கருஞ்சீரகத்தின் அற்புத குணங்கள்

Updated On 18/09/2021

கருஞ்சீரகத்தின் ஆரோக்கிய நன்மைகள்

தெற்கு ஐரோப்பா, தென்மேற்கு மற்றும் மத்திய கிழக்கு ஆசியாவில் வளரும் நிஜெல்லா சாடிவா தாவரத்தின் விதைகளின் பொதுவான பெயர் தான் கருஞ்சீரகம். இது நிஜெல்லா, கருப்பு சீரகம், பெருஞ்சீரகம், கருப்பு கருவேப்பிலை மற்றும் ரோமன் கொத்தமல்லி என்றும் அழைக்கப்படுகிறது.

இதில் ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்திருக்கிறது. உலக மக்கள் அனைவரும் மருத்துவத்திற்காக இதை அதிகம் பயன்படுத்துகின்றனர்.

பாட்டி வைத்தியத்தில் காய்ச்சலுக்காக செய்யும் கசாயத்தில் கருஞ்சீரகம் முக்கியமான ஒன்றாகும். இதன் மணமும் சுவையும் மிகவும் தனித்துவமாக இருக்கும்.

கருஞ்சீரகம் பொதுவாக ஆஸ்துமா , நீரிழிவு நோய், உயர் இரத்த அழுத்தம் , எடை இழப்பு மற்றும் பல பிரச்சனைகளில் இருந்து பாதுகாக்கிறது.

இதில் இருக்கும் ஆரோக்கிய நன்மைகள் பற்றி பாப்போம்

முகப்பருவை எதிர்த்துப் போராடுகிறது

கருஞ்சீரக எண்ணெயுடன் சாத்துக்குடி சாரை சேர்த்து பயன்படுத்தினால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மற்றும் முகப்பருக்கள் மறைந்து விடும்.

நீரிழிவு நோயை சரிசெய்கிறது

தினமும் காலையில் பிளாக் டீயுடன் அரை ஸ்பூன் கருஞ்சீரக எண்ணெய் சேர்த்து குடித்தால் நீரிழிவு நோய் குறைவதை பார்க்க முடியும்.

மூட்டு வலியை எளிதாக்குகிறது

ஒரு கைப்பிடி கருஞ்சீரக விதைகளை எடுத்து , கடுகு எண்ணெயுடன் சேர்த்து நன்கு சூடாக்கவும். எண்ணெய் சூடானதும், அதை இறக்கி கை பொறுக்கும் அளவில் ஆறியதும், மூட்டு வழி உள்ள இடத்தில் தடவினால் நல்ல முன்னேற்றம் தெரியும்.

இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது

உயர் இரத்த அழுத்தம் உடையவர்கள் , அரை டீஸ்பூன் கருஞ்சீரக எண்ணெயை வெதுவெதுப்பான நீரில் சேர்த்து குடிக்கலாம்.

சிறுநீரகத்தைப் பாதுகாக்கிறது

சிறுநீரக கற்கள் பிரச்சனை என்பது ஒரு பெரிய பிரச்சனையாக உள்ளது. இதை தடுக்க இரண்டு தேக்கரண்டி தேன் மற்றும் வெதுவெதுப்பான நீரில் அரை டீஸ்பூன் கருஞ்சீரக எண்ணெயுடன் கலந்து சாப்பிட்டால் சிறுநீரக வலி, கற்கள் மற்றும் தொற்றுநோயிலிருந்து விடுபடலாம் என்று கூறப்படுகிறது.

பற்களை வலிமையாக்குகிறது

ஈறுகளில் வீக்கம் அல்லது இரத்தப்போக்கு மற்றும் பலவீனமான பற்கள் போன்ற பல் பிரச்சனைகளில் இருந்து கருஞ்சீரகம் பாதுகாக்கிறது.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது

கருஞ்சீரக எண்ணெய், தேன் மற்றும் வெதுவெதுப்பான நீர் ஆகியவற்றை ஒன்றாக கலந்து தினமும் பருகினால் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும்.

  • கருஞ்சீரகத்தை நமது உணவில் சேர்த்து கொள்வதன் மூலம் நியாபக சக்தி அதிகரிக்கும். அதுமட்டுமல்லாது தலைவலி, ஆஸ்துமா போன்ற பிரச்சனைகளில் இருந்தும் பாதுகாக்கிறது.
  • புற்றுநோயை எதிர்த்துப் போராடும் பண்பு கருஞ்சீரகத்திற்கு உண்டு.
    கருஞ்சீரகத்தை உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் பாக்ட்டீரியா சார்ந்த நோய்களில் இருந்து விடுபடலாம்.
  • இது கல்லீரலைப் பாதுகாக்க உதவுகிறது.
  • இரத்த சர்க்கரை அளவை ஒடுங்குபடுத்துகிறது.
  • வயிற்று புண் மற்றும் வாய் புண்களை சரி செய்ய உதவுகிறது.
  • தினமும் 1 கிராம் கருஞ்சீராத்தை உணவில் சேர்த்து கொண்டால் கொழுப்பை குறைக்க முடியும்.