ஜவ்வரிசியின் ஆரோக்கிய நன்மைகள்

Updated On

ஜவ்வரிசி சாப்பிட்டால் கிடைக்கும் பலன்கள்

இந்தியாவில் அதிகம் விளையக்கூடிய மரவள்ளிக்கிழங்கு வேர்களில் இருந்து தான் ஜவ்வரிசி பிரித்தெடுக்கப்படுகிறது. இதில் கார்போஹைட்ரேட்டுகள், புரதங்கள், வைட்டமின் கே, கால்சியம் மற்றும் பொட்டாசியம் ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது.

இது சத்தானது, இலகுவானது மற்றும் எளிதில் ஜீரணிக்க கூடியது, இது குழந்தைகளுக்கு சிறந்த உணவாக அமைகிறது. அஜீரண பிரச்சனை உள்ளவர்கள் இதை சாப்பிட்டால் எளிதில் ஜீரணம் ஆகும்.

இந்தியாவின் பிராந்திய மொழிகளில் மரவள்ளிக்கிழங்கு முத்துக்களை வெவ்வேறு பெயர்களில் அழைக்கின்றனர். தமிழில் “ஜவ்வரிசி”, இந்தியில் “சபுதானா”, பெங்காலியில் “சாபு”, தெலுங்கில் “சக்குபியம்” மற்றும் மலையாளத்தில் “சவ்வரி” என பல வட்டாரப் பெயர்களால் அழைக்கப்படுகின்றன.

இவை பொதுவாக கிச்சடி, தாலிபீத், உப்மா, கீர் அல்லது பாயாசம் மற்றும் வடை போன்ற முக்கிய உணவு தயாரிப்பதில் பயன்படுத்தப்படுகின்றன. இது உடல் வெப்பத்தை குறைக்கும் இயற்கை உணவாகும்.

இதில் உடலுக்கு ஆற்றல் தரும் பல்வேறு நன்மைகள் உள்ளது, அதை பற்றி பார்ப்போம்.

எடை அதிகரிப்பை ஆதரிக்கிறது

ஜவ்வரிசியில் நல்ல அளவு கார்போஹைட்ரேட் மற்றும் கலோரிகள் இருப்பதால் உடல் எடையை அதிகரிக்க விரும்புவோருக்கு நல்லது. ஜவ்வரிசி மாவுச்சத்து நிறைந்த உணவாக இருப்பதால், இதன் மூலம் எளிதில் உடல் எடையை அதிகரிக்கலாம்.

இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது

ஜவ்வரிசியில் கணிசமான அளவு பொட்டாசியம் இருப்பதால் உங்கள் இரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்கும். இது இரத்த நாளங்கள் வழியாக ஆரோக்கியமான இரத்த ஓட்டத்தை ஊக்குவிக்கிறது, இதையொட்டி, இரத்த அழுத்தம் குறைக்கப்படுகிறது மற்றும் இதயத்தில் உள்ள சிரமத்தை குறைகிறது.

கசகசாவின் அற்புத நன்மைகள்

தசை வளர்ச்சிக்கு உதவுகிறது

ஜவ்வரிசி தசை வளர்ச்சிக்குத் தேவையான புரதத்தின் சிறந்த மூலமாகும். இது சேதமடைந்த செல்கள் மற்றும் திசுக்களை சரிசெய்ய உதவுகிறது மற்றும் செல்களின் வளர்ச்சிக்கும் உதவுகிறது. இது தசை வளர்ச்சிக்கு மட்டுமல்லது உடல் வலிமை பெறவும் உதவுகிறது.

செரிமானத்தை மேம்படுத்துகிறது

ஜவ்வரியில் நார்ச்சத்து அதிகம் உள்ளது . இது செரிமான ஆரோக்கியத்திற்கு பங்களிக்கிறது மற்றும் வீக்கம், மலச்சிக்கல் மற்றும் அஜீரணம் போன்ற பிரச்சினைகளை தவிர்க்க உதவுகிறது.

எலும்புகளை பலப்படுத்துகிறது

ஜவ்வரியில் கால்சியம், மெக்னீசியம் மற்றும் இரும்புச்சத்து நிறைந்துள்ளதால், எலும்புகளின் அடர்த்தியை மேம்படுத்த உதவுகிறது. மூட்டுவலி அபாயத்தைக் குறைக்கவும் உதவுகிறது. வளரும் குழந்தைகளின் உணவில் ஜவ்வரிசியை அதிகம் சேர்ப்பதால் எலும்புகளை பலப்படுத்துகிறது.

ஆற்றலை வழங்கக்கூடியது

ஜவ்வரியில் மாவுச்சத்து மற்றும் எளிய சர்க்கரைகளால் நிறைந்துள்ளது, அவை உடலில் எளிதில் வளர்சிதை மாற்றத்தை ஏற்படுத்துகிறது. அதிக அளவு குளுகோஸை உருவாக்குகிறது. விரதத்திற்கு பிறகும், உடற்பயிற்சிக்கு பிறகும் சாப்பிடுவதற்கு ஜவ்வரிசி சிறந்த உணவாகும். ஏனெனில் இது உடலை அதிக ஆற்றலுடன் வைத்திருக்கிறது மற்றும் உடல் சோர்வு, தலைச்சுற்றல், தலைவலி ஆகியவற்றைத் தடுக்கிறது.திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore