திருவாதிரை விரதம் 2023 | Thiruvaathirai viratham 2023

Updated On

திருவாதிரை விரதம் இருக்கும் முறை

திருவாதிரை நோன்பு 2023

மார்கழி மாதம் என்றாலே இறைவனுக்கு உகந்த மாதமாகும். அதிலும் மார்கழி மாதத்தில் வரும் திருவாதிரை நட்சத்திரம் சிவபெருமானுக்கு உகந்த சிறப்பு மிகுந்த நாளாகும்.

அந்த திருவாதிரை நட்சத்திரத்தன்று (Thiruvathirai star in tamil) திருமணமான பெண்கள் மாங்கல்ய நேன்பு இருப்பர். அன்று திருவாதிரை விரதம் இருந்தால் தீர்க்க சுமங்கலி வரம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

மார்கழி மாதத்தில் திருவாதிரை நட்சத்திர (Thiruvathirai natchathiram 2023) நாளில் தில்லை சிதம்பரத்தில் கோவில் கொண்டருளிய நடராஜப் பெருமானை தரிசிக்க தேவர்கள் ஒன்றுகூடுவதாக வரலாற்று நூல்கள் கூறுகின்றது. அன்றைய தினமே ஆருத்ரா தரிசனம் என்று அழைக்கப்படுகிறது.

திருவாதிரை தரிசனத்தை, ஆருத்ரா தரிசனம் என்றும் கூறுவார்கள். திருவாதிரை விரதம் இருப்பவர்கள் உபவாசம் இருந்து கோவிலுக்கு சென்று இறைவனை வழிபட வேண்டும். அன்று வீட்டில் முறைப்படி இறைவனை வழிபட்டு நைவேத்தியமாக களி படைக்க வேண்டும். முழு நிலவு இருக்கும் வேளையில், சிவபெருமானை வழிபட்டால் சிவ பார்வதியின் அருள் கிடைத்து, தம்பதியர்கள் ஒற்றுமையுடன் வாழ்ந்து தீர்காயுள் பெறுவார்கள்.

திருவாதிரை நட்சத்திர பலன் | Importance of Thiruvathira

கன்னிப்பெண்கள் தனக்கு பிடித்தமான வரன் கிடைக்க வேண்டியும், திருமணமான பெண்கள் கரம் பிடித்த கணவன் நீண்ட ஆயுள் பெற வேண்டியும் இந்த பூஜையை செய்ய வேண்டும். அன்றைய நாள் முழுவதும் விரதமிருந்து, பதினெட்டு வகையான காய்கறிகளை சமைத்து படையல் போட வேண்டும்.

பூஜையில் குலதெய்வமும், சிவபெருமானும், முழு முதற்கடவுளான விநாயகரும் இடம் பெற்றிருப்பது அவசியமாகும். முதலில் மஞ்சளில் பிள்ளையார் பிடித்து விபூதி, சந்தனம், குங்குமம் இட்டு அருகம்புல் சாற்றி தயார் செய்து கொள்ளுங்கள். விநாயகரை வணங்கிய பின் தான் எந்த ஒரு பூஜையும் ஆரம்பிக்க வேண்டும்.

திருவாதிரை விரதம் இருப்பது எப்படி

பூஜையில் மஞ்சள் தாலி சரடை வைத்து வழிபடுவார்கள். புதிதாக திருமணமான பெண்களை தாய் வீட்டிற்கு அழைத்து, உறவினர்களையும் அழைத்து திருவாதிரை விரதம் இருந்து பூஜை செய்து தாலி சரடு மாற்றுவார்கள். நோன்பிருக்கும் பெண்கள் திருவாதிரை அன்று அதிகாலை 5 மணிக்கு பட்டினி சோறு உண்டு ஆரம்பிப்பார். பகல் முடிந்து இரவு வந்ததும் பூஜைகள் ஆரம்பமாகும்.
திருவாதிரைக்கு பிரசித்தி பெற்ற களி, 18 வகை காய்கறி கூட்டு மற்றும் பச்சரிசி அடை அனைத்தும் நெய்வேத்தியமாக வைத்து படைத்து. பின்னர் சந்திரனை வழிபட்டு விரதம் முடிப்பர்.

பின்னர் பூஜையில் வைக்கப்பட்ட மஞ்சள் தாலியை கணவன் கையால் கட்டிக்கொள்ள வேண்டும். பிறகு குடும்பத்துடன் அமர்ந்து படையலை சாப்பிட்டு விரதத்தை முடிக்க வேண்டும்.

கணவன் சாப்பிட்ட இலையில் மனைவி சாப்பிடுவது உத்தமம். இதனால் இவர்களுக்குள் அன்னோன்யம் பெருகி ஒற்றுமை நிலைக்கும் என்பதாகும்.



திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore