முருங்கைக்காய் சாம்பார் / Drumstick Sambar

Updated On

முருங்கைக்காய் பார்த்தாலே அதில் சாம்பார் வைத்து சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் தான் தோன்றும். குறிப்பாக நமது தமிழ்நாட்டில் முருங்கைக்காய் சாம்பார் மிகவும் பிரபலம். அந்த முருங்கைக்காய் சாம்பார் எப்படி செய்வது என்று பாப்போம்.

தேவையானவை

  1. முருங்கைக்காய் – 10 நறுக்கிய துண்டுகள்
  2. சின்ன  வெங்காயம் – 10
  3. தக்காளி – 2
  4. பூண்டு – 3
  5. புளி – நெல்லிக்காய் அளவு
  6. சீரகம் – அரை மேசைக்கரண்டி
  7. வெந்தயம் – அரை மேசைக்கரண்டி
  8. சாம்பார்த் தூள் – 2 மேசைக்கரண்டி
  9. மல்லித் தூள் – ஒரு மேசைக்கரண்டி
  10. பெருங்காயம் – இரு கிள்ளு
  11. மல்லித் தழை – சிறிது
  12. உப்பு – தேவையான அளவு

வேக வைக்க வேண்டிய பொருட்கள் :

  1. துவரம்பருப்பு – ஒரு கப்
  2. பூண்டு – 2
  3. மஞ்சள் தூள் – சிறிது
  4. நல்லெண்ணெய் – ஒரு மேசைக்கரண்டி

தாளிக்க தேவையான பொருட்கள் :

  1. கடுகு – சிறிது
  2. கடலை உளுத்தம் பருப்பு – தலா ஒரு மேசைக்கரண்டி
  3. கறிவேப்பிலை – 5 இதழ்
  4. வரமிளகாய் – 3

செய்முறை

  • வேக வைக்க கொடுத்தவற்றை வேக வைத்துக் கொள்ளவும். புளியை கரைத்துக் வடித்து எடுத்து கொள்ளவும். தக்காளி, வெங்காயத்தை நறுக்கிக் கொள்ளவும்.
  • ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தாளிக்க கொடுத்த பொருட்களை போட்டு தாளிக்கவும்.
  • பின் நறுக்கிய வெங்காயத்தையும், பூண்டையும் சிறிது உப்பு சேர்த்து வதக்கவும்.
  • தக்காளி, உப்பு சேர்த்து மாசியும் அளவிற்கு வதக்கவும்.
  • பின் முருங்கைக்காயை போட்டு நன்கு வதக்கவும்.
  • 2 நிமிடம் கழித்து 2 கப் புளிக்கரைசல் தண்ணீர் ஊற்றி ஒரு மேசைக்கரண்டி சாம்பார் தூள் மற்றும் மல்லி தூளை சேர்க்கவும். ஒரு கொதி வந்ததும் பெருங்காயத் தூளை சேர்த்து, மூடிவைத்து வேகவைக்கவும்.
  • முருங்கைக்காய் 90 சதவிகிதம் வெந்ததும் வேக வைத்த பருப்பை சேர்த்து நன்கு கிளறி ஒரு மேசைக்கரண்டி சாம்பார் தூளை சேர்க்கவும்.
  • சாம்பார் ஆனதும் உப்பு சரிபார்த்து,  மல்லித் தழை தூவவும். சுவையான, கமகமக்கும் முருங்கைக்காய் சாம்பார் ரெடி.

இந்த சாம்பார் சாதத்திற்கு மட்டுமல்லாது இட்லி, தோசை மற்றும் பொங்கல் போன்ற சிற்றுண்டிகளுக்கும் சுவையாக இருக்கும்.



திருத்தமிழ்
© 2022 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore