வெங்காயத்துக்கு பதிலா இதை உபயோகித்து பாருங்க

Updated On

நாம் சமைக்கும் ஒவ்வொரு சமையலிலும் வெங்காயம் முதன்மையான அடிப்படை பொருளாக சேர்க்கப்படுகிறது. வெங்காயம் உணவின் சுவையை அதிகரிக்க மட்டுமின்றி, நிறைய கிரேவியைப் பெறவும் உதவுகிறது. ஆனால் வெங்காய விலை உயர்வால் பலர் வெங்காயத்தை வாங்கவும் முடியாமல், சமைக்கவும் முடியாமல் அவஸ்தைப்படுகிறார்கள்.

வெங்காய விலை எகிறிக் கொண்டிருக்கிறது. இதனால் வெங்காயத்தை வாங்குவதற்கே பயமாக உள்ளது. ஆனால் வெங்காயம் இல்லாமல் சமைப்பது என்பது மிகவும் கடினம். வெங்காயத்திற்கு பதிலாக கீழ் வரும் பொருட்களை உபகோகித்து பாருங்கள்.

கடலை மாவு

நீங்கள் சமைக்கும் போது சமையலில் கட்டாயம் வெங்காயத்தை முற்றிலும் தவிர்ப்பது என்பது சற்று கடினம் தான். ஆனால் உங்களுக்கு கிரேவி அதிகமாக வேண்டுமானால், சமைக்கும் போது மிகச்சிறிய அளவு வெங்காயத்தை சேர்த்து, கிரேவிக்கு கடலை மாவை நீரில் கலந்து சேர்த்துக் கொள்ளலாம். இதனால் கிரேவியின் சுவை சற்று வித்தியாசமான சுவையுடன் அற்புதமாக இருக்கும்.

இஞ்சி பூண்டு பேஸ்ட்

சமையலில் வெங்காயத்தின் சுவைக்கும், மணத்திற்கும் இணையாக எதுவும் வர முடியாது. ஆனால் வித்தியாசமான ருசி என்று வரும் போது, சமையலில் சிறிது இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்துக் கொண்டாலே போதும், வெங்காயம் தேவையே படாது. வேண்டுமானால், இனிமேல் நீங்கள் சமைக்கும் கிரேவி முதல் சட்னி வரையிலான அனைத்து சமையலிலும் சிறிது இஞ்சி பூண்டு பேஸ்ட்டை சேர்த்துப் பாருங்கள்.

கடுகு பேஸ்ட்

கிழக்கத்திய பகுதிகளில் வலுவான மணத்திற்கும் சுவைக்கும் பயன்படுத்தப்படும் ஓர் பொருள் தான் கடுகு. கடுகு விதைகளை நீரில் ஊற வைத்து மென்மையாக அரைத்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். இந்த கடுகு பேஸ்ட்டை சிக்கன், மீன் மற்றும் இதர அசைவ கிரேவிகளுடன் சேர்த்துக் கொண்டால், சுவை விசித்திரமாகவும், நல்ல மணமாகவும், அடர்த்தியான கிரேவியுடனும் இருக்கும்.

முந்திரி

சமையலில் முந்திரி மற்றும் வெங்காயம் இரண்டுமே முற்றிலும் வித்தியாசமான பொருட்கள். ஆனால் இந்த இரண்டு பொருட்களும் சமையலில் அடர்த்தியான கிரேவியைப் பெறவும், அற்புதமான சுவையையும் கொடுக்கும். வெங்காய விலை உயர்வால், கிரேவியில் வெங்காயத்தை அதிகம் பயன்படுத்துவதற்கு பதிலாக, முந்திரி பேஸ்ட்டை கிரேவியில் சேர்த்துக் கொண்டால், நிறைய கிரேவி கிடைப்பதோடு, நல்ல சுவையுடனும் இருக்கும்.

தக்காளி

பெரும்பாலான குழம்பு வகைகள் மற்றும் கிரேவி வகைகளில் வெங்காயம் மற்றும் தக்காளி இரண்டுமே பயன்படுத்தப்படும். ஆனால் வெங்காயத்தின் விலை உயர்வால், தற்போது அதிகளவு வெங்காயத்தைப் பயன்படுத்த முடியாமல் பலர் தவிப்பார்கள். இந்நேரத்தில் கிரேவின் சுவை குறையாமல் இருக்க, வெங்காயத்துடன் வழக்கமாக சேர்க்கும் தக்காளியை விட இரண்டு மடங்கு அதிகமாக தக்காளியை சேர்த்தால், கிரேவி நன்கு அதிகமாகவும், சுவையுடனும் கிடைக்கும்.

தயிர்

கிரேவி மற்றும் குழம்பைத் தயாரிக்கும் போது அத்துடன் சிறிது தயிரை சேர்த்துக் கொண்டால், அதன் சுவை அற்புதமாகவும், குழம்பு சற்று கெட்டியாகவும் இருக்கும்.



திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore