கேரட் தினமும் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
கேரட் உலகில் உள்ள அனைத்து மக்களும் பயன்படுத்தும் மற்றும் முக்கியமான வேர் அல்லது கிழங்கு காய்கறிகளில் ஒன்றாகும். கேரட் ஆரஞ்சு வண்ணம் மட்டுமல்லாது ஊதா, வெள்ளை, மஞ்சள் மற்றும் சிவப்பு போன்ற பல்வேறு வண்ணங்களில் உள்ளது. பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரும் விரும்பும் விதமாக மிருதுவான அமைப்பு மற்றும் இனிப்பு சுவை கொண்டுள்ளது.
கேரட்டில் பீட்டா கரோட்டின், வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய கேரட்டின் ஆச்சரியமான ஆரோக்கிய நன்மைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்
கேரட்டில் வைட்டமின் சி மட்டுமல்லாது பல்வேறு ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளது. இது நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். கேரட்டை தினந்தோறும் சாப்பிடுவதால் நமது உடலை கிருமிகளிடம் இருந்து பாதுகாக்கலாம்.
பார்வை திறன்
கேரட் கண்களுக்கு நல்லது, பார்வை திறனை அதிகரிக்கும். ஏனெனில் அவற்றில் வைட்டமின் ஏ அதிகம் நிறைந்துள்ளது. இது கண் ஆரோக்கியத்தை மேம்படுத்துவது மட்டுமல்லாமல், மாலைக்கண் நோய், வயது தொடர்பான கண் தசைச் சிதைவு போன்ற பிரச்சனைகளை தடுக்க உதவுகிறது.
முடி வளர்ச்சி
கேரட்டின் மிகச்சிறந்த அழகு நன்மைகளில் ஒன்று அழகான முடி. கேரட் தலைமுடிக்கு முக்கியமான வைட்டமின்களை வழங்குகிறது, இது தலை முடியை வலுவாகவும், அடர்த்தியாகவும், பளபளப்பாகவும் ஆக்குகிறது.
சரும ஆரோக்கியம்
உணவு பொருட்கள் மூலம் சருமத்தை மேம்படுத்த விரும்புவோருக்கு, கேரட் ஒரு அற்புதமான உணவாகும். நாம் சருமத்தில் ஏற்படும் முகப்பரு, தோல் அழற்சி, சொறி மற்றும் பிற தோல் நோய்களை குணப்படுத்த கேரட் நல்ல உணவாகும். வறண்ட சருமம் மற்றும் சூரிய ஒளியில் இருந்து ஏற்படும் பிரச்சனையில் இருந்து பாதுகாக்கிறது. நமது முகத்தை மிகவும் பளபளப்பாக வைத்திருக்க உதவுகிறது.
எடை இழப்பு
நீங்கள் அதிக எடை பிரச்சினைகளுடன் போராடுகிறீர்களா? எடை இழப்புக்கு கேரட் அல்லது கேரட் ஜூஸ் சிறந்த பலனளிக்கும். ஏனென்றால், கேரட் சாப்பிடுவதால் நீண்ட நேரம் பசி தாங்கும். இது குறைந்த கலோரி உட்கொள்ளலுக்கு வழிவகுக்கிறது, இதனால் எடை இழக்க உதவும்.
பற்களுக்கு பாதுகாப்பு
பச்சைக் கேரட்டை சாப்பிடுவது உங்கள் பல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும், ஏனெனில் இது பற்களில் உள்ள பிளேக் மற்றும் உணவுத் துகள்களை அகற்றுவது மட்டுமல்லாமல், உமிழ்நீர் உற்பத்தியை அதிகரிக்கிறது. பற்களில் இருக்கும் பாக்ட்ரியாவிடம் இருந்து பாதுகாக்கிறது.
இரத்த அழுத்தம்
கேரட்டில் காணப்படும் கூமரின் உயர் இரத்த அழுத்தத்தைக் குறைப்பது மட்டுமல்லாமல் இதயத்தையும் பாதுகாக்கிறது. நமது இரத்த நாளங்கள் மற்றும் தமனிகளில் உள்ள பதற்றத்தைத் தணிக்கிறது, இதனால் இரத்த ஓட்டம் சீராகும் . மேலும், இது உடல் முழுவதும் உறுப்பு செயல்பாட்டை அதிகரிக்க உதவுகிறது மற்றும் இருதய அமைப்பின் அழுத்தத்தை குறைக்கிறது.
நச்சுகளை அகற்றுகிறது
கேரட்டில் உள்ள அதிக அளவு வைட்டமின் ஏ உடலில் இருந்து நச்சுகளை அகற்ற உதவுகிறது, மேலும் கல்லீரலில் கொழுப்பு மற்றும் பித்தநீர் சேர்வதைத் தடுக்கிறது, இதனால் அது ஆரோக்கியமாக இருக்கும். கேரட்டில் நீரில் கரையக்கூடிய நார்ச்சத்து இருப்பதால் கழிவுகளை அகற்றும் செயலும் அதிகமுள்ளது.