கத்திரிக்காய் பயன்கள் | Brinjal benefits in Tamil

Updated On

கத்தரிக்காய் நன்மைகள் | Benefits of Brinjal in Tamil

கத்தரிக்காயில் தனித்துவமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. மேலும் இது நமது உடல் ஆரோக்கியத்திற்கு உதவியாக இருக்கும். இதில் நன்மை பயக்கும் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் கொழுப்பு அமிலங்கள் உள்ளது. இந்த ஊட்டச்சத்துக்கள் எலும்பு, மூளை மற்றும் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. கத்தரிக்காய் ஆயுர்வேத மருத்துவத்தில் பல நோய்களை குணப்படுத்த பயன்படுத்தப்படுகிறது. கத்தரிக்காயின் பயன்பாடுகளை (Brinjal healthy tips in tamil) இந்த பதிவில் பார்க்கலாம்.

Types of Brinjal/ Eggplant | கத்திரிக்காய் வகைகள்

கத்திரிக்காய் பல்வேறு வகைகளில் கிடைக்கிறது.  இது உலக அளவில் அதிகமாக உட்கொள்ளப்படும் காய்கறிகளில் ஒன்றாகும்.  இது ஆயுர்வேதம் மற்றும் பிற பாரம்பரிய மருத்துவத்தில் அதிகம் உபயோகப்படுத்தப்படுகிறது.

 1. நாட்டு கத்தரிக்காய்
 2. பவானி கத்தரிக்காய்
 3. எண்ணெய் கத்தரிக்காய்
 4. பான் உஜாலா கத்தரிக்காய்
 5. சில்லி கொடி கத்தரிக்காய்
 6. பருள் கத்தரிக்காய்
 7. உஜாலா கத்தரிக்காய்
 8. முள்ளு கத்தரிக்காய்
 9. சிம்ரன் கத்தரி
 10. பெங்களூர் கத்தரி

கத்திரிக்காய் மருத்துவ குணங்கள் | Brinjal Health Benefits in Tamil

 • கத்தரிக்காயில் நார்ச்சத்து அதிகமாகவும், கரையக்கூடிய கார்போஹைட்ரேட் குறைவாகவும் உள்ளது. இது ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது.
 • கத்தரிக்காயில் வைட்டமின்கள் தாதுக்கள் மற்றும் ஆக்சிஜனேற்றங்கள் நிறைந்துள்ளது. இவை தோலின் பளபளப்பை மேம்படுத்தும் மற்றும் இளமையை அதிகரிக்கும்.
 • கத்திரிக்காயில் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் அதிகம் உள்ளது, அதனால் நமது இதய ஆரோக்கியம் மேம்படும்.
 • கத்திரிக்காயில் உள்ள சேர்மங்கள் தோல் புற்றுநோய் வராமல் தடுக்கிறது.
 • இது நரம்புகளுக்கு வலுவூட்டும் மற்றும் சளி, இருமலைக் குறைக்கும்.
 • கத்தரிக்காயில் அதிக நீர்ச்சத்து மற்றும் கலோரிகள் குறைவாக உள்ளது. இது உடல் எடையை குறைக்க விரும்புவோருக்கு ஏற்றதாக இருக்கும்.
 • கத்தரிக்காய் சிறுவயதில் வரும் பார்வை குறைபாடுகளை தடுக்கும்.
 • எலும்பு தாது அடர்த்தியை மேம்படுத்தி எலும்பை பலப்படுத்தும்.
 • இரும்புச்சத்து குறைபாடினால் ஏற்படும் இரத்த சோகைக்கு கத்தரிக்காய் சிகிச்சை அளிக்கிறது.
 • சிவப்பு ரத்த அணுக்களின் உற்பத்தி மற்றும் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கிறது.
 • கத்தரிக்காய்யில் இரும்பு சத்து மற்றும் கால்சியம் உள்ளது. இது எலும்பு ஆரோக்கியேத்திற்க்கு உதவுகிறது.
 • கத்திரிக்காயில் போலிக் அமிலம் அதிகம் உள்ளது. இது குழந்தைகளின் பிறப்பு குறைபாடுகளை தடுக்க உதவுகிறது. அதனால் கர்ப்பிணி பெண்கள் கத்தரிக்காயை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
 • சிறுநீரக கற்கள் வராமல் தடுக்கிறது.

கத்தரிக்காய் தீமைகள் | Brinjal Side Effects

கத்தரிக்காய் சாப்பிட்டால் சிலருக்கு அலர்ஜி உண்டாகும். தோல் அலர்ஜி உள்ளவர்கள் கத்தரிக்காயை தவிர்க்க வேண்டும். சிலருக்கு குமட்டல் அல்லது வாந்தி போன்ற பிரச்சனைகள் வருவதற்கும் வாய்ப்பு உண்டு. இது போன்ற பிரச்சனைகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகவேண்டும்.

கர்ப்பிணி பெண்கள் முதல் நான்கு மாதங்களில் கத்தரிக்காயை அதிகம் சாப்பிடக்கூடாது. அவ்வாறு சாப்பிட்டால் கரு கலையும் அபாயம் உண்டு.திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore