மாம்பழம் சாப்பிட்டவுடன் இதை எல்லாம் சாப்பிட கூடாதாம்

Updated On

மாம்பழம் சாப்பிட்ட பிறகு நீங்கள் சாப்பிடக்கூடாத 5 உணவுப் பொருட்கள்

5 Food Items you should never consume after eating Mangoes

கோடைகாலம் என்றால், உடனே அனல் பறக்கும் வெயிலையும் தாண்டி நம் நினைவுக்கு வருவது மாம்பழம். மாம்பழம் பிடிக்காதவர்கள் என யாரும் இருக்க முடியாது. இந்தியாவில் அதிக அளவில் மாம்பழம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. அதிலும், மல்கோவா மாம்பழங்களின் சுவைக்கு ஈடு இணை இல்லை.

மாம்பழங்கள் பழமாக சாப்பிடுவதோடு, குளிர் பானங்களாகவும், மில்க் ஷேக் ஜூஸ் என பிற வழிகளிலும் சாப்பிடும் பழக்கம் உள்ளது. மாம்பழம் சாப்பிடுவதால் பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளன, ஆனால் மாம்பழத்தை சில உணவுப் பொருட்களுடன் சேர்த்து சாப்பிடுவது, நமது உடல் ஆரோக்கியத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பது உங்களுக்குத் தெரியுமா? அதை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

இப்போது மாம்பழங்களுடன் சேர்ந்து உண்ணக்கூடாத 5 உணவுப் பொருட்களை பற்றி அறிந்து கொள்ளலாம்

தண்ணீர்

மாம்பழம் சாப்பிட்ட உடனே தண்ணீரை அருந்துவதைத் தவிர்க்க வேண்டும். மாம்பழங்களை உட்கொண்ட உடனேயே தண்ணீரைப் பருகுவது எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். இதனால் வயிற்று வலி, அமிலத்தன்மை ஆகியவை ஏற்படலாம். மாம்பழம் சாப்பிட்ட அரை மணி நேரத்திற்குப் பிறகு நீங்கள் தண்ணீரைப் பருகலாம்.

தயிர்

நறுக்கிய மாம்பழங்களுடன் தயிர் ஒரு கிண்ணம் சாப்பிடும் பழக்கம் சிலருக்கு உள்ளது. இருப்பினும், சூட்டை தரும் மாம்பழத்துடன், குளிர்ச்சியை ஏற்படுத்தும் தயிரை உட்கொள்வதால், தோல் பிரச்சினைகள், உடலில் நச்சுகள் சேருதல், ஆகியவற்றுக்கு வழிவகுக்கும் என்பதால் இதை நீங்கள் தவிர்க்க வேண்டும்.

குளிர் பானம் 

குளிர்ந்த பானங்களுடன் மாம்பழம் சாப்பிடுவதும் தீங்கு விளைவிக்கும். மாம்பழத்தில் சர்க்கரை அதிகம் உள்ளது. குளிர் பானங்களிலும் சர்க்கரை அதிகம் உள்ளது. இதனால் நீரிழிவு நோயாளிகளுக்கு இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும்.

கசப்பு

மாம்பழம் சாப்பிட்ட உடனேயே கசப்பான உணவுகளை தவிர்க்க வேண்டும். உதாரணமாக, பாகற்காய் போன்ற கசப்பான உணவுகளை சாப்பிட கூடாது. இதனால், குமட்டல், வாந்தி மற்றும் சுவாசிப்பதில் சிக்கல் ஏற்படலாம்.

காரமான உணவு

மாம்பழம் சாப்பிட்ட பிறகு காரமான அல்லது மிளகாய் அதிகம் உள்ள உணவை உட்கொள்வது வயிற்று பிரச்சினைகளை ஏற்படுத்தும் மற்றும் உங்கள் சருமத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். இது முகப்பரு ஏற்படவும் வழிவகுக்கும்.திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore