இதை கடையில் வாங்கி உபயோகிப்பதால் இவ்வளவு பிரச்சனையா?

Updated On

குழம்பு மிளகாய் தூள்

நாம் கடையில் வாங்கி உபயோகிக்கும் குழம்பு மசாலாவை விட வீட்டில் வறுத்து அரைத்து உபயோகிக்கும் குழம்பு மிளகாய் தூள் மிகவும் சுவையாகவும் மற்றும் வாசனையாகவும் இருக்கும். இதை தயாரிப்பது மிகவும் சுலபமான வேலையாகும். கடையில் வாங்கும் மசாலாவில் உடலுக்கு தீங்குயிலைக்கும் சில வேதிப்பொருட்கள் கலந்திருக்கும், இது மசாலா நீண்ட நாள் கெட்டுப்போகாமல் பாதுகாக்கும். கடையில் வாங்கும் மசாலாவை தொடர்ந்து உபயோகித்தால் வயிற்றுப்புண், வயிறுஎரிச்சல் மற்றும் வாய்ப்புண் போன்ற உடல் உபாதைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. மசாலாவின் நிறத்தை அதிகப்படுத்த கலர் பவுடரை சேர்க்கின்றனர், இதனை அதிக அளவு நமது உடலில் சேர்ந்தால் வயிறு சார்ந்த பல நோய்கள் வருவது மட்டுமல்லாமல் சில நிற பொடிகள் புற்றுநோயை உண்டாக்கும் தன்மை கொண்டது என்று கூறுகின்றனர். இதில் இருந்து நம் உடலை பாதுகாக்க வீட்டிலே அரைத்த மிளகாய் தூளை பயன்படுத்துவது நல்லது. வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து மிகவும் எளிமையாக இந்த குழம்பு மிளகாய் தூளை தயார் செய்து விடலாம்.

தேவையான பொருட்கள்

  • 100 கிராம் சிவப்பு மிளகாய்
  • 100 கிராம் கொத்தமல்லி விதைகள்
  • 10 கிராம் துவரம் பருப்பு (1 தேக்கரண்டி)
  • 10 கிராம் பச்சை கடலை பருப்பு (1 தேக்கரண்டி)
  • 10 கிராம் உளுந்தம் பருப்பு (¾ தேக்கரண்டி)
  • 10 கிராம் மிளகு (1 தேக்கரண்டி) 
  • 5 கிராம்  கடுகு(1.25 டீஸ்பூன்)
  • 5 கிராம் வெந்தயம் (1.25 டீஸ்பூன்)
  • 10 கிராம் சீரகம் (4 டீஸ்பூன்)
  • 5 கிராம் மஞ்சள்

செய்முறை

ஒரு கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி அதில் கொத்தமல்லி விதைகளை போட்டு நிறம் மாறும் வரை நன்றாக வறுத்து தனியாக எடுத்துக்கொள்ளுங்கள். அதே கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி மிளகாயை அதில் சேர்த்து மிதமான தீயில் வறுத்து தனியாக எடுத்துக்கொள்ளுங்கள். பின்பு துவரம் பருப்பு, பச்சை கடலை பருப்பு மற்றும் உளுந்தம் பருப்பு மூன்றையும் ஒன்றாக சேர்த்து சிவக்க வறுத்து தனியாக வையுங்கள். அதன் பிறகு கடுகு, சீரகம் மற்றும் வெந்தயம் ஒன்றாக சேர்த்து வறுத்து எடுத்துக்கொள்ளுங்கள். மிளகை தனியாக வறுக்கவும்.
இவை அனைத்தையும் நன்றாக ஆற விடவும். ஆறிய பிறகு மிக்ஸி சாறில் சேர்த்து நன்றாக அரைத்து எடுத்துக்கொள்ளுங்கள். சுவை மற்றும் நறுமணமான குழம்பு மிளகாய் தூள் தயாராகி விட்டது. இதை சாம்பார், புளிக்குழம்பு, வத்தக்குழம்பு மற்றும் மீன் குழம்பு போன்ற அனைத்து குழம்பு வகைகளுக்கும் உபயோகப்படுத்தலாம்.

குறிப்பு

வேலைக்கு செல்லும் பெண்களாக இருந்தால் மேல கொடுத்துள்ள பொருட்களை இரட்டிப்பாக்கி அதிக அளவில் தயார் செய்து வைத்துக்கொள்ளலாம்.
இந்த மிளகாய் தூளை காற்று புகாத பாத்திரத்தில் போட்டு வைத்துக்கொண்டால் நீண்ட நாட்கள் கெட்டுப்போகாது.
இதை மிக்ஸியில் அரைப்பதற்கு பதிலாக மாவு அரைக்கும் இயந்திரத்தில் கொடுத்தும் அரைத்து எடுத்துக்கொள்ளலாம்.

 திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore