சியா விதைகள் பயன்கள் | Chia Seeds Uses in Tamil
சியா விதைகள் அளவில் சிறியதாக இருக்கலாம், ஆனால் அதில் நம்பமுடியாத அளவிற்கு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இதில் நார்ச்சத்து, புரதம், ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் பல்வேறு நுண்ணூட்டச்சத்துக்களால் நிரம்பியுள்ளன.
Benefits and Uses of Chia Seeds | சியா விதை நன்மைகள் மற்றும் பயன்கள்
செரிமான ஆரோக்கியம்
சியா விதையில் போதுமான நார்ச்சத்து அதிகம் உள்ளது. இதனால் மலச்சிக்கல் பிரச்சனையை தடுக்கிறது மற்றும் செரிமான மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.
இரத்த சர்க்கரை அளவை குறைக்க உதவும்
சியா விதைகளை நமது உணவில் சேர்ப்பதன் மூலம் உடலில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்துக் கொள்ளலாம். சியா விதைகள் நார்ச்சத்து மற்றும் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்களின் சிறந்த மூலமாகும், மேலும் இந்த இரண்டு ஊட்டச்சத்துக்களும் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கவும் நீரிழிவு நோயில் இன்சுலின் உறிஞ்சுதலை மேம்படுத்தவும் உதவும். இதில் உள்ள நார்ச்சத்து அதிக நேரம் பசி தாங்க கூடியதாக இருக்கும், இது அதிகப்படியான உணவு எடுத்துக்கொள்வதை தடுக்கும்.
எஎலும்பு ஆரோக்கியம்
சியா விதைகளில் மெக்னீசியம் மற்றும் பாஸ்பரஸ் உள்ளிட்ட எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு முக்கியமான பல ஊட்டச்சத்துக்கள் உள்ளது. இது ஆரோக்கியமான எலும்பு, தசை மற்றும் நரம்பு செயல்பாட்டிற்கு இன்றியமையாததாக இருக்கும். சியா விதைகளில் பால் பொருட்களை விட அதிக கால்சியம் உள்ளது.
இதய நோய் அபாயத்தை குறைக்கும்
சியா விதைகளில் நார்ச்சத்து மற்றும் ஒமேகா 3 கொழுப்புகள் அதிகம் இருப்பதால் இதை உட்கொள்வதன் மூலம் இதய நோய் அபாயத்தை குறைக்கும். இது உயர் ரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது.
மேலும் அறிய: கசகசாவின் அற்புத நன்மைகள்
உடல் எடை குறைக்க உதவும்
சியா விதைகளை முக்கியமாக உடல் எடையை குறைக்க பயன்படுத்துகின்றனர். உடல் பருமனை குறைக்க மற்ற உணவுகளை காட்டிலும் சியா விதைகள் மிகவும் உதவிகரமாக இருக்கும். சியா விதைகளை 21 வாரங்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நல்ல பலனை பார்க்க முடியும்.
எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது
உடலில் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்கள், இந்த சியா விதியை உட்கொள்ளுவதன் மூலம் சரி செய்ய முடியும். இதில் எண்ணற்ற ஆன்ட்டி ஆக்சிடென்ட் உள்ளது. இது நமது உடலில் உள்ள செல்களுக்கு புத்துணர்ச்சி அளிப்பதோடு மட்டுமல்லாமல், நோய்க்கிருமிகளை எதிர்த்து போராட உதவும்.
மேலும் அறிய: கேரட்டின் மருத்துவ நன்மைகள்
சியா விதை தீமைகள் | Chia Seed Side Effects in Tamil
சியா விதையை ஒரே நேரத்தில் அதிகமாக சாப்பிட்டால் வயிற்றுப் பிரச்சனை உண்டாகும். அதே போல் சியா விதையை சாதாரணமாக தனியாக சாப்பிட்டால் விழுங்குவதற்கு சற்று கடினமாக இருக்கும் இதனால் மூச்சு திணறல் ஏற்படும் அபாயம் உண்டு.
உங்கள் உணவில் திடீரென்று அதிக நார்ச்சத்து நிறைந்த சியாவை சேர்த்தால் வாயு, வீக்கம் அல்லது தசை பிடிப்பு போன்ற அறிகுறிகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உண்டு.
சியா விதை யார் சாப்பிடக்கூடாது என்று கேட்டால் வயிற்றுப் பிரச்சனை உள்ளவர்கள் இதை சாப்பிடுவதர்க்கு முன்பு மருத்துவரை ஆலோசிக்க வேண்டும்.
மேலும் அறிய: கோவைக்காயின் அற்புத நன்மைகள்
சியா விதை சாப்பிடும் முறை | How to Eat Chia Seeds in Tamil
உங்கள் உணவில் சியா விதைகளை சேர்க்க பல வழிகள் உண்டு. அதில் சிலவற்றை இங்கு காண்போம்.
- எளிமையான வழி தண்ணீரில் சேர்த்து சாப்பிடுவது. இரண்டு ஸ்பூன் சியா விதைகளை ஒரு கப் தண்ணீரில் 20-30 நிமிடங்கள் ஊறவைத்து பின்னர் பருகவும்.
- ஒரு டம்ளர் தண்ணீரை மிதமாக சூடாக்கி, அதில் அரை எலுமிச்சை பழச்சாறு ஒரு ஸ்பூன் சியா விதைகள் சேர்த்து காலை வேளையில் பருகலாம்.
- எல்லாவித பழச்சாறுடனும் சேர்த்து சாப்பிடலாம்.
- சியா விதைகளை அரைத்து, சப்பாத்தி மாவுடன் சேர்த்து பிசைந்து சப்பாத்தியாக செய்து சாப்பிடலாம்.
- ஃப்ரூட் ஜாம் செய்யும் போது அதனுடன் சியா விதைகளையும் சேர்த்து சாப்பிடலாம்.
சியா விதைகளை தண்ணீரில் போட்டு ஊற வைத்தால் அதன் அளவில் இருந்து 10-12 மடங்கு பெரியதாக மாறும்.
மேலும் அறிய: ஓமத்தின் மருத்துவ குணங்கள்