இயற்கை முறையில் சருமத்தை பொலிவு பெறச்செய்வது எப்படி?

Updated On

முகப்பொலிவு மாறுவதற்கு பலவகையான காரணங்கள் உண்டு, மாசுபாடு, அதிக வெய்யில், மன அழுத்தம், வாழ்க்கை முறை, உணவு முறை போன்ற பல காரணங்கள் கூறலாம். இதற்கு சில இயற்கையான வழிமுறைகளை பின்பற்றினாலே போதும். ஆனால் பெண்களில் பலர் சந்தைகளில் கிடைக்கும் ரசாயனம் நிறைந்த பொருட்களை வாங்கி உபயோகிக்கின்றனர். அப்படி தொடர்ந்து பயன்படுத்தினால் உங்கள் சருமத்தை அது சேதப்படுத்தும்.

பல விளம்பரங்களை பார்த்து அதில் வரும் நபரின் சருமம் போல நமது சருமமும் மாறிவிடும் என்று நம்புவது என்பது மிகவும் தவறு. இயற்கையான முறையை பின்பன்றினால எந்த பக்கவிளைவும் வராது. ஆனால் ரசாயனம் நிறைந்த பொருட்களை தொடர்ந்து பயன்படுத்தினால் பல சரும பிரச்சனைகள் வரும்.
சில இயற்கையான வழிமுறைகளை கீழே பார்க்கலாம்.

போதுமான அளவு தண்ணீர்

அதிக அளவு தண்ணீர் குடிப்பதால் உங்கள் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும், குறிப்பாக உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை பாதிக்கும் தீங்கு விளைவிக்கும் நச்சுகளை வெளியேற்றும். ஒரு நாளைக்கு இரண்டு லிட்டர் தண்ணீரை குடிக்க வேண்டும். சில வகையான நச்சுகள் உங்கள் மேல்தோலில் சிறிய துளைகளை அடைத்து, கரும்புள்ளிகள் மற்றும் பருக்கள் போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும். அதிக தண்ணீர் குடிப்பதன் மூலம், நீங்கள் கடுமையான பருக்கள் மற்றும் முகப்பருவால் வராமல் தவிர்க்க முடியும்.

போதுமான தூக்கம்

தூக்கத்திற்கும் சருமத்திற்கும் சம்மந்தம் உண்டு. உடலுக்கு 7 முதல் 9 மணிநேர தூக்கம் என்பது அவசியமான ஒன்று. உங்கள் உடல் ஓய்வெடுக்க நீங்கள் போதுமான நேரம் கொடுக்க வேண்டும். நீங்கள் தூங்கும்போது உங்கள் உடல் சருமத்திற்கு இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. இதனால் நீங்கள் புத்துணர்ச்சியுடனும், முகம் பொலிவுடனும் இருக்கும். ஆனால் நீங்கள் போதுமான நேரம் தூங்கவில்லை என்றால் உங்கள் முகத்தின் நிறம் மங்கலாகவும், பொலிவிழந்தும் இருக்கும்.

சரும ஈரப்பதம்

உங்கள் முகத்தில் தூசி மற்றும் அழுக்கு படியாமல் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். முகத்தை அடிக்கடி தண்ணீரால் கழுவ வேண்டும். இவ்வாறு செய்தலே பல சரும பிரட்சனைகள் வராது.
ஒரு நாளைக்கு இரண்டு முறை மாய்ஸ்சரைசர் அல்லது முக எண்ணெயைப் பயன்படுத்தி உங்கள் சருமத்தை ஈரப்படுத்த வேண்டும். இவ்வாறு ஈரப்படுத்தினால் வறண்ட சருமத்தில் இருந்து விடுபடலாம் , உங்கள் சருமம் பொலிவுடன் காட்சியளிக்கும் மற்றும் பொலிவுடனும் இருக்கும்.

ஆலிவ் எண்ணெய் மற்றும் தேன் மசாஜ்

ஆலிவ் எண்ணெய் சருமத்தை ஈரப்பதமாக்க உதவுகிறது. இது அனைத்து அசுத்தங்களையும் உறிஞ்சும், கரும்புள்ளிகள் மற்றும் வெண்புள்ளிகளுக்கு இயற்கையான தீர்வாகும்.
உங்கள் சருமத்தை பொலிவு பெறச்செய்ய தினமும் உங்கள் சருமத்தை ஆலிவ் எண்ணெய் மற்றும் தேன் பேக் கொண்டு மசாஜ் செய்யவும். 2 தேக்கரண்டி ஆலிவ் எண்ணெய் மற்றும் ஒரு தேக்கரண்டி தேன் கலந்து உங்கள் சருமத்தில் ஓரிரு நிமிடங்கள் மசாஜ் செய்யவும். உங்களுக்கு எண்ணெய் சருமம் இருந்தால் சில துளிகள் எலுமிச்சை சாறு சேர்க்கவும். சிறிது நேரம் கழித்து வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவவும். இந்த வீட்டு வைத்தியம் உங்களுக்கு அழகிய நிறத்தைக் கொடுக்கும்.

நீராவி பிடித்தல்

நீராவி பிடித்தல் முகத்தை உள்வரை சுத்தப்படுத்தும் ஒரு நல்ல முறையாகும். இது முகத்தில் உள்ள துளைகளைத் திறந்து அனைத்து அழுக்குகளையும் அழிக்கும். வெறும் தண்ணீரை மட்டும் பயன்படுத்துவதற்குப் பதிலாக, எலுமிச்சைத் தோலை நீரில் கொதிக்க வைத்து, பிறகு அந்த நீரில் ஆவி பிடித்தால் சருமத்தின் நிறத்தை அதிகரிக்கும். பின்னர் உங்கள் முகத்தை மென்மையான ஈரமான துண்டை கொண்டு துடைக்கவும்.

ரோஸ் வாட்டர்

ரோஸ் வாட்டரில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ள. இது உங்கள் நிறத்தை அதிகரிக்கும். குளிர்ந்த ரோஸ் வாட்டரை முகத்தில் தடவினால் சருமம் புத்துணர்ச்சியுடன் இருக்கும். இந்த ரோஸ் வாட்டரை எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.

கற்றாழை  சிகிச்சை

கற்றாழை ஒரு மூலிகை தாவரம். மருந்துகள் மற்றும் அழகுசாதனப் பொருட்களில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் மூலப்பொருள்களில் முக்கியமான ஒன்று கற்றாழை. பல்வேறு தோல் மற்றும் பிற உள் கோளாறுகளை குணப்படுத்த கற்றாழை ஜெல் பயன்படுத்தப்படுகிறது.

2 தேக்கரண்டி கற்றாழை ஜெல்லை 1/2 தேக்கரண்டி மஞ்சள் மற்றும் 1 தேக்கரண்டி தேனுடன் ஒரு கிண்ணத்தில் கலந்து இதை உங்கள் முகம் மற்றும் கழுத்தில் தடவவும். அதை 15 நிமிடங்கள் விட்டு, பின் குளிர்ந்த பாலில் நனைத்த காட்டன் பேட்டை பயன்படுத்தி துடைக்கவும். குளிர்ந்த நீரால் உங்கள் முகத்தை கழுவுங்கள். இந்த பேக் உங்கள் சருமத்தின் நிறத்தை அதிகரிக்கும்.திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore