ஆருத்ரா தரிசனம் 2023 எப்போது?
ஒவ்வொரு மாதமும் வரும் திருவாதிரை நட்சத்திரத்தன்று சிவபூஜை சிறப்பாக இருக்கும். அதிலும் குறிப்பாக, மார்கழி மாதம் வரும் திருவாதிரை நட்சத்திரத்திற்கு தனிச்சிறப்பு உண்டு. அன்று சிவபெருமானுக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் அலங்காரங்கள் நடக்கும். அன்று பெண்கள் விரதம் இருந்து சிவனை வழிபடுவர்.
2022-ஆம் ஆண்டு ஆருத்ரா தரிசனம் இல்லை. 2023-ம் ஆண்டு ஜனவரி 5-ல் தான் திருவாதிரை நட்சத்திரம் வருகிறது.
Thiruvathirai 2023 Date | திருவாதிரை 2023 தேதி
ஆருத்ரா தரிசனம் வெள்ளிக்கிழமை ஜனவரி-7, 2023 (மார்கழி 22)
ஆருத்ரா தரிசன நேரம்:
திருவாதிரை நட்சத்திரம் ஆரம்பம் – ஜனவரி-5, 2023 (மார்கழி 20) அன்று இரவு 9:26
திருவாதிரை நட்சத்திரம் முடிவு – ஜனவரி-7, 2023 (மார்கழி 22) அன்று இரவு 11:28 PM
மேலும் அறிய: திருவாதிரை களி செய்வது எப்படி?
திருவாதிரை நோன்பு
ஆடி முதல் மார்கழி வரை தேவர்களின் இரவு பொழுதாகக் கருதப்படுகிறது. கடைசி பகுதியான மார்கழி மாதம் தனுர் மாதம் என போற்றப்படுகிறது. இது தேவர்களின் பிரம்மமுகூர்த்த காலமாகும். மார்கழி மாத திருவாதிரை நட்சத்திர தினத்தன்று தேவர்கள் இறைவனுக்கு திருவாதிரை நட்சத்திர நாளில் பூஜை செய்வதாக ஐதீகம். அப்போது சிவன் கோயில்களில் நடராஜப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன.
தமிழ் மொழியில் திருவாதிரை என்று கூறப்படும் நட்சத்திரத்திற்கு வடமொழியில் ஆருத்ரா என்று பெயர். இதுவே ஆருத்ரா எனப்படுகிறது. அந்தவகையில், மார்கழி மாத திருவாதிரை நட்சத்திர நாளில், எல்லா சிவாலயங்களிலும் ஆருத்ரா தரிசனம் சிறப்பாக நடைபெறும்.
மேலும் அறிய: திருவாதிரை விரதம் இருக்கும் முறை