கத்தரிக்காய் சாம்பார் | Brinjal Sambar

Updated On

நமது மதிய வேளையில் நாம் விரும்பி சாப்பிடும் சாம்பார் வகைகளில் ஒன்று கத்தரிக்காய் சாம்பார். இதை புதுவிதமான முறையில் சமைத்து சுவைக்கலாம். சுவையான கத்திரிக்காய் சாம்பார் எப்படி செய்வது என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

  1. துவரம் பருப்பு – 250 கிராம்
  2. கத்தரிக்காய் – 5
  3. சின்ன வெங்காயம் – 100 கிராம்
  4. தக்காளி – 4
  5. பூண்டு – 6 பல்
  6. வெந்தயம் – 2 ஸ்பூன்
  7. சாம்பார்தூள் – 2 ஸ்பூன்
  8. மிளகாய்தூள் – 3 ஸ்பூன்
  9. உப்பு – தேவையான அளவு
  10. புளி – நெல்லிக்காய் அளவு
  11. மஞ்சள்தூள் – 1 ஸ்பூன்

தாளிக்க தேவையான பொருட்கள்

  1. எண்ணெய் – தேவையான அளவு
  2. கடுகு – 1 ஸ்பூன்
  3. உளுந்து  -1 ஸ்பூன்
  4. கடலைப்பருப்பு – 1 ஸ்பூன்
  5. கறிவேப்பிலை – சிறிதளவு
  6. வர மிளகாய் – 3

இந்த முருங்கைக்காய் சாம்பார் செய்து பாருங்கள்!!

செய்முறை:

  • பருப்பை தண்ணீரில் கழுவி குக்கரில் போட்டு அதனுடன் நறுக்கிய 2 தக்காளி மற்றும் பூண்டு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து 3 விசில் விடவும். (பருப்பை குக்கரில் வேகவைக்காமல் தனியாக பாத்திரத்தில் வேகவைத்து சமைத்தல் இன்னும் சுவையாக இருக்கும்)
  • சின்ன வெங்காயம்,2 தக்காளி,கத்தரிக்காய் இவற்றை நறுக்கி வைத்துக் கொள்ளவும். கத்தரிக்காயின் மேல் காம்புடன் நறுக்கி தண்ணீரில் போட்டு வைக்கவும்.
  • இப்போது ஒரு வாணலியை அடுப்பில் வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றவும். கடுகு, கடலைப்பருப்பு, உளுந்து சேர்த்து பொரிந்தவுடன் வெங்காயம், கறிவேப்பிலை, மிளகாய் சேர்த்து வதக்கவும்.
  • வெங்காயம் வதங்கியவுடன் நறுக்கிய தக்காளி மற்றும் உப்பு சேர்க்கவும்.
    தக்காளி வதங்கியவுடன் கத்தரிக்காயை சேர்த்து தேவையான அளவு மஞ்சள்தூள், சாம்பார்தூள், மிளகாய்தூள் சேர்த்து நன்றாக வதக்கவும். பின்பு புளியைக் கரைத்து ஊற்றவும்.
  • கத்தரிக்காய் வதங்கியவுடன் பருப்பைக் கடைந்து இதில் ஊற்றவும்.
    தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
  • நன்றாக கொதித்தவுடன் உப்பு சரிபார்த்து, மல்லி இலை தூவி இரக்கவும்.

இப்போது சுவையான கத்தரிக்காய் சாம்பார் தயார். இதை சாதத்துடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.

ஐயர் வீட்டு சாம்பார் பொடி



திருத்தமிழ்
© 2023 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore