. முருங்கைக்காய் – 1
  2. கத்தரிக்காய் – 2
  3. சாம்பார் வெங்காயம் – 10
  4. துவரம்பருப்பு – கால் கப்
  5. தக்காளி – ஒன்று
  6. பச்சைமிளகாய் – 2
  7. உப்பு – தேவையான அளவு
  8. புளி – சிறிய எழுமிச்சை அளவு

அரைப்பதற்கு:

  1. தக்காளி – ஒன்று (பெரியது)
  2. தேங்காய் – ஒரு தேக்கரண்டி
  3. பொட்டுக்கடலை – 2 தேக்கரண்டி
  4. பெருங்காயம் – சிறிது
  5. சாம்பார் பொடி – 4 தேக்கரண்டி

தாளிக்க:

  1. கடுகு – கால் தேக்கரண்டி
  2. உளுத்தம் பருப்பு – கால் தேக்கரண்டி
  3. சீரகம் – கால் தேக்கரண்டி
  4. குண்டு மிளகாய் – ஒன்று
  5. கறிவேப்பிலை, மல்லித் தழை – தேவையான அளவு

செய்முறை

  • மிக்ஸியில் அரைக்க வேண்டிய பொருட்களை போட்டு மைய அரைத்து எடுக்கவும். புளியை தண்ணீர் ஊற்றி கரைத்து வைக்கவும்.
  • காய்கறிகளை துண்டுகளாக நறுக்கவும். சின்ன வெங்காயத்தை தோல் உரித்து வைக்கவும்.
  • குக்கரில் பருப்பை போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மஞ்சள் தூள் சேர்த்து வேக வைக்கவும்.
  • வேக வைத்த பருப்புடன் மேலும் 4 டம்ளர் தண்ணீர் ஊற்றி நறுக்கிய காய்கறிகள், பச்சை மிளகாய், தக்காளி, பாதி வெங்காயம் போட்டு உப்பு சேர்த்து வேக விடவும்.
  • அரைத்த விழுது மற்றும் புளிக்கரைசலை வெந்த பருப்பு காய்க் கலவையில் சேர்த்து கொதிக்க விட்டு இறக்கவும்.
  • வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம் தாளித்து பெருங்காயம், கிள்ளிய வற்றல் மிளகாய், கறிவேப்பிலை, வெங்காயம் போட்டு வதக்கவும்.
  • சாம்பரை அதில் ஊற்றி  ஒரு கொதி வந்ததும், மல்லித் தழை சேர்த்து இறக்கவும்.
  • சுவையான ஹோட்டல் சாம்பார் தயார். இந்த சாம்பார் இட்லி, தோசை, ஊத்தப்பம், சாதம் போன்ற அனைத்திற்கும் மிகவும் அட்டகாசமாக இருக்கும்.


திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore