சப்ஜா விதை நன்மைகள் | Benefits of Sabja or Basil Seeds in Tami
துளசி செடி வகை குடும்பத்தை சார்ந்த திருநீற்று பச்சிலை தாவரத்தின் விதை தான் சப்ஜா விதை. இது சியா விதைகளைப் போலவே தோற்றமளிக்கும் ஆனால் இதன் விதை அடர் கருப்பு நிறத்தில் இருக்கும். சப்ஜா விதையில் நமது உடலுக்கு தேவையான கொழுப்புகள், புரதங்கள், கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் நார்ச்சத்து அதிகம் நிறைந்துள்ளது. ஆனால் இதில் கலோரிகள் இல்லை. சப்ஜா விதையை பச்சையாக சாப்பிட முடியாது, இது மிகவும் கடினமானதாக இருக்கும்.
சப்ஜா விதை in english – “Basil Seeds”
சப்ஜா விதைகள் ஆயுர்வேதத்திலும், சீன மருத்துவத்திலும் அதிகம் பயன்படுத்தப்படுகின்றனர். இதில் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் உள்ளது.
ஆரோக்கிய நன்மைகள் | Health Benefits of Sabja Seeds in Tamil
Sabja Seeds Benefits and Side Effects in Tamil
உடல் எடையை குறைக்க உதவுகிறது
சப்ஜா விதை உடல் எடை குறைய பெரும் பங்குவகிக்கிறது.
சப்ஜா விதைகளில் புரதம் மற்றும் கரையக்கூடிய நார்ச்சத்து உள்ளது. இந்த இரண்டு சத்துக்களும் உங்கள் செரிமான அமைப்பில் நீண்ட நேரம் தங்கியிருக்கும். இது தேவையற்ற பசியைக் குறைக்க உதவுகின்றன. இது உங்களை நீண்ட நேரம் முழுதாக உணர வைக்கிறது. இதனால் அடிக்கடி சாப்பிட தோன்றும் பிரச்சனை இருக்காது.
இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துகிறது
சப்ஜா விதைகள் சிறந்த நீரிழிவு எதிர்ப்பு திறனை கொண்டுள்ளது. இதில் அதிக நார்ச்சத்து உள்ளது. சர்க்கரை நோயாளிகள் சாப்பாட்டிற்கு முன்பு சப்ஜா விதைகளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இரத்த குளுக்கோஸ் அளவு அதிகரிப்பதை தடுக்கலாம்.
இருமல் மற்றும் சளி குணமாக உதவுகிறது
துளசி விதைகள் உங்கள் உடல் ஆரோக்கியமாக இருக்க தேவையான கனிமங்களின் வளமான ஆதாரமாகும். உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உதவுகிறது. சளி, காய்ச்சல் மற்றும் இருமலில் இருந்து நிவாரணம் அளிக்கிறது.
உடல் சூட்டை குறைக்கும்
சப்ஜா விதைகள் கோடையில் ஒரு சிறந்த நீர் ஆதாரமாகும், ஏனெனில் அவை குளிர்ச்சியான விளைவைக் கொண்டுள்ளது. இந்த விதைகள் வயிற்று வெப்பத்தை தணிக்கும். இதை சாப்பிடுவதனால் உடல் குளிர்ச்சியாக இருக்கும்.
மலச்சிக்கல் பிரச்சனையை தடுக்கிறது
சப்ஜா விதைகளில் கரையக்கூடிய நார்ச்சத்து நிறைந்துள்ளது. இந்த விதைகளை நமது உணவில் நல்ல அளவு தண்ணீருடன் சேர்த்துக் கொள்ளும்போது, அது தண்ணீரை உறிஞ்சி, நமது குடலுக்கு தண்ணீரை இழுக்க உதவுகிறது. இது மலத்தை மென்மையாக்குகிறது மற்றும் தினசரி குடல் இயக்கத்தை ஊக்குவிக்கிறது. இதனால், மலச்சிக்கல் பிரச்சனை இருப்பவர்கள் சப்ஜாவை தங்கள் அன்றாட உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் மிகப்பெரிய நிவாரணம் பெற முடியும்.
சப்ஜா விதை அழகு குறிப்புகள்
Sabja விதைகளில் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்திருப்பதால், அவை நமது சருமத்திற்கு இயற்கையான பளபளப்பைக் கொடுக்கின்றன. சப்ஜா விதைகள் இயற்கையாகவே உடலின் நச்சுத்தன்மை நீக்குகிறது. இது முகப்பரு மற்றும் வெடிப்புகளை தவிர்த்து நமது சருமத்தை பொழிவடைய செய்யும்.
சப்ஜா விதைகளில் நுண்ணுயிர் எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் உள்ளன, அவை தோல் நோய்த்தொற்றுகளிலிருந்து நம்மைப் பாதுகாக்கின்றன. அவை அரிக்கும் தோலழற்சி மற்றும் தடிப்புத் தோல் அழற்சியின் சிகிச்சையிலும் பயன்படுத்தப்படுகின்றன.
மேலும் அறிய: 7 நாளில் உடல் எடை குறைய உணவு அட்டவணை
சப்ஜா விதைகளை எப்படி சாப்பிடுவது?
2 டீஸ்பூன் சப்ஜா விதைகளை ஒரு கப் வெதுவெதுப்பான நீரில் சுமார் 15 நிமிடங்கள் ஊற வைக்கவேண்டும். அது நன்றாக ஊறி முந்தைய அளவை விட சற்று பெரிதாக மாறும், ஒவ்வொரு விதையைச் சுற்றியும் சாம்பல் நிறத்தில் வழுவழுப்புடன் இருக்கும்.
ஊற வைத்த சப்ஜா விதைகளை எலுமிச்சைப் பழச்சாறு, மில்க் ஷேக்குகள், இளநீர், மோர், சூப்கள் போன்ற பலவகையான பானங்களில் சேர்த்து சாப்பிடலாம். மேலும் இதை ஐஸ்கிரீம்கள், பாஸ்தா மற்றும் சாலட்களிலும் சேர்க்கலாம்.
சப்ஜா விதை தீமைகள்
இந்த விதைகளை குறைந்த அளவில் உட்கொண்டால், அவை எந்த அச்சுறுத்தலையும் ஏற்படுத்தாது. ஆனால் இந்த விதைகளை அதிகமாக உட்கொள்வது சில பக்க விளைவுகளை ஏற்படுத்துகிறது. தினசரி பரிந்துரைக்கப்பட்ட அளவு ஒரு தேக்கரண்டிக்கு மேல் இருக்கக்கூடாது,
இந்த விதைகளின் பக்க விளைவுகளில் வயிற்றுப்போக்கு, வாந்தி, குமட்டல், முகப்பரு, ஆசிட் ரிஃப்ளக்ஸ், தலைவலி, வயிற்றில் அசௌகரியம், பசியின்மை போன்றவை அடங்கும். அவை சிலருக்கு இரத்தச் சர்க்கரைக் குறைவையும் ஏற்படுத்தும்.
சப்ஜா விதை யார் சாப்பிடக்கூடாது
கர்ப்பிணி பெண்கள் மற்றும் குழந்தைகள் சப்ஜா விதைகளை சாப்பிட கூடாது.
மேலும் அறிய: உடலுக்கு ஏற்ற 9 தானியங்கள்