வாழைப்பழம் வகைகள் பயன்கள் | Types of Banana and Its Benefits in Tamil

Updated On

வாழைப்பழத்தின் வகைகள் அதன் நன்மைகள் | Different types of Banana and their Benefits

வாழைப்பழம் ஒரு எளிய பழம், எளிதில் கிடைக்கக்கூடியது மற்றும் ஊட்டச்சத்து சக்தியாக உள்ளது. வாழைப்பழத்தில் பல நன்மைகள் உள்ளன, மேலும் இது உங்கள் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தில் அதிக பங்குவகிக்கிறது. ஆப்பிளை விட வாழைப்பழத்தின் ஆரோக்கிய நன்மைகள் அதிகம்.

வாழைப்பழம் சாப்பிடுவதன் மூலம்,  உடல் சீரான இதயத் துடிப்பு, குறைந்த இரத்த அழுத்தம் மற்றும் உடலில் சரியான நீர் சமநிலையை பராமரிக்க உதவுகிறது.

இரண்டு வாழைப்பழங்கள் 1-1/2 மணிநேர உடற்பயிற்சி அல்லது நடைபயிற்சிக்கு போதுமான கலோரிகளை வழங்குகின்றன. எனவே பழுத்த வாழைப்பழத்தை ஒரு நாளைக்கு இரண்டு முறை சாப்பிடுங்கள். எந்த வாழைப்பழம் நல்லது மற்றும் எதில் என்ன வகையான சத்துக்கள் உள்ளது என்று இந்த பதிவில் பார்ப்போம்.

வாழைப்பழம் வகைகள் பெயர்கள் | Types of Banana Names in Tamil

types of banana in tamil nadu

வாழைப்பழம் வகைகள் | Banana Types in Tamil

 • ரஸ்தாளி வாழைப்பழம்
 • மலை வாழைப்பழம்
 • நாட்டு வாழைப்பழம்
 • நவரை வாழை
 • பேயன் வாழை
 • சர்க்கரை வாழை
 • செவ்வாழை
 • பூவன் பழம்
 • பச்சை நாடன் அல்லது பச்சை வாழைப் பழம்
 • கற்பூரவள்ளி வாழைப்பழம்
 • கரு வாழை
 • அடுக்கு வாழை
 • மொந்தன் வாழை
 • நேந்திரன் வாழை
 • ஏலரிசி வாழைப்பழம்
 • இளக்கி வாழைப்பழம்
 • கதலி வாழைப்பழம்
 • மோரீஸ் வாழைப்பழம்

Types of Banana in Tamil

நாட்டு வாழைப்பழம் பயன்கள்

நாட்டு வாழைப்பழத்தில் பொட்டாசியம் அதிகம் உள்ளது, இது இதய ஆரோக்கியத்திற்கு நல்லது. பொட்டாசியம் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது மற்றும் இதய நோய் அபாயத்தை குறைக்கிறது.

கற்பூரவள்ளி வாழைப்பழம் பயன்கள் | Karpooravalli Banana Benefits In Tamil

கற்பூரவள்ளி வாழைப்பழம் நன்மைகள் பல உள்ளது. இது கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு மிகவும் நல்லது. இதில் ஃபோலிக் அமிலம் உள்ளது, இது குழந்தையின் மூளை மற்றும் முதுகுத்தண்டு வளர்ச்சிக்கு அவசியம். இது மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலி மற்றும் பிடிப்புகள் போன்ற பிரச்சனைகளைத் தடுக்கவும் உதவுகிறது. கற்பூரவள்ளி வாழைப்பழம் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது.

மஞ்சள் வாழைப்பழம் பயன்கள்

நன்றாக பழுத்த வாழைப்பழம் உடலுக்கு முழுமையான பலனை தரும். வாழைப்பழத்தில் உள்ள பெரும்பாலான நார்ச்சத்துதான் கரையக்கூடிய நார்ச்சத்து என்று அழைக்கப்படுகிறது. இது உங்கள் கொலஸ்ட்ரால் மற்றும் இரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது

ரஸ்தாளி வாழைப்பழம் பயன்கள்

ரஸ்தாளி வாழைப்பழத்தில் கார்போஹைட்ரேட்டுகள் அதிகம் உள்ளன, இது உடலுக்கு சக்தி அளிக்கிறது. ரஸ்தாளி வாழைப்பழத்தில் நார்ச்சத்து அதிகம் உள்ளது, இது மலச்சிக்கலைத் தடுக்கிறது. ரஸ்தாளி வாழைப்பழம் மலத்தை மென்மையாக்குகிறது மற்றும் மலச்சிக்கலுக்கு சிகிச்சையளிக்க உதவுகிறது. இதில் உள்ள வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஏ உள்ளன, இது தோல் ஆரோக்கியத்திற்கு நல்லது.

