பளபளக்கும் மற்றும் மென்மையான சருமத்திற்கு பப்பாளி ஃபேஸ் மாஸ்க்!!

Updated On 08/11/2021

மென்மையான சருமத்தை பெற பப்பாளி ஃபேஸ் மாஸ்க்

பப்பாளி சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் நம் அனைவரும் அறிந்த ஒன்று, ஆனால் அது உங்கள் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்லாது உங்கள் சரும அழகையும் பாதுகாக்கிறது. வெண்மையான ஒளிரும் மற்றும் மென்மையான தோலை பெற பப்பாளி ஃபேஸ் பேக் சிறந்த ஒன்றாகும். பப்பாளி ஃபேஸ் பேக்கின் சிறந்த விஷயம் என்னவென்றால், அவை முற்றிலும் இயற்கையானவை, எனவே அவை உங்கள் சருமத்தில் எந்த பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாது.

பளபளப்பான மற்றும் மென்மையான தோல் உங்கள் அழகை மேம்படுத்துகிறது. முகம் பொலிவு பெற என்ன சாப்பிடுவது என்ற கேள்வி அனைவர் மனதிலும் தோன்றும், இயற்கையான பழங்கள் மற்றும் காய்கறிகளை உணவில் அதிகம் சேர்த்து கொள்ள வேண்டும். பப்பாளி பயன்படுத்தி செய்யக்கூடிய சில ஃபேஸ் பேக் இங்கே பார்க்கலாம்.

பப்பாளி ஃபேஸ் பேக்கின் நன்மைகள்

பப்பாளி பழங்களின் தேவதை என்றும் அழைக்கப்படுகிறது, ஏனெனில் இது நம் ஆரோக்கியத்திற்கு பல்வேறு வழிகளில் பயன்படுகிறது. நமது உடலின் ஆரோக்கியத்தை பராமரிக்கும் வைட்டமின்கள், தாதுக்கள் போன்ற அனைத்து ஊட்டச்சத்துக்களும் இதில் உள்ளன. பழுத்த பப்பாளி வயிற்றுக்கு நன்மை பயக்கும். பழுக்காத பப்பாளி காயங்களை ஆற்றுவதற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. பச்சை பப்பாளி நாள்பட்ட தோல் புண்களை குணப்படுத்தும். பப்பாளி சருமத்தை சுத்தப்படுத்தவும் உதவுகிறது. பழுத்த பப்பாளி பெரும்பாலும் ஃபேஸ் பேக்காக பயன்படுத்தப்படுகிறது. பப்பாளி மாஸ்க் சருமத்திற்கு பல நன்மைகள் தருகிறது.

உங்களின் தோல் வகைகளுக்கு ஏற்றாற்போல் பல வகையான பப்பாளி ஃபேஸ் மாஸ்க் உள்ளது. உங்கள் சருமம் எந்த வகை என்று பார்த்து அதற்கு தகுந்தாற்போல் ஃபேஸ் மாஸ்க் பயன்படுத்தலாம்.

வறண்ட சருமத்திற்கு பப்பாளி மற்றும் தேன் ஃபேஸ் பேக்:

தேவையான பொருட்கள்:

1 தேக்கரண்டி தேன்
1/2 கப் பப்பாளி கூழ்

எப்படி செய்வது:

 • தேன் மற்றும் பப்பாளி இரண்டையும் நன்றாக பேஸ்ட் செய்யவும்.
 • இந்த பேஸ்ட்டை உங்கள் முகம் மற்றும் கழுத்து முழுவதும் தடவவும்.
 • 10-15 நிமிடங்கள் அப்படியே விடவும்.
 • உங்கள் முகத்தை குளிர்ந்த நீரில் கழுவவும்.
 • இந்த பேக்கை வாரத்திற்கு 1-2 முறை பயன்படுத்தலாம்.

எண்ணெய் சருமத்திற்கு பப்பாளி மற்றும் ஆரஞ்சு ஃபேஸ் பேக்:

தேவையான பொருட்கள்:

பழுத்த பப்பாளி கூழ்
3 தேக்கரண்டி ஆரஞ்சு சாறு

எப்படி செய்வது:

 • ஒரு கிண்ணத்தை எடுத்து, பழுத்த பப்பாளி கூழ், அதில் 3 தேக்கரண்டி ஆரஞ்சு சாறு சேர்க்கவும்.
 • இதனை நன்கு கலந்து முகம் மற்றும் கழுத்தில் தடவவும்.
 • 10-15 நிமிடங்கள் அப்படியே விடவும்.
 • பின்னர், சுத்தமான தண்ணீரில் கழுவவும்.
 • இந்த பேக்கை வாரம் இருமுறை தடவவும்.

காம்பினேஷன் சருமத்திற்கான பப்பாளி மற்றும் தக்காளி ஃபேஸ் பேக்:

காம்பினேஷன் சருமம் என்பது எண்ணெய் மற்றும் வறண்ட தன்மையுடன் காணப்படும். இந்த சருமம் உடையவர்களுக்கு சருமத்தின் சில பகுதிகள் எண்ணெய் பசையுடனும் மற்ற பகுதிகள் வறட்சியான தன்மையுடனும் காணப்படும்.

தேவையான பொருட்கள்:

1 தக்காளி
4 சிறிய துண்டு பழுத்த பப்பாளி.

எப்படி செய்வது:

 • பழுத்த பப்பாளி நான்கு துண்டு மற்றும் 1 தக்காளி கூழ் இரண்டையும் நன்றாக கலந்து பேஸ்ட் செய்யவும்.
 • இந்த பேஸ்ட்டை உங்கள் முகம் மற்றும் கழுத்தில் தடவவும்.
 • 10-15 நிமிடங்கள் அப்படியே விடவும்.
 • பின்பு, தண்ணீரில் நன்றாக கழுவவும்.
 • இந்த பேக்கை வாரத்திற்கு 2-3 முறை தடவவும்.