மகா சிவராத்திரி விரத முறை மற்றும் நன்மைகள்

Updated On

மகா சிவராத்திரி விரதம் | Maha Shivaratri Viratham Murai

மாதம் மாதம் ஒரு சிவராத்திரி வந்தாலும் மாசி மாதம் வரும் மகா சிவராத்திரி என்பது எல்லா சிவராத்திரிகளிலும் சிறப்பானது. திருவண்ணாமலையில் தான் மகா சிவா ராத்திரி தோன்றியது.

மாசி மாதம் வரும் தேய்பிறை சதுர்த்தசி நாளையே மகா சிவராத்திரியாகப் போற்றிக் கொண்டாடுகிறோம். இந்நாளின் மூன்றாம் காலத்தில் ஈசனை வழிபட்டால் எத்தகையப் பாவங்கள் செய்திருந்தாலும் அது நம்மை விட்டுவிலகிப் போகும் என்பது ஐதீகம்.

மகா சிவராத்திரி 2023 தேதி

ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் வரும் தேய்பிறை சதுர்த்தி தினத்தில் மகா சிவராத்திரி விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு 2023 பிப்ரவரி  18-ம் தேதி சனிக் கிழமை அன்று நாள் முழுவதும் விரதமிருந்து, அன்று இரவு தூங்காமல் சிவபெருமானை வழிபடலாம்.

மகா சிவராத்திரி 2023 தமிழ் தேதி

இந்த ஆண்டு தமிழ் பிலவ வருடம் மாசி மாதம் 6-ம் நாள் சனிக் கிழமை ஸ்ரீ மகா சிவராத்திரி கொண்டாடப்படுகிறது.

சிவராத்திரி நாளில் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்பது குறித்து பார்க்கலாம்.

சிவராத்திரி விரதம் இருப்பது எப்படி?

 • முதல் நாளன்று ஒரு வேளை உணவு உண்டு, சுகபோகங்களை தவிர்த்து, மனதார சிவனை நினைத்து வழிபடவேண்டும்.
 • சிவராத்திரியன்று அதிகாலையில் எழுந்து நீராடி, சூரியன் உதயத்தின் போது காலையில் செய்ய வேண்டிய பூஜைகளை செய்து முடிக்க வேண்டும். அதன் பின்னர் சிவாலயங்களுக்குச் சென்று தரிசனம் செய்யலாம்.
 • ஆலய தரிசனம் முடிந்து வீட்டுக்கு வந்தவுடன், அங்கு சிவராத்திரி பூஜைக்கு உரிய இடத்தைச் சுத்தம் செய்து, மாலை, தோரணங்கள் ஆகியவற்றால் அலங்காரம் செய்ய வேண்டும்.
 • பகலில் நீராடி, உச்சி கால பூஜைகளை முடித்துவிடவேண்டும்.
 • அதன் பின், ஆலயத்திற்கு சென்று அங்கு நடைபெற வேண்டிய சிவராத்திரி பூஜைக்காக, மலர்கள், பழங்கள், இளநீர் முதலானவற்றில் இயன்றவற்றை தந்து வீடு திரும்பவேண்டும்.
 • வீடு திரும்பியதும் மறுபடியும் நீராடி, மாலை நேர பூஜைகளை முடித்துவிட்டு, ஏற்கெனவே தூய்மை செய்து அலங்கரிக்கப்பட்ட இடத்தில் ஓர் உயர்ந்த பீடத்தில் சிவலிங்கத்தை வைத்து நான்கு ஜாமங்களிலும் பூஜை செய்யலாம்.
 • நான்கு கால சிவபூஜையில் அந்தெந்த பூஜைக்கேற்றவாறு வஸ்திரம், மலர்கள், மாலை, நைவேத்தியங்களை லிங்கத்திற்கு படைத்து பூஜை செய்ய வேண்டும்.
 • சிவபூஜை செய்ய இயலாதவர்கள் சிவாலயங்களில் நடைபெறும் நான்கு கால பூஜைகளில் கலந்துகொண்டும் சிவனருள் பெறலாம்.
 • அன்று இரவு முழுவதும் ‘சிவபுராண’ உபன்யாசம், ஒரு சில கோயில்களில் நடைபெறுகிறது. அதைக் கேட்கலாம்.
 • அல்லது வீட்டிலேயே தேவாரம், திருவாசகம், சிவபுராணம், சிவ ஸ்தோத்திரங்கள் முதலானவற்றைப் படிப்பதோ அல்லது யாரையாவது படிக்கச் சொல்லி, கேட்கலாம்.

நான்கு கால பூஜைகள் என்றால் என்ன?

செய்யக்கூடாதவை!

 • பகலில் தூங்கக் கூடாது. சிவராத்திரி அன்று கண் விழிக்க வேண்டும் என்பதற்காக, கைபேசிகளில் விளையாடுவதோ, திரைப்படங்கள் பார்ப்பதோ தவறு.
 • சிவராத்திரி உபவாசம் என்பது நியதி. உபவாசம் என்ற சொல்லுக்கு சமீபமாக இருத்தல் என்பது பொருள். ஆகவே உடலாலும் மனதாலும் சிவ சிந்தனையிடன் இருக்க வேண்டுமே தவிர, தொலைக்காட்சியில் பக்தி படம், பாடல்கள் போன்ற ஆன்மிக நிகழ்ச்சிகள் என்றாலும் அதனையும் பார்த்தல் கூடாது.
 • மகா சிவராத்திரியன்று விரதம் இருப்பவர்களுக்கு நற்கதி கிடைப்பதுடன், சொர்க்கலோக பாக்கியமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
 • முழுமையாக விரதம் கடைப்பிடித்தால் தீராத நோய்களும் தீரும். சகல தோஷங்களும் நிவர்த்தியாகும்.
 • ஒருவர் தொடர்ந்து 24 வருடங்கள் சிவராத்திரி விரதம் இருந்துவந்தால் அவர் சிவகதியை அடைவதுடன், அவரது 21 தலைமுறைகளும் நற்கதி அடைந்து முக்தியை அடைவார்கள் என்பது ஐதீகம்.


திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore