கேரட் பேஸ் மாஸ்க் | Carrot Face Mask

Updated On 17/10/2021

ஒளிரும் சருமத்தை பெற கேரட் பேஸ் மாஸ்க் (Carrot face mask for glowing skin)

இந்த பேஸ் மாஸ்க் சருமத்தின் நிறத்தை சீராக்க உதவுகிறது மற்றும் மந்தமான சருமத்திற்கு புத்துணர்ச்சியை அளிக்கிறது.

தயாரிக்கும் முறை

 • 2 கேரட்டின் தோலை உரித்து, வேகவைத்து எடுத்துக்கொள்ளுங்கள்.
 • வேகவைத்த கேரட்டை நன்கு பிசைந்து, அவை நன்கு ஆறும் வரை விடவும்.
 • பிறகு, ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறு மற்றும் இரண்டு தேக்கரண்டி தேன் எடுத்துக் கொள்ளுங்கள்.
 • பிறகு, இந்த அனைத்து பொருட்களையும் சேர்த்து கலக்கவும்.
 • அந்த கூழை உங்கள் முகத்தில் தடவி 30 நிமிடங்கள் அப்படியே வைக்கவும்.
 • பின்னர், வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவவும்.
  இப்பொழுது உங்கள் மிகவும் பிரகாசமாக இருக்கும்.

 

சருமத்திற்கு கேரட்டின் நன்மைகள்..

புத்துணர்ச்சியூட்டும் சருமத்திற்கான பேஸ் மாஸ்க்

(Face mask for refreshing skin)

உங்கள் முகம் எப்போதும் களைப்பாகவும் சோர்வாகவும் இருந்தால், இந்த பேஸ் மாஸ்க் பயன்படுத்தினால் மிகவும் புத்துணர்ச்சியாக இருக்கும்.

தயாரிக்கும் முறை

 • இரண்டு தோல் உரிக்கப்பட்ட கேரட்டை எடுத்துக்கொள்ளுங்கள், அதை நன்றாக அரைத்து எடுத்துக்கொள்ளுங்கள்.
 • அதனுடன் இரண்டு தேக்கரண்டி உருளைக்கிழங்கு மாவு மற்றும் ஒரு முட்டையின் மஞ்சள் கருவை எடுத்துக்கொள்ளுங்கள்.
 • இந்த அனைத்து பொருட்களையும் நன்றாக கலந்து உங்கள் முகத்தில் நன்கு தடவவும்.
 • 30 நிமிடங்கள் அப்படியே வைக்கவும்.
 • பிறகு வெதுவெதுப்பான நீரைப் பயன்படுத்தி கழுவவும். இறுதியாக, குளிர்ந்த நீரில் கழுவவும்.

இப்பொழுது உங்கள் முகம் மிகவும் புத்துணர்ச்சியுடன் இருக்கும். வாரத்திற்கு ஒரு முறை இதை ட்ரை செய்தால் நல்ல முன்னேற்றம் இருக்கும்.