கறிவேப்பிலை பயன்கள் | Karuveppilai Benefits In Tamil

Updated On

கறிவேப்பிலை மருத்துவ பயன்கள் | Health Benefits of Curry Leaves in Tamil

 

Benefits of Curry Leaves in Tamil | கறிவேப்பிலை நன்மைகள்

கறிவேப்பிலை உணவுக்கு நறுமணத்தை மட்டும் தருவதில்லை, நமது உடலுக்கு ஆரோக்கியத்தையும் தரக்கூடியது. இதை நமது உணவில் இருந்து எடுத்து எரியாமல், உணவோடு சேர்த்து சாப்பிட்டால் உடல் ஆரோக்கியம் பெறலாம். தமிழ் சித்த மருத்துவத்தில் கறிவேப்பிலையை மருந்தாக உபயோகிக்கின்றனர்.

கறிவேப்பிலை அறிவியல் பெயர் முர்ராயா கோயனிகி (Murraya koenigii).

கருவேப்பிலையில் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களான வைட்டமின், கால்சியம், இரும்பு, தாதுக்கள், பாஸ்பரஸ், நார்ச்சத்து மற்றும் கார்போஹைட்ரேட் போன்ற அனைத்து சத்துக்களும் நிறைந்துள்ளது.

கறிவேப்பிலை பயன்கள், நன்மைகள், பக்க விளைவுகள் மற்றும் கறிவேப்பிலை தீமைகள் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.

கறிவேப்பிலை பயன்கள் | Curry Leaves Benefits in Tamil

கொழுப்பை குறைக்க உதவுகிறது

Health Benefits Curry Leaves

கறிவேப்பிலை நமது உடலில் இரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பின் அளவை குறைக்க உதவும் பண்புகளை கொண்டுள்ளது. அதுமட்டுமல்லாது நல்ல கொழுப்புகளை அதிகரித்து இதய நோய் வரமால் பாதுகாக்கிறது.

முடி வளர்ச்சியை அதிகரிக்கும்

Curry Leaves Benefits for Hair in Tamil

கருவேப்பிலை முடி வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமான மூலிகையாகும். சேதமடைந்த கூந்தலுக்கு இது சிகிச்சை அளிக்கிறது மற்றும் முடி உதிர்வதை தடுக்கிறது. இளநரை வராமல் தடுக்கிறது. முடிக்கு வலுவூட்டுகிறது மற்றும் பொடுகுக்கு சிகிச்சை அளிக்கிறது.

செரிமானத்திற்கு உதவுகிறது

Curry Leaf Benefits for Health

பழங்காலத்தில் இருந்தே நமது முன்னோர்கள் செரிமானத்திற்காக கருவேப்பிலையை உணவில் சேர்த்துள்ளனர். இது வயிற்றில் தேவையற்ற கழிவுகள் சேராமல் தடுக்கிறது. மலச்சிக்கல் பிரச்சினையை தடுக்கிறது.

கண் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்

Curry Leaves Benefits for Eye

கருவேப்பிலையில் வைட்டமின் ஏ அதிகம் நிறைந்துள்ளது. இதனால் பார்வை குறைபாடு, மாலைக்கண் நோய் போன்ற கண் கோளாறுகள் ஏற்படாமல் தடுக்கிறது. இது நமது கண் விழித்திரையை ஆரோக்கியமாக வைத்து, பார்வை இழப்பிலிருந்து பாதுகாக்கிறது.

உடல் எடையை குறைக்கும்

karuveppilai uses in tamil

கறிவேப்பிலை உடல் எடையை குறைக்கும் மூலிகைகளில் ஒன்று. உடல் பருமன் உள்ளவர்கள் இதை காலை வெறும் வயிற்றில் சாப்பிடுவதன் மூலம் நல்ல பலனை பெறமுடியும்.

இரத்த சோகையை கட்டுக்குள் வைக்கிறது

கருவேப்பிலை benefits in tamil

இரும்பு சத்து குறைபாடு ரத்த சோகைக்கு முக்கியமான காரணமாகும். கறிவேப்பிலையில் இரும்புச்சத்து அதிகம் உள்ளதால் இரத்த சோகை பிரச்சனையை தடுக்கிறது.

பாக்டீரியாக்களை அழிக்கிறது

Health Benefits Curry Leaves

கறிவேப்பிலையில் அழற்சி எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளன. இதில் உள்ள ஆக்ஸிஜனேற்ற பண்புகள் நோய்த்தொற்றுகளை எதிர்த்துப் போராடுகின்றன மற்றும் நோய்த்தொற்று வராமல் உடலைப் பாதுகாக்கின்றது.

நீரிழிவு நோய்க்கு சிகிச்சையளிக்கும்

Curry Leaves Help Manage Blood Sugar Levels in Tamil

கருவேப்பிலை நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் திறன் கொண்டது. சர்க்கரை நோய் உள்ளவர்கள் காலை எழுந்ததும் வெறும் வயிற்றில் (benefits of eating curry leaves on empty stomach in tamil) கருவேப்பிலையை சாப்பிட்டு வந்தால் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு சீராகும்.

கறிவேப்பிலை தீமைகள்

கறிவேப்பிலை உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இதை குழந்தைகள் முதல் வயது முதிர்ந்தோர் வரை அனைவரும் சாப்பிடலாம். கறிவேப்பிலையை அளவாக சாப்பிட வேண்டும். அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சாகும்.
சிலருக்கு கீரை ஒவ்வாமை பிரச்சனை இருக்கும் அவர்கள் மட்டும் இதை தவிர்த்திடுங்கள் அல்லது மருத்துவரிடம் ஆலோசித்து பின்னர் சேர்த்துக்கொள்ளுங்கள்.திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore