உங்கள் ஆதார் அட்டையின் புகைப்படத்தை மாற்ற வேண்டுமா?? இதை பின்பற்றி எளிமையாக மாற்றலாம்..
Aadhar Card Photo Change online in tamil
இந்தியர்களுக்கு ஆதார் அட்டை மிக முக்கியமான ஆவணமாக மாறியுள்ளது. அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் வழங்கும் பல சேவைகளைப் பெற 12 இலக்க ஆதார் எண் தேவை. சாதாரணமாகவே ஆதார் அட்டையில் உள்ள புகைப்படம் சற்று வித்தியாசமாக இருக்கும். நாம் பல ஆண்டுகளுக்கு முன்பு ஆதார் அட்டை பெற்றிருப்போம், அதனால் நம் புகைப்படம் முற்றிலுமாக மாறியிருக்கும். ஆனால் சில எளிய வழிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் ஆதார் அட்டையில் உள்ள புகைப்படத்தை (aadhar card correction online) எளிதாக மாற்றலாம் என்பது நல்ல செய்தி.
மேலும் அறிய: Current Bill-யை பாதியாக குறைப்பது எப்படி?
இந்தியாவின் தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI), ஆதார் அட்டையை வழங்கும் நிறுவனம். யுஐடிஏஐ(UIDAI) இணையதளம் மூலம் ஆதார் கார்டில் போட்டோ மாற்றுவது எப்படி என்பதை தெரிந்துகொள்ள கீழே உள்ள வழிமுறைகளை பின்பற்றுங்கள்.
How to change Photo in Aadhaar card in tamil |
ஆதாரில் போட்டோ மாற்றுவது எப்படி?
- அருகிலுள்ள ஆதார் பதிவு மையம் அல்லது ஆதார் இணைய சேவை மையத்திற்கு (Aadhar Seva Kendra) செல்லவும்.
- UIDAI இன் இணையதளத்தில் இருந்து ஆதார் பதிவு/திருத்தம்/புதுப்பிப்பு படிவத்தைப் (aadhar card correction form online) பதிவிறக்கவும். இணையதள முகவரி https://ssup.uidai.gov.in/ssup/.
- புதுப்பிக்க வேண்டிய ஆப்ஷனை தேர்ந்தெடுக்கவும். ஒரு புகைப்படத்துடன், ஒருவர் தங்கள் பெயர், முகவரி அல்லது வேறு எந்த விவரங்களையும் புதுப்பிக்கலாம்.
- தேர்ந்தெடுக்கப்பட்ட form-யை நிரப்பி, மையத்தில் இருக்கும் நிர்வாகியிடம் சமர்ப்பிக்கவும்.பின்னர் கருவிழி, கைரேகை மற்றும் முக புகைப்படம் போன்ற உங்களின் பயோமெட்ரிக் விவரங்கள் கேட்கப்படும்.
- விவரங்களைப் புதுப்பிக்க, மையத்தில் ₹100 கட்டணம் (aadhar photo update charges) செலுத்த வேண்டும்.
- படிவத்தை வெற்றிகரமாக சமர்ப்பித்த பிறகு, புதுப்பிப்பு கோரிக்கை எண் (URN) இருக்கும் ஒப்புகை சீட்டு உங்களுக்கு வழங்கப்படும்.
- புதுப்பிப்பு நிலையைச் சரிபார்க்க நீங்கள் URN ஐப் பயன்படுத்தலாம். ஒரு வாரத்திற்குள் உங்கள் புதிய ஆதார் அட்டையை வீட்டிலேயே பெறுவீர்கள்.
- இதை UIDAI போர்டல் மூலமாகவும் பதிவிறக்கம் (Aadhar Card Download) செய்யலாம். இணைப்பு: https://uidai.gov.in/my-aadhaar/get-aadhaar.html
ஆதார் அட்டையில் புகைப்படத்தைப் புதுப்பிக்கும் போது கவனிக்க வேண்டிய முக்கிய குறிப்புகள்:
1) உங்கள் ஆதார் அட்டையில் புகைப்படங்களை மாற்ற எந்த ஆவணமும் தேவையில்லை.
2) வெப்கேமைப் பயன்படுத்தி நிர்வாகி புகைப்படத்தை அந்த இடத்திலேயே கிளிக் செய்வதால் நீங்கள் புகைப்படத்தை சமர்ப்பிக்க வேண்டியதில்லை.
3) ஆதாரில் விவரங்களைப் புதுப்பிக்க 90 நாட்கள் வரை ஆகலாம்
4) வழங்கப்பட்ட URN ஐப் பயன்படுத்தி ஆன்லைனில் ஆதார் புதுப்பிப்பு நிலையை நீங்கள் சரிபார்க்கலாம்
மேலும் அறிய: நடைப்பயிற்சி செய்வதன் மூலம் பணம் சம்பாதிக்க முடியுமா?