மாவிலை தோரணம் கட்டுவதற்கான காரணம் என்ன தெரியுமா?

Updated On

சுப நாட்களில் நம் வீட்டு வாசலில் மாவிலை தோரணம் என்பது மிகவும் மிக்கியமான ஒன்றாக இருக்கும். அது ஆன்மிக ரீதியான ஒன்று என்று நாம் நினைத்திருப்போம் ஆனால் அதில் சில அறிவியல் சார்ந்த பயன்களும் உள்ளது என்பது பலரும் அறியாத ஒன்றாகும்.
பல விதமான மக்கள் கூடும் விசேஷங்களில் நெகடிவ் சக்திகளை களைந்து நல்ல ஆரோகியமான சூழல் ஏற்படுத்தும் சக்தி மாவிலைக்கு உள்ளது.
மக்கள் வெளியிடும் கரியமில வாயுவை தன்னுள் இழுத்து வைத்துக்கொள்ளும் சக்தி மாவிலைக்கு உண்டு. காய்ந்து உலர்ந்து விட்ட மாஇலைகளிலும் அதன்  சக்தி குறையாது.
மாவிலையில் மகாலட்சுமி வாசம் செய்வதாக ஐதீகம். அது கெட்ட சக்திகளை வீட்டுக்குள் விடாமல் விரட்டி நல்ல பலன்களைக் கொடுக்கும் என்று நம்பப்படுகிறது.
வீட்டு வாசல் தாண்டினாலே இரைச்சல், புழுதி, கிருமி தொற்று என, பலவகை பிரச்னைகள். வெளியில் போய்விட்டு வீட்டிற்குள் வரும்போது, நாம் மட்டும் வருவதில்லை. சில, பல கிருமிகளும், நம்முடனேயே அழையா விருந்தாளிகளாய் உள்ளே வர வாய்ப்புகள் அதிகம்.
மாவிலை ஒரு கிருமிநாசினி இதற்கு துர் தேவதைகளை வீட்டிற்குள் நுழைய விடாமல் தடுக்கும் சக்தியும் உண்டு. மேலும் மாவிலை அழுகுவது கிடையாது.  காய்ந்து உலரும். இதுபோல், வாழ்க்கையும் கெட்டுப்போகாமல் நீண்டகாலம் நடைபெறும் முற்றுபெற வேண்டும் என்ற நம்பிக்கையுடன், மங்கலம் பெருக  மாவிலை தோரணம் கட்டுகிறோம்.
நிறைய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் இருந்தாலும், ஓர் எளிய வழி, வீட்டு வெளி வாசலில், அடிக்கடி மாவிலைத் தோரணம் கட்டுங்கள்; விசேஷங்களுக்கு மட்டும்தான் கட்டணும் என்றில்லாமல், மாவிலைகள் கிடைக்கும் போதெல்லாம் வாசல் நிலைப் படியில் கட்டிவிடுங்கள்.
‘மாவிலை’ கரியமில வாயுவை எடுத்துக் கொண்டு, பிராண வாயுவைக் கொடுக்கும். நம் உடம்பின் வியர்வை நாற்றத்தையும், காற்றில் ஆவியாகிப்  பரவியிருக்கிற கிருமிகளையும், வாசலிலேயே தடுத்து அழித்து விடும்.


திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore