கூகை கிழங்கு நன்மைகள் | Arrowroot Tamil Benefits

Updated On

கூகை கிழங்கு பயன்கள் | Arrowroot Tamil Uses

கூகை கிழங்கு என்பது மரவள்ளிக்கிழங்கு, இனிப்பு உருளைக்கிழங்கு மற்றும் சாமை போன்ற ஒரு மாவுச்சத்து நிறைந்த ஒரு வேர் காய்கறி ஆகும். இது ஒரு வெப்பமண்டல தாவரமாகும். பல நூற்றாண்டுகளாக இந்த கிழங்கு சமையல் மற்றும் பாரம்பரிய மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டுவருகிறது.

கூம்பு கிழங்கில்  உள்ள சக்திவாய்ந்த ஆயுர்வேதம் மற்றும் மருத்துவ குணங்கள், நச்சு மற்றும் தொற்றுநோய் கிருமிகளை அளிக்கும் திறன் கொண்டது. இதில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இதில் உள்ள ஆரோக்கிய நன்மைகள் மற்றும் மருத்துவ குணங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

Arrowroot in tamil name – கூகை கிழங்கு, கூவைக் கிழங்கு, அரரூட் கிழங்கு, ஆரொட்டி கிழங்கு, அல்லது கூவமா கிழங்கு.

கூகை கிழங்கில் உள்ள ஊட்டச்சத்துக்கள்

மற்ற கிழங்கு வகையில் உள்ள புரதத்தை விட இதில் அதிகம் உள்ளது. இது உடல் ஆரோக்கியம் மற்றும் உடல் வளர்ச்சியை சீராக்குகிறது.

 • கார்போஹைட்ரேட்
 • புரதம்
 • நார்ச்சத்து
 • இரும்புச்சத்து
 • வைட்டமின் சி
 • பாஸ்பரஸ்
 • பொட்டாசியம்

கூகை கிழங்கு மருத்துவ குணங்கள் | Arrowroot Health Benefits in Tamil

குளுட்டன் இல்லாதது

அரோரூட் இயற்கையாகவே குளுட்டன் இல்லாதது, இது குளுட்டன் அழற்சி உள்ளவர்களுக்கு மற்றும் குளுட்டன் இல்லாத உணவைப் பின்பற்றுபவர்களுக்கு ஒரு சிறந்த மாற்றாக இருக்கும். உதாரணமாக கோதுமை மாவில் குளுட்டன் உள்ளது, இதற்க்கு பதிலாக கூகை கிழங்கு மாவை பயன்படுத்தலாம்.

செரிமான ஆரோக்கியம்

கூகை கிழங்கு(arrowroot in tamil) ஒரு சக்திவாய்ந்த செரிமான தூண்டுதலை உண்டாக்கும் மற்றும் குடல் இயக்கத்தை சீராக்கும். வயிற்றுப்போக்கு, சீதபேதி மற்றும் பிற இரைப்பை குடல் பிரச்சினைகளின் அறிகுறிகளை சரி செய்கிறது. பழங்காலத்தில் இருந்தே பாட்டி வைத்தியத்தில் செரிமான பிரட்சனையை சரிசெய்ய இந்த கிழங்கு பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

சிறுநீரக ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது

கூகை கிழங்கில் உள்ள பொட்டாசியம் சிறுநீரகத்திலிருந்து கழிவுகள் மற்றும் நச்சுகளை அகற்ற உதவுகிறது. இரத்த அழுத்தத்தை சீராக்க மற்றும் சிறுநீரக செயல்பாட்டை சீராக்குகிறது. இவை தவிர, கூகை கிழங்கு பொடியில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் சிறுநீர்ப்பை மற்றும் சிறுநீர் பாதை நோய்த்தொற்று கிருமிகளை அழிக்கிறது.

உடல் சூடு குறையும்

இந்த கிழங்கு உடல் சூட்டை குறைத்து, குளிர்ச்சியாக்கும். அதுமட்டுமல்லாது காய்ச்சல், இருமல், அஜீரணம், வயிற்றுப்போக்கு மற்றும் நீர் வேட்க்கை ஆகியவற்றை சரிசெய்யும்.

குறைந்த கலோரிகள்

கூகை கிழங்கில் கலோரிகள் குறைந்த அளவே உள்ளது, குறைந்த அளவு கலோரி உணவுகளை சாப்பிட நினைப்பவர்கள் இந்த கிழங்கை பயன்படுத்தலாம்.

தோல் பராமரிப்பு | Arrowroot benefits in tamil for skin

அரோரூட் பவுடர் பெரும்பாலும் இயற்கை தோல் பராமரிப்பு தயாரிப்புகளில் பயன்படுத்தப்படுகிறது. இது ஒரு மென்மையான, பட்டு போன்ற அமைப்பைக் கொண்டுள்ளது மற்றும் டால்கம் பவுடருக்கு இயற்கையான மாற்றாக பயன்படுத்தப்படுகிறது. இது அதிகப்படியான ஈரப்பதத்தை உறிஞ்ச உதவுகிறது மற்றும் அழற்சி சருமத்தை சரிசெய்யும்.

உடல் பலம் பெற

கூகை கிழங்கில் உள்ள கார்போஹைட்ரேட்டுகள் உடலுக்கு உடனடி ஆற்றலை வழங்குகிறது. நோய் குணமாகி உடல் பலவீனமாக இருப்பவர்கள் இதை கஞ்சியாக செய்து சாப்பிட்டால் உடல் பலமாக இருக்கும்.

எடை இழப்பை ஆதரிக்கிறது | Arrowroot weight loss

மற்ற மாவுச்சத்து உள்ள காய்கறிகள் உடல் எடையை அதிகரிக்கும். ஆனால் கூகை கிழங்கு மாவில் குறைந்த கலோரிகளே உள்ளது. இது உங்கள் பசியை சீராக்க உதவுகிறது மற்றும் எடை இழப்புக்கு வழிவகுக்கும். இது புரதத்தின் ஒரு நல்ல மூலமாகும், இது முழுமையின் உணர்வுகளுக்கு உதவுகிறது, தேவையற்ற பசியைக் கட்டுப்படுத்துகிறது மற்றும் கலோரி உட்கொள்ளலைக் குறைக்கிறது.

கூகை கிழங்கு மாவு நன்மைகள் | Arrowroot Powder Benefits in Tamil

Arrowroot Powder in Tamil

கூகை கிழங்கை சிறு துண்டுகளாக நறுக்கி அரைத்து மாவாக அரைத்து, அரைத்த மாவை துணியில் கட்டி அதை தண்ணீரில் மூழ்க வைத்து, பின்னர் துணியில் இருக்கும் மாவு கரையும் வரை நன்றாக அலசிவிட வேண்டும். அதற்க்கு பிறகு தண்ணீரில் தேங்கி இருக்கும் மாவை மட்டும் பிரித்து எடுத்து, அதை காயவைத்து சளித்து எடுத்தால் கூகை கிழங்கு மாவு தயாராகிவிடும்.

Arrowroot Powder for Babies in Tamil

கூகை கிழங்கு மாவு குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இதில் எளிதில் செரிக்கக்கூடிய நுண்ணிய ஸ்டார்ட்ச் துகள்களும், ஊட்டச்சத்துக்களும் நிறைந்துள்ளது. இதை கஞ்சியாக செய்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம். இது சீத பேதி மற்றும் சிறுநீர் பிரச்சனை உள்ளவர்களுக்கு அருமருந்தாகும்.

கூகை கிழங்கு தீமைகள் | Arrowroot tamil side effects

அரோரூட் அல்லது கூகை கிழங்கை மிதமாக உட்க்கொள்வதே சரியானது. அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொண்டால் சில பக்க விளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

 • கூகை கிழங்கு, ஒவ்வாமை உள்ள ஒரு சிலருக்கு வயிற்றில் அசௌகரியத்தை ஏற்படுத்தலாம்.
 • கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் பெண்கள் மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகு சாப்பிடுவது நல்லது.
 • குழந்தைகளுக்கு கொடுக்கும் முன் குழந்தை நல மருத்துவரின் ஆலோசனையை பெறவும்.
 • வேறு ஏதேனும் உடல் உபாதைகள் இருப்பவர்கள் இதை சாப்பிடும் போது கவனமாக இருக்க வேண்டும்.

ஆரோரூட் பவுடரை உட்கொண்ட பிறகு ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்பட்டால் உங்கள் மருத்துவரை  .

Koova kizhangu in English – Arrowroot

Koova kizhangu in Tamil – கூகை கிழங்குதிருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore