ஆருத்ரா தரிசனம் திருவாதிரைக் கூட்டு

Updated On

Thiruvathirai kali kuzhambu| திருவாதிரை கூட்டு

Thiruvathirai kootu

மார்கழி மாதம் திருவாதிரை நாளில் செய்யப்படும் கூட்டு மற்றும் களி மிகவும் பிரபலமான ஒன்றாகும். திருவாதிரை விரதம் இருக்கும் அனைவரது வீட்டிலும் கூட்டு மற்றும் களி கண்டிப்பாக இருக்கும்.

திருவாதிரை கூட்டு செய்வது எப்படி?

தேவையான பொருள்கள்:

  1. பீர்கங்காய், வாழை, பூசணி, பரங்கி, அவரை, கத்தரிக்காய், கொத்தவரங்காய், பீன்ஸ், உருளை, கேரட், சேனைக் கிழங்கு, கருணைக் கிழங்கு,  ஊற வைத்த பாசி பயிர், தட்டப்பயிர், சுண்டல், பட்டாணி (இது போன்று 18 வகை காய்கறிகள் சேர்க்கலாம்)
  2. துவரம் பருப்பு – 1/2 கப்
  3. புளி – எலுமிச்சை அளவு
  4. மஞ்சள்தூள் – 1 டீஸ்பூன்
  5. எண்ணெய் தேவையான அளவு
  6. உப்பு தேவையான அளவு
  7. கருவேப்பிலை
  8. கொத்தமல்லி இலை

மசாலா அரைக்க தேவையானவை:

தனியா – 4 டேபிள்ஸ்பூன்மி

ளகாய் வற்றல் – 10

கடலைப் பருப்பு – 2 டேபிள்ஸ்பூன்
பெருங்காயம்
தேங்காய் – 1 மூடி

செய்முறை:

  • காய்கறிகளை சாம்பாரில் சேர்க்கும் அளவிற்கு பெரிய துண்டுகளாக நறுக்கி எடுக்கவும்.
  • துவரம்பருப்பை குக்கரில் வேகவைத்துக் கொள்ளவும்.
  • மிளகாய் வற்றல், கடலைப் பருப்பு, தனியா, பெருங்காயத்தை சிறிது எண்ணையில் வறுத்து, தேங்காயுடன் சேர்த்து கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
  • காய்கறிகளை உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து சிறிதளவு நீரில் வேகவைக்க வேண்டும். காய்கறிகள் வெந்ததும், புளி கரைசல் சேர்த்துக் கொதிக்க விட வேண்டும்.
  • அரைத்து வைத்துள்ள மசாலாவையும் சேர்க்கவும்.
    கடைசியாக வேகவைத்துள்ள துவரம்பருப்பையும் சேர்த்து கிளறவும்.
  • எண்ணையில் கடுகு, கருவேப்பிலை தாளித்து, அதில் சேர்க்கவும். கடைசியாக கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்.

குறிப்பு: காய்கறிகளின் எண்ணிக்கை ஒற்றை படியில் இருக்க வேண்டும்.



திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore