கோலத்தின் முக்கியத்துவம் மற்றும் மருத்துவ நன்மைகள்
கோலங்களின் வரலாறு
கோலம் என்பதன் பொருள் அழகாக வரைதல் என்பதாகும். வீட்டு வாசலில் கோலமிடுவது வீட்டிற்கு லட்சுமி தெய்வத்தை வரவேற்பதாகும். இதனால் வீட்டில் செல்வா செழிப்பைக் கொடுக்கும் என்று கருதப்படுகிறது. தமிழ்நாட்டில் தினமும் பெண்கள் அதிகாலையில் எழுந்து சாணம் கலந்த தண்ணீரை வாசலில் தெளித்து, பின்னர் பச்சரிசி மாவில் கோலமிடுவர். இது தமிழக பெண்களுக்கு பெருமை சேர்க்கிறது. தமிழர்களின் பாரம்பரிய கலைகளில் பெண்கள் கோலம் போடும் கலையும் உள்ளது. கோலங்களை பார்க்கும் போது மகிழ்ச்சியும், உற்சாகமும் பிறக்கும். பச்சரிசி மாவில் கோலமிடுவதால் பல சிறிய உயிரினங்களுக்கு உணவாக பயன்படுகிறது. குறிப்பாக எறும்புகள் அதிக தூரம் செல்லாமல் கோலத்தில் உள்ள அரிசி மாவை உண்ணுகிறது.
கோலம் வகைகள் (types of kolam)
கம்பிக் கோலம்
புள்ளிக் கோலம்
வரையப்படும் தன்மையினைப் பொறுத்து கோலமானது கம்பிக் கோலங்கள், புள்ளிக் கோலங்கள் என இரு பிரிவுகளில் வரையப்படுகின்றன.
மாக்கோலம், பூக்கோலம், இழைக்கோலம், ரங்கோலிக் கோலம் என கோலமிடப் பயன்படுத்தப்படும் பொருட்களைக் கொண்டு பிரிக்கப்படுகின்றன.
மேலும் அறிய: New Pongal Rangoli Kolam -2022
கோலம் போடுவது எப்படி
(how to draw kolam easy)
- பசு சாணத்தாலோஅல்லது மஞ்சள் தண்ணீராலோ வாசல் தெளிக்க வேண்டும்.
- முதலில் தண்ணீர் தெளித்து பிறகுதான் பெருக்க வேண்டும்.
- பெருக்கும் போது குனிந்து பெருக்க வேண்டும்.
- முடிந்த வரை பச்சரிசி மாவில் கோலமிடவேண்டும்.
- குனிந்த நிலையில் தான் கோலமிடவேண்டும், உட்க்கார்ந்து கோலமிடக்கூடாது.
மேலும் அறிய: பொங்கல் வாழ்த்து கவிதைகள் -2022
கோலத்தின் ஆரோக்கிய நன்மைகள்:
(kolam Health benefits in tamil)
பெண்கள் உடலை வளைத்து கோலம் போடுவது பெண்களுக்கு மிகவும் ஆரோக்கியமான மற்றும் அவசியமான ஒன்றாகும். ஆண்களுடன் ஒப்பிடும் போது பெண்களுக்கு பொதுவாக முதுகு வலி எளிதில் வரும். ஏனென்றால், வீட்டில் உள்ள ஆண்களுடன் ஒப்பிடும் போது, பெண்களே அதிக வேலை செய்கிறார்கள். அதுமட்டுமல்லாது குழந்தை பெற்றெடுத்த பெண்களுக்கு அதிகமாக முதுகுவலி வருவதற்கு வாய்ப்பு உண்டு.
அதிகாலையில் திறந்த வெளியில் கோலமிடும் போது உடலுக்குத் தேவையான பிராண வாயு அதிகளவு கிடைக்கிறது. இதனால் உடலும் உள்ளமும் புத்துணர்ச்சி பெறுகின்றது.
பெண்கள் நல்ல உடல் பயிற்சிக்கு பழகிக் கொள்வது மிகவும் அவசியம். இதனால் தான் வீட்டின் முன் கோலம் போடுவது பெண்களின் முக்கியமான பயிற்சிகளில் ஒன்றாக கருதப்படுகிறது. பெண்கள் தங்கள் உடலை வளைத்து கோலம் போடும் போது, பெண்களின் முதுகு எலும்பு பிரச்சனைகள் நீங்கி, முதுகுத்தண்டு வலுவடைகிறது.
மற்ற தமிழ்நாட்டு கலாச்சாரத்துடன் ஒப்பிடும் போது கோலம் வடிவமைத்தல் சில மருத்துவ முக்கியத்துவத்தையும் கொண்டுள்ளது. தமிழ்நாட்டில் கடைபிடிக்கப்படும் பல சங்க கால பழக்கவழக்கங்களுக்கு சில மருத்துவ முக்கியத்துவம் உண்டு, மேலும் கோலம் வடிவமைத்தல் தமிழக மக்களுக்கு சிறந்த பொழுதுபோக்காக இருப்பதாக மக்கள் நினைக்கிறார்கள்.
கோலம் போடுவதற்கு முன் வீட்டின் முன் ஊற்றப்படும் தண்ணீரில் பசுவின் சாணத்தை கலந்து தெளிக்கின்றனர். இதனால் நுண் கிருமிகள் அழிந்து விடுகிறது. அதிகாலையில் கோலம் வடிவமைத்தால் இயற்கையின் புதிய காற்றை சுவாசிக்கும் வாய்ப்பு பெண்களுக்கு கிடைக்கும்.
மேலும் அறிய: பொங்கல் வாழ்த்துக்கள் படங்கள் 2022
எந்தெந்த நாள்களில் எந்தக் கோலமிடவேண்டும்:
(which day which kolam)
ஞாயிறு – சூரியக்கோலம், செந்தாமரைக் கோலம்
திங்கள் – அல்லிமலர்க் கோலம்
செவ்வாய் – வில்வ இலைக்கோலம்
புதன் – மாவிலைக் கோலம்
வியாழன் – துளசிமாடக் கோலம்
வெள்ளி மற்றும் பௌர்ணமி – தாமரைக் கோலம் (எட்டு இதழ்)
சனி – பவளமல்லிக் கோலம்.
கோலமிடுவதால் உண்டாகும் நன்மைகள்
- வீட்டில் மஹாலக்ஷ்மி கடாக்ஷம் உண்டாகும்.
- சாணமிடுவது கிருமிநாசினியாகச் செயல்படும்.
- அரிசிமாவினால் கோலமிடுவது சிறு உயிர்களுக்கு அன்னதானம் செய்த பலன் கிடைக்கும்.
- மார்கழி மாதங்களில் அதிகாலையில் எழுந்து கோலமிட்டு இறைவனை வணங்குவது, உடலுக்கு ஆரோக்கியத்தையும், உள்ளத்திற்கு எண்ணற்ற மகிழ்ச்சியையும் கொடுக்கும்.
- சுவரையொட்டி போடப்படும் பார்டர் கோலங்கள், தீய சக்திகளைத் தடுக்கும் வல்லமைகொண்டது.