Types of Banana in Tamil with Pictures

ரஸ்தாளி வாழைப்பழம் தீமைகள்

ரஸ்தாளி வாழைப்பழத்தில் உள்ள அதிகப்படியான நார்ச்சத்து சிலருக்கு வயிற்றுப்போக்கு அல்லது வாயு போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். ரஸ்தாளி வாழைப்பழத்தில் சர்க்கரை அதிகம் உள்ளது, இது உடல் எடைய அதிகரிப்பிற்கு வழிவகுக்கும்.

செவ்வாழை பயன்கள்

செவ்வாழை, வாழைப்பழ வகைகளில் சிறந்ததாகவும், பல வியாதிகளை குணப்படுத்தும் சக்தி வாய்ந்ததாகவும் உள்ளது. பல்லுக்கு தேவையான வைட்டமின் A உயிர்ச்சத்து செவ்வாழையில் உள்ளது. தொற்றுநோய் வராமல் தடுக்க மூன்று தினங்களுக்கு ஒரு முறையாவது செவ்வாழை சாப்பிடவேண்டும்.

கண் பார்வை  குறைபாடு உள்ளவர்கள் தினமும் அரை செவ்வாழை பழம் சாப்பிட்டு வந்தால் படிப்படியாக பார்வை தெளிவுபெறும். நரம்புத்தளர்ச்சியை குணமாக்கும் சக்தி இந்த பழத்திற்கு உண்டு.

ஏலரிசி வாழைப்பழம் பயன்கள்

ஏலரிசி வாழைப்பழம் பார்ப்பதற்க்கு சிறியதாக இருக்கும், ஆனால் அதன் சுவை மிகவும் இனிப்பாக இருக்கும்.

உங்கள் மாதவிடாய் வலியைக் குறைக்க மாத்திரைகளை எடுத்துக் கொள்ளாதீர்கள். அதற்கு பதிலாக வாழைப்பழங்களை முயற்சிக்கவும்.

பச்சை வாழைப்பழம் பயன்

பச்சை வாழைப்பழம், பச்சை நாடன் என்றும் அழைக்கப்படுகிறது. இது நல்ல வாசனையுடனும், இனிப்பு சுவையுடனும் இருக்கும். இந்த பழம் மற்ற வாழைப்பழத்தை விட சற்று நீண்டு, வளைந்திருக்கும். உடல் உஷ்ணம் உள்ளவர்கள் இதை சாப்பிடலாம். காய்ச்சல் இருப்பவர்கள் இதை சாப்பிட்டால் உடல் சூடு குறையும்.

Banana Types and Benefits in Tamil

நவரை வாழைப்பழம் பயன்கள்

நவரை வாழைப்பழம் மற்ற பழங்களை விட சற்று வித்தியாசமானது, இந்த பழத்தை சாப்பிட்டால் பசியை அடக்கிவிடும். உடலில் புண் மற்றும் தோல் சம்மந்தப்பட்ட பிரச்சனை உள்ளவர்கள் இந்த பழத்தை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

மலைவாழைப்பழம் நன்மைகள்

மலை வாழைப்பழத்தில் ஒரு தனிப்பட்ட வாசனையும், ருசியும் இருக்கும். உடலில் புதிய இரத்தம் உண்டாக தினமும் காலை மற்றும் இரவு சாப்பிட்டு பின் ஒரு மலை வாழை பழம் சாப்பிடவேண்டும். இந்த பழம் சாப்பிட்டால் மலச்சிக்கல் பிரட்சனை இருக்காது.

பூவன் வாழைப்பழம் பயன்கள்

பூவன் வாழைப்பழம் உடலுக்கு பலத்தை தரும் மற்றும் இரத்தவிருத்தி உண்டாகும். தினசரி இரவு சாப்பிட்ட பிறகு ஒரு பழம் சாப்பிட்டு வந்தால் நல்ல ஜீரண சக்தி உண்டாகும். மலச்சிக்கலை குணப்படுத்தும்.

பேயன் வாழைப்பழம் பயன்கள்

தடிமனான தோல் கொண்ட இனிப்புச்சுவை உள்ள பழம். அதிக சூடான உடம்பைப் பேயன்பழம் மூலம் சமன்படுத்தலாம். குழந்தைகளுக்கு ஏற்படும் உடல் உஷ்ணத்தை குறைக்க பேயன் வாழைப்பழம் பயன்தருகிறது. பேயன் வாழைப்பழம் வேறு பெயர் – பரமசிவன் பேய்கள் உலாவும் சுடுகாடுகளில் இருப்பதாக கருதப்பட்டதால் அவர் பேயன் எனப்பட்டார். ஆகவே இந்த ஒரு வகைப் பழம் பேயன் வாழைப்பழம் எனப்பட்டது.

ஏலக்கி வாழைப்பழம் வேறு பெயர்கள் – ஏலச்சி,தேன், கதளி ஆகியவை ஏலக்கி வேறுபெயர்களாகும்.திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore