விரைவில் மாதவிடாய் வர வைப்பது எப்படி? தாமதப்படுத்துவது எப்படி? Delay or Prepone Periods

Updated On

மாதவிடாய் பிரச்சனைகள் மற்றும் தீர்வு

ஒரு பெண்ணுக்கான மாதவிடாய் சுழற்சி 21 முதல் 35 நாட்கள் வரை கருதப்படுகிறது. இது பெண்களின் உடல் ஆரோக்கியம் மற்றும் காலநிலைக்கு ஏற்றது போல் நாட்கள் மாறுபடும்.

பெண்கள் தனது மாதவிடாயை சில நாட்களுக்கு முன்பாகவே வர நினைப்பதற்கு பல காரணங்கள் உண்டு. திருமணம், கோவிலுக்கு செல்லுதல், வெளியூர் செல்லுதல் மற்றும் சுற்றுலா செல்லுதல் போன்ற சில காரணங்களுக்காக தனது மாதவிடாயை முன்கூட்டியே முடித்துகொள்ள விரும்புகின்றனர்.

பூஜை என்று வரும் போது மாதவிடாய் பெண்கள் அதற்கு தடை செய்யப்பட்டவர்கள் என கருதுகிறார்கள். அதுபோல திருமணங்கள், இல்ல விழாக்கள், கோவில் திருவிழாக்கள் போன்றவற்றில் கலந்துகொள்வதற்காக, மாதவிடாயை சில நாட்கள் சீக்கிரமாகவோ அல்லது தாமதமாகவோ வரவைக்க பெண்கள் நினைப்பார்கள். அதனை இயற்கை உணவு முறை மூலமாக செய்யலாம்.
அந்தவகையில், உடலில் உஷ்ணத்தை உருவாக்கும் உணவை உட்கொண்டால் உங்கள் மாதவிடாய் சுழற்சியை விரைவில் வரவழைக்க காரணமாக இருக்கும்.

மாதவிடாய் சீக்கிரம் வருவதற்கு என்ன செய்வது (Natural Home Remedies to Prepone Your Periods)

விரைவில் மாதவிடாய் வரவழைக்க சாப்பிடவேண்டிய உணவுகள்:  (Which foods can help induce periods)

* பப்பாளி: இது உடலில் அதிக வெப்பம் உருவாக்கி மாதவிடாயை விரைவில் வரவழைக்க மிகவும் பயனுள்ள எளிய முறையாகும். அதுமட்டுமின்றி பப்பாளியில் அதிக அளவில் சத்துக்கள் உள்ளது இதனால் மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு ஆரோக்கியத்தை தரும்.

* ஓம விதைகள்: ஓம விதைகளை தண்ணீரில் ஊறவைத்து மூன்று நாட்களுக்கு ஒரு டம்ளர் குடிப்பது உங்கள் மாதவிடாயை சில நாட்கள் முன்னால் வரவழைக்க உதவும்.

* எள்: எள் விதையை வெல்லத்துடன் சேர்த்து, மாதவிடாய் தேதிக்கு 15 நாடகளுக்கு முன் சாப்பிட்டால் விரைவில் மாதவிடாய் வரவழைக்க உதவும்.

* அன்னாசி: இது உடலில் அதிக அளவு உஷ்ணத்தை தூண்டக் கூடிய ஒரு சிறந்த உணவுகளில் ஒன்றாகும். அது விரைவில் மாதவிடாய் வரவழைக்க உதவும்.

* சீரகம்

* இஞ்சி
* கொத்தமல்லி விதைகள்
* பெருஞ்சீரகம் விதைகள்
* மாதுளை
* வைட்டமின் சி உணவுகள்

மேற்கூறியதை தவிர மேலும் சில உணவுகளானது கேரட், வெல்லம், மஞ்சள், பேரிட்சை,பூசணிக்காய், பாதாம், திராட்சை, முட்டை ஆகியவற்றை உணவில் எடுத்துக்கொள்ளலாம்.

மாதவிடாய் தாமதமாக வரவழைக்க சாப்பிடவேண்டிய உணவுகள்: (Natural Remedies to Delay Your Periods few Days)

* வெந்தயம்: மாதாந்திர விலக்கு வர வாய்ப்புள்ள ஐந்து நாட்களுக்கு முன்னால் இருந்தே, சிறிது வெந்தயத்தை எடுத்து, வாயில் இட்டு தண்ணீர் பருகி வர, விலக்கு தள்ளிப் போகும்.

* வெள்ளரி: மாதாந்திர விலக்கு வர வாய்ப்புள்ள ஐந்து நாட்களுக்கு முன்னால் இருந்தே வெள்ளரிப் பிஞ்சுகளை உட் கொண்டு வரலாம், இதன் மூலம், உடல் சூடு குறைந்து, விலக்கு தள்ளிப் போகும்.

* பொட்டுக்கடலை: பொட்டுக் கடலையை, காலையில் எழுந்ததும், வெறும் வயிற்றில், நன்கு மென்று தின்று, தண்ணீர் பருகி வந்தால் மாதவிடாயை தள்ளிபோடலம்.

* எலுமிச்சை சாறு

எலுமிச்சை சாறு அதிக அமிலத்தன்மை கொண்டது. இதனால் உங்களது மாதவிடாய் தள்ளிப்போக இது உதவக்கூடும்.



திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore