நடைப்பயிற்சி செய்வதன் மூலம் பணம் சம்பாதிக்க முடியுமா?

Updated On

நடைப்பயிற்சி செய்வதற்கு பணம் தரும் ஆப்ஸ்

நமது அன்றாட வாழ்க்கையில் உடற்பயிற்சி என்பது மிகவும் அவசியம் மற்றும் உடல் ஆரோக்கியத்துக்கு தேவையான ஒன்று. ஆனால் விடியற்காலையில் எழுந்து உடற்பயிற்சி மற்றும் நடை பயிற்சி செய்வது என்பது சற்று சவாலாக உள்ளது. அதற்க்கு நமது சுறுசுறுப்பின்மையே காரணம். ஆனால் நடைப்பயிற்சி செய்தல் உங்களுக்கு பணம் கிடைக்கும் என்று சொன்னால் நாம் சுறுசுறுப்பாக, காலையில் எழுந்து உடற்பயிற்சி செய்ய ஆரம்பித்து விடுவோம்.
ஆம், இது முற்றிலும் உண்மை நாம் உடற்பயிற்சி செய்வதன் மூலம் காசு சம்பாதிக்க முடியும். அதற்க்கு சில ஆண்ட்ராய்டு அப்ளிகேஷன்ஸ் உள்ளது, அதை நாம் பயன்படுத்துவதன் மூலம் வெகுமதிகள் பெற முடியும். அவற்றை பணமாக, தள்ளுபடியாக அல்லது கூப்பன்களாக பெறமுடியும்.

கீழ் இருக்கும் அப்ளிகேஷன்களில் இருந்து ஒரு சிறிய தொகையை நீங்கள் சம்பாதிக்கலாம்.

நடப்பது அல்லது ஓடுவது போன்றவற்றின் மூலம் பணம் சம்பாதிப்பதற்கும், ஒவ்வொரு நாளும் நீங்கள் நினைக்கும் இலக்கை அடைய உங்களுக்கு உதவுவதற்கும் இந்த ஆப்ஸ் உங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.

 

Step set Go

ஸ்டெப்செட்கோ ஒவ்வொரு நடைப்பயணத்திற்குப் பிறகும் நாணயங்களை பயனாளர்களுக்கு தருகிறது. ஒவ்வொரு 1,000 அடிகளுக்கும் ஒரு நாணயத்தைப் பெற முடியும். அதை அவர்கள் இன்- ஆப் ஸ்டோரில் இலவச பொருட்கள் அல்லது தள்ளுபடியாக உபயோகிக்க முடியும். SSG பஜாரில் இருந்து நிறைய பொருட்களை வாங்க முடியும். இந்த ஆப் ஆண்ட்ராய்டு மற்றும் iOS இரண்டிலும் இலவசமாகக் கிடைக்கும்.

StepBet

StepBet, WayBetter க்கு சொந்தமான அப்ளிகேஷன் ஆகும். ஆண்ட்ராய்ட் (Android) மற்றும் ஆப்பிள் (Apple IOS) இரண்டிலும் பதிவிறக்கம் செய்ய முடியும். இது பயனர்கள் நடைபயிற்சி அல்லது ஓட்டம் மூலம் தினசரி படி இலக்குகளை அடைவதற்கு பணம் தருகிறது. உங்கள் இலக்குகளை அடையத் தவறினால், உங்கள் பணத்தை பெற முடியாது. நீங்கள் உங்கள் இலக்குகளை அடைந்தால், மற்ற வெற்றியாளர்களுடன் சேர்ந்து பணத்தைப் பிரித்துக்கொள்ள முடியும். இதில் பந்தயம் கட்டுவது போன்ற இலக்குகள் இருக்கும்.

 

Runtopia

ரன்டோபியா என்பது ஜிபிஎஸ் அடிப்படையிலான இயங்கும் செயலியாகும், இது எந்த நேரத்திலும் உங்கள் சொந்த நடைப்பயிற்சியை கண்காணிக்கவும் பகுப்பாய்வு செய்யவும் உதவுகிறது. ஓட்டம், நடைபயிற்சி மற்றும் சைக்கிள் ஓட்டுதல் ஆகியவற்றுக்கான உடற்பயிற்சி இலக்குகளை அமைக்க உதவுகிறது. மேலும் உங்கள் உடற்பயிற்சிகளின் போது ஆடியோ மூலம் பயிற்சியாளரை இணைக்க முடியும். சமூக நிகழ்வுகள், சவால்கள் மற்றும் ஆன்லைன் பந்தயங்களில் சேரும் அமைப்பு உள்ளது. அனைத்து ஓட்டப்பந்தய வீரர்களுக்கும் ஏற்றவாறு பல்வேறு நிலைகளில் ஆன்லைன் ஓட்ட நிகழ்வுகள் உள்ளன, 5K, 10K இலிருந்து முழு மராத்தான் வரை தேர்வு செய்யதுகொள்ளலாம்.

 

Sweatcoin

 

ஸ்வெட்காயின் தனித்துவமானது, ஏனெனில் அது வெளியில் நடப்பதற்கு மட்டுமே பணம் தருகிறது . இதன் பொருள் நீங்கள் வேலைக்கு செல்லும் இடங்கள் மற்றும் உங்கள் வீட்டைச் சுற்றி நடப்பது கணக்கிடப்படாது. Sweatcoin என்பது பணம் சம்பாதிக்கும் அதே வேளையில் உடல் எடையைக் குறைப்பதற்கான ஒரு வழியாகும். Sweatcoin லாபம் ஈட்டுவதற்கான ஒரு உந்துதல், நாம் வழக்கமாக நடப்பதை விட அதிகமாக நடக்க ஊக்குவிக்கும், பணம் சம்பாதித்து கொண்டே உடல் எடையையும் குறைக்க முடியும். இந்த அப்ளிகேஷன் உங்கள் ஸ்மார்ட்போனில், ஆண்ட்ராய்டு(Android) மற்றும் ஐபோன்(Apple IOS) இரண்டிலும் பதிவிறக்கம் செய்யமுடியும். இப்போது , உங்கள் ஸ்மார்ட்வாட்சிலும் Sweatcoin ஆப்-ஐப் பயன்படுத்தலாம்.

 

StepCoin

StepCoin என்பது இந்தியாவின் உடற்பயிற்சி சார்ந்த அப்ளிகேஷன். உங்கள் உடற்பயிற்சியின் அடிப்படையில் நாணயங்களைப் பெற முடியும். முக்கியமாக நடைபயிற்சி, ஓடுதல் மற்றும் அப்ளிகேஷனை நண்பர்களுக்கு பகிர்தல் போன்ற முறையில் பணம் பெற முடியும். இந்த நாணயங்களை எதாவுது பொருட்கள் வாங்கும் போது தள்ளுபடி கூப்பன்களாக உபயோகிக்கலாம் அல்லது இலவச பொருட்களை பெறலாம். 1000 படிகள் நடந்தால் 1 நாணயம் பெற முடியும்.
இந்த அப்ளிகேஷனை உபயோகிப்பதால் உங்களை நீங்கள் ஆரோக்கியமாக வைத்துக்கொள்வது மட்டுமல்லாது சில வெகுமதிகளையும் பெற முடியும்.திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